புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - இல்லறத்தின் இதய ஒலி

எப்பொழுதும் கன்னிகையும் சர்வேசுரனுடைய மாதாவுமாயிருக்கிற பரிசுத்த மரியே! இதோ, இன்றைக்கு எங்களுடைய இராக்கினியும் எங்களுடைய பாதுகாவலியும் எங்கள் பரிந்துரையாளருமாய் உம்மைத் தெரிந்து கொள்கிறோம்; 

உம்மை ஒருபோதும் நாங்கள் மறுதலிப்பதில்லை யென்றும் உமக்கு வருத்தம் தரும் வார்த்தையொன்றும் சொல்வதுமில்லை யென்றும், அத்தகைய கிரிகையொன்றுஞ் செய்வதில்லை என்றும், உம்முடைய மகிமைக்குப் பங்கம் எவராலும் வருவிக்க மாட்டோமென்றும் உறுதியான தீர்மானஞ் செய்கிறோம். 

எங்களுடைய அந்தஸ்தின் கற்பை நாங்கள் காப்பாற்றுவதிலும், எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உமது வல்லபமுள்ள பரிந்துரையினால் பிரமாணிக்கமுள்ளவர்களா யிருப்போமென்று வாக்களிக்கின்றோம்.

ஓ...பரிசுத்த அடைக்கல அன்னையே! உமது பரிந்துரையினாலே சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்து அருளும் பிள்ளைகளை நாங்கள் தேவ பயபக்தியில் வளர்ப்போமென்று உமக்கு முன்பாக உறுதியான தீர்மானம் செய்கிறோம்.

நாங்கள் உமது ஊழியத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் படியாக எங்கள் எல்லாச் செயல்களிலும் உதவி புரிய வேண்டுமென்றும், சிறப்பாக எங்கள் மரணநேரத்தில் எங்களைக் கைவிடாதேயுமென்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்