புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எண்சீர் விருத்தம்

அந்தரர்க ளேத்திதுதி யமையவருள் மன்னு
   மரியதிரி யேகத்வ வமலன்பதம் வாழி
சுந்தரமார் கன்னிமலர்க் கொடிகொள் முனிசூசை
   சுகிர்தமிகும் பரமன்வா னவர்கள் தினம் வாழி
சந்தகமு மூப்பர்டே விட்பிரான்ஸீஸ் வாழி
   தலைவர்நா கப்பன்C. ஜோசேப்பு வாழி
விந்தையு றும் அருட்சத்ய வித்வசங்கம் வாழி
   வித்வசிரோ மணிவேத நாயகன்பா வாழி.
நன்மரண வறிக்கை. 


மேற்குறித்த சங்கத்தில் 3-வருடம் 6 மாதமளவும் ஆதரணைத் தலைவரா யாவராலும் புகழ்பெற நடந்தவரும் அர்ச். மோந்துமரி அம்மனின் சித்திரசப் பரமியற்றி இரண்டு வருடம் பக்தி வினயத்துடன் பாமாலைப் பாடிப் பிரசுரித் துற்சவங் கொண்டாடினவருமாகிய அன்பர் K. B. மைக்கல் என்பவர் ஒரு மாதமளவுங் கடின சுரத்தாற் பீடிக்கப்பட்டு பல்லவுஷதங்கள் பிரயோகித்தும் பயன்படாதீற்றில் தனது ஆத்மவை தியரைக் கொண்டு தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று 192 மார்ச்சு . மீ 15 சுக்ரவாரம் கங்குல் 12-மணிக்கு சேசுமரி சூசையென்றுச் சரித்துப் பரமானந்தன் பதமடைந்தார். சனிவாரம் மாலை 4-மணிக்கு திருசபையினாசாரத்துடன் சங்கத்தார் பிரிவாற்ற சஞ்சலப்பா பாடி பூஸ்தாபனஞ் செய்தனர். இதைக்கண்ணோக்கு மன்பர்கா ளிவரினாத்தும இளைப்பாற்றிற்காக ஒரு பர பிரி திரி வேண்டுவோமாக.

அ ச வே வா வி சங்கத்தார்.
வந்தனம்.