புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வலைச்சியார்

மடக்கு-தாழிசை,

சேலை கொண்டு விற்க வந்த சேலை கொண்ட, மா தரீர்!
செங்கலங்கல் செங்கயற்குச் சேலினங்கள் தோற்றவால்
மாலை கொண்ட எங்க ளெண் ணுர் மாலை கொண்ட வள்ளலார்
வந்திறைஞ்சு மைந்தருக்கு வந்த துன்ப மாறவே
பாலை கொண்ட வஞ்சர் நெஞ்சம் பாலை கொண்டிடாமலே
பத்திநேச முத்திவாசப் பான்மை யெல்லாம் வீறவே
நூலை கொண்ட சத்யவேத நூலைகொண்டு தோற்றுவார்
நொய்தி னெய் தி யுய்யவேண்டி நுண்ணிதாக அண்மினே.

கட்டளைக் கலித்துறை,

அடுக்குஞ் சுவையொளி யூறோசை நாற்றமென் றைம்பகைவர்
கெடுக்குஞ் சமயத் தவனன்றி யில்லையக் கேட்டையெலாம்
தடுக்கும் பதந் தரு வானுய ரெண்ணூர்த் தலத் திறையோன்
கொடுக்கும் தன தரு ளேயரு ளாமென்று கொண்டுய்ம்மினே.