புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - மறம்

எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

வாய்மைநெறி யறியாத தூத! வோலை
வல்லிரும்பிச் செல்லரித்த வடிவு காட்டித்
தூய்மைநெறி யெண்ணூரார் திருமலர்த்தாள்
தொழுமறவர் குலக்கொடியைத் துணிந்து கேட்டாய்
ஆய்மயிலை முன்வேட்ட அரசரெல்லாம்
ஆங்காங்கு படும்பாட்டை யறியாய் போலும்
சேய்மைநெறி போய் முடியுங் குடைவில் வேல்வாள்
செங்கோலும் பெருங் கொடியுஞ் சிதறக் காண்பாய்,

இதுவுமது.

காணரிய திருமுகத்தைக் காட்டுந் தூதா!
காவலருங் காலாளும் தொண்டரானார்
தோணரிய புரவியெங்க ளூர் தியாச்சு
தோலினத்தின் கொம்பரெலா மஞ்சமாச்சு
நாணிபெறு சிலைவாள்வேல் வேலியாச்சு
களிர்கவிகை தேருருளை படலதாச்சு
பேணியினி எண்ணூ ரா ரடிபணிந்து
பேசாமற் றிரும்புகாரின் பதிசேர் வாயே.