புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம்.


காப்பு.

கட்டளைக் கலித்துறை. 

மறைப்பாற் கடலிற் றிருக்கன்னிச் சங்கு மகிழ்ந்தளித்த
இறைப்பாற் கடலிற் றிருமுத்தம் பூண்டு விசைத் தமிழ்ப்பாத
துறைட்பாற் கடலிற் புனைந்தன னெ ண் ணீர்த் துறையவற்கே
நறைப்பாற் கடலிற் கலம்பக விக்நூல் நலம் பெறவே.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

எட்டடித்தரவுகள், 2. 

1. வான் தளங்கள் பணிகேட்ப வானரசர் புடைகாப்ப
2  மீன் றளங்க ளென வடியார் வேதியரோ டடிபணிய
3. யாவருல குள்ள வர்தா மார்ந் துறையக் காதலிக்கும்
4. தேவருல குள்ளவர்தாஞ் சேர்ந்துறையும் எண்ணூரில்
5. மாபுரவி வெங்கதிரோன் வழிவிலக்க மின்னிமைக்குங்
6. கோபுரவி சாலவெயில் கூடியசீர்ப் பொற்கோயில்
7. வான்பூத்த மறைப்பயனை மண்ணுலகோர் மறந்தமையான்
8. தேன்பூத்த மலர்க்கொடிக்கீழ்த் திருமகனை யேந்திநின்றோய்
9. மன்னர் தொழுஞ் சேவடியான் மாமலர்க்கை யாற்றழுவத்
10, தென்னர்குலக் கன்னிகையாள் திருமடியி லுயிர் துறந்தோய்
11. முன்னிருவர் புரிவினையான் மூடிய திவ் வுலகமெனப்
12, பன்னிருநல் லாண்டினிலே பருப்பதத்தின் மிசையிவர்ந்தோய்
13. காட்டிலுறை மெய்த்தவத்தைக் கண்டுணர்ந்தோர் வானவனான்
14. நாட்டிலுறை மன்பதைக்கும் நல்கிநெறி சேர்த்துவந்தோய்
15. இல்லறமும் துறவறமு மீரறமாத் தோன்றாமே
16. நல்லறத்துக் கன்னியொடு நானிலத்து வாழ்ந்தோய் கேள்.
17. வேத வடி வாய்வந்த வித்தகனீ யென்றாலோ
18. போ தவடி வா முனது புகழினுக்கோ ரள வாமோ?
19. கர்ரிகையோ டேயலைந்து கானகத்து ளோருமுழைப்பால்
20. சேரினு நின் றேசினுக்குத் தினையளவும் குறைவாமோ?
21. மன்னனெரோ தனுக்கஞ்சி மகனையெடுத் தெளித்துநகர்
22, துன் னினை நீயெனிலுனது துகளில் வலி பழு தாமோ?
23. கோல்மலர்ந்த செயல் கண்டு கொற்றவர் வாழ்த்தினரென் னின்
24. வேல்மலர்ந்த நின் வாசத்தின் விளைவினுக்கோர் வரம்பாமோ?
25. சேயென வேழ் மதிப்பிறவித் தீங்ககலச் செனித்தமையும்
26. தாயென் வாய திருமடந்தை தாங்கியதும் பொய்யாமோ?
27. கூ பா த மெனப்பதட்டும் . அப் குரு பரம னின்னாமா
28. சேப்பாத மாலையெனச் சேர்த்தியதும் மாறாமோ?

ஈரடி அராகங்கள், 4.

20. எவரெவ ரிமையவு ரெ வாவர் மறையவர்
30. அவரவர் தொழ வரு மருமறை யருளினை
31. அடிநடு முடிவில வருள் பர கதி தரப்
32. பம்பின காகனனப் பரமனை நடவினை
33. உடுபதி யடிமிசை யொளிவிட வருணனை
34. மடிமிசை யுடு கனி மனை யென வுடை யினை
35. அளவில வினைபுரி யலகையி னிலைய றக்
36 களவினை யுள் வினைக் க ரவினைக் கழுவலை

பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள், 4.

37. பாடுவார் பாடுவதும் பரம்பொருளான திருப்புகழே
38. சூடுவார் சூடுவதன் றுனை யடியே யா மன்றோ ?
39. ஓர் கரததிற் றிருமக னு மோர்காத்தின் மலர்க்கோ லும்
40. சேர்வரத்தின் றிருவழகைச் செப்பவொரு வசமாமோ?
41. கருணை மடை திறந்தனைய கண் ணுடையா யென்பாது
42. தருணமறிந் தருள்புரியும் தடையினுக்கோர் சார்பாமோ?
43, வண்டு படு மலர்புடைய மானவ ரும் வான வருங்
44. கண்டுபணி யடியையெனிற் காட்சியருட் கிலக்க மோ?

நாற்சீர் ஈரடி அம்போதரங்கம், 2. 

45. தருமமும் தான முந் தவமும் ஞான மும்
46. அருமையும் பெருமையும் அறமும் மேயினை
47. வஞ்சமும் நஞ்சமும் வாழ்வு மில்லதாய்த்
48 தஞ்சமுங் கருணையும் தாயு மாயினை.

முச்சீர் ஓரடி அம்போதரங்கம், 4. 

49. வன நிலை சிகர மடுத்தனை
50. மருமலர் விருது பிடித்தனை
51. கனைகட லுலகை வெறுத்தனை
52. கதி தரு மறையை விரித்தனை

இருசீர் ஓரடி அம்போதரங்கம், 8. 

53. மண்ணை வென் றனை
54. பெண்ணை வன் றனை
55. மறந்து தந்தனை
56. அறஞ்சி றந்தனை
57. அன்பு காட்டினை
58. இன்ப கரீட்டினை
59. அருமை யாயினை
60. உரிமை மேயினை