இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அளவிறந்த தயாளம்!

இராகம்: சுருட்டி தாளம்: ஆதி.

பல்லவி

ஓ! மனோகர சேம சேகர உன்னத தெய்வீகமே!
அனுபல்லவி
பூ மனுவோரை நீதலந்தன்னில் 
புரந்தருள் அளவிறந்த தயாளமே

சரணம்

1.
ஞான பாசுர நாத அகோசர நவரச சங்கீதமே--சுயம்
பான பராபர மோன அலங்கிர்த கானந்திகழ் நவமே
வான மார்பல லோக சராசரம்
வந்தித்து ஏற்றிடும் தந்தை மகேசுர -- ஓ!

2.
நேச ஊற்றான கருணையின் சாகர நித்தியர் அன்பகமே -- எங்கள்
பாசம் போக்கிடவே பாரினிலே பலி
பயன்ற திருவுளமே
ஆசையாய் உமதாருயிரைத் தந்த
அன்பர் எம்மேசு இன்ப தயாபர--ஓ

3.
ஜீவிய அமுதமாம் தேவ மன்னாவை
நிலம் பொழி மறைமுகிலே—அந்த
ஓவிய அமுதில் உமதுடல் உதிரம்
உளதெலாம் தரும் பொழிலே
பூவிலே எம்மைப் புனிதர்களாக்கிட
போஜனமாய் வந்த ராஜ சர்வேசுரா--ஓ! 

4.
சாந்த சொரூப தவநெறி போதக
சற்குரு ரஞ்சிதமே—துன்பம்
நேர்ந்தவர் அணுகி ஆறுதல் அடைய
நினைந்தழைப்பீர் நிதமே
சோர்ந்தயர்ந்த எம் மனக்குறை தீர்த்திடும்
தூய முனீந்திர ஆயர்குணமாம்பர--ஓ!