புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவாங்கு (தனிச்சொல்)

பதினான்கடி நிலமண்டில ஆசிரியச் சுரிதகம். 

61. மலர் தலை ஞாலத்து மக்கட் பாப்பில்
62, உயர்மா தவத்தோர்க் குயர்மா தவத்தோய்
63. வாழி வாழியுன் மைந்தன் வாழி
64. சூழுயர் வரத்தின் துணை வியாள் வாழி
65. ஏழுயர் வரத்துன் னிணையடி வாழி
66. மறையே திரண்டவுன் வடிவம் வாழி
67. அடியேன் வேண்ட லறைகுவ லொன்றே
68. பன்னாட் புரிந்த பவமெலாந் துடைத்து
69. ஐம்புல நுகர்ச்சி யடங்குங் காலை
70 சேசு மா மரி சூசையென் றோத
71. உன் பெருந் துணைவி யொருமக வோடும்
72, நீவர வேண்டும் நிழல் தர வேண்டும்
73. ஆருயிர் பதைத்துச் சோர்வுறா வண்ணம்
74. அடைக்கல கனிதந் தருண்மதி யெனக்கே.

நேரிசை வெண்பா 

எனக்கே பெருங்கருணை செய்வா னெழுந்தான்
றனக்கே யடிமை தமியேன்-மனக்கேழ்
திருவரங் கொ ளெண்ணூர் திருவடியான் யார்க்குந்
தருவரங்கொ ளெண்ணூர்த் தலம்.

கட்டளைக் கலித்துறை. 

தலமார்ப் பொருடொறு முள்ளும் புறத்துந் தனித்தியங்கும்
புலமார்ப் பொருளுரு வாகிய ஞான் றலாப் பூங்கொடிக்கீழ்
வலமாப் புரந்தனன் யாரெனி லென்னுயிர் வாழ்விக்கவே
நலமாக் கிளருமெண் ணூர்வளர் சூசையென் னாமத்தனே.

அறுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். 

நாவினிக்கத் தமிழ்பாடிப் புல்லர்களைக் கொண்டாடும் நாவலோர்காள்!
தேவினிக்கச் சிறப்புறுமோ? நாகல்லால் மதுகரங்கள் தெவிட்டிப் பாடும்
பூவினிக்கப் பொழிலெண் ணூர் புறந்தளிப்பான் திருவடிக்கே புகழ்மின் சாலப்
பாவினிக்கச் செவியினிக்கு முள்மினிக்கும் சற்கதிவான் பலித்ததாமால்,

எழுசீரா சிரிய விருத்தம். 

படிகோடியாக வினையான் மெலிந்து படர்கோடி நின்ற பரிசால்
இடிகோடியாக விடுமாரி பெய்த இயலா ன ழித்த விறையோன்
மிடிகோடி யாக புருவாகி வந்து விளை யாடு மார்பி னெழிலான்
கடி கோடி யாக முகமா ற வெண்ணூர் கனிவாயுறைந்த னன ரோ.

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். 

உலையிருந்த சிலைத்தழும்பி னுயர்தோள் வேந்தன்
உப்பரிகை யானவளை யொளிர்ந்த வெய்யோன்
கலையிருந்த வுடையாளை யென து தாயைக்
காதலித்த காதலனைக் கருது மெண்ணூர்
நிலையிருந்த மா தவளை யெந்த நாளும்
நினையாத புகழாத நிலை தாழாத
தலையிருந்தேன்? மனமிருந்தேன்? தனிநா வென்னோ?
தரிக்குமுயி ரில்லாத சடலமா மால்.