புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவதோத்திர சங்கீதக் கீர்த்தனம் என்ற நூலிலிருந்து ஒரு கீர்த்தனம்

என் முகத்தைப் பார்த்திங் கெனக்குக் கிருபை செய்ய 

உன்முகத்தை யல்லாற்பின் ஓர்முகத்தைக் காணேனே 

நன்முகத்தைக் காட்டி நமஸ்கரிக்கும் ஆன்மாக்கள் 

தன்முகத்தை நோக்குஞ் சாவேசன் மாதாவே. 


புலவர் அந்தோனி குட்டி அண்ணாவியார் 1882-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேவதோத்திர சங்கீதக் கீர்த்தனம் என்ற நூலிலிருந்து ஒரு கீர்த்தனம் 

இராகம்-ஆனந்த பைரவி ஆதிதாளம்

பல்லவி 

திருக்காவல் செய்அன்னை - செய்தி கேளன்றோ - யான் 
சொல்லக்கேளன்றோ!

அநுபல்லவி 

மருக்கா நிழற்றயாப - மலி அடைக்கலத் தாயாம் (திருக்காவ) 

சரணங்கள் 

தாவீதினத்தொரு மாது- இனிய 
தயை மிக இங்கொருபோது 
மேவினளாம் ஒரு தீது-சென்ம 
வினை இவட்கே அணுகாது நிறையோர் 

ஓவிய வடிவினள்- இளமையிலுணர்வினள் 
உலகுயிர் வருகென்று-அறையோர் 
தீவிய மொழியினள்-கருணைய விழியினள் 
திருமணமிடை நொந்து-இறையோர் 
எவிய வனமொடு- வளனறைக் கொடியிடை 

எய்தினளிடரென்று-மறையோர் 
ஆவிய வரு நிலை அறி நலமொரு குடை 
அணியென அணுகின்று-ஆசீலி 
அவனிக்கனுகூலி - அருள் செய் பரிபாலி 
அவியா ஒளிர் மாலி-அவளா மன்றோ . (திருக்) 

மீனணிந்தாள் முடி மீதில்- திகழ் 
விதி அணிந்தாள் அடிப்போ தில் 
பானணிந்தாள் உடைகே தில்-மிகு 
பரிவணிந்தாள் புரி பாதில் என்றுங்

கானக மணி புவி-சிறை அற வருமுரு 
கறை அற ஒரு கன்னி-நின்று 
தேனக முகையென - நிலமனை உமிழினள் 
சிறிதொரு குகை துன்னி-அன்று 
வானக முள தள-மணி அணி பணிதர 
மகிழுவள் மகனுன்னி-குன்று 
நூனக மிகுவெகு - வரையறையில நல 
னுகருவளுரை முன்னி-ஆ வேதி

ஆதி உறையுஞ் சோதி-ஆவிதெளியும் ஓதி 
அரிய மோட்ச வீதி.அவளா மன்றோ ........(திருக்)

சீரளவோ ஒரு வேலை - என்றும் 
செய்தயையோ ஒரு சோலை 
ஈரறமோ ஒரு மாலை - அருள் 
ஈகையதோ ஒரு சாலை

எங்கும் 

சாரெனப் பயனிறை-மொழியினு மிடிகெடக் 
கரை அற அருணெஞ்சம் பொங்கும் 
நீரென ஒளியுளி - குளிருற வினையுறு
நிரவிய இவள் தஞ்சந் - தங்கும் 
பாரிடை நவைவளர்- வினையொடுபகை

பசி பினி படை பஞ்சங் - குங்கும் 
நேரியை அருளிடும் - அலகையை நெகிழ்வன 
நிலை தரு நிறை புஞ்சம்- அறவீரி 
அருள் பொழிந்த மாரி - அன்பு நிறைந்த வாரி 
அமலனீன்ற நாரி - அவளாமன்றோ ...... (திருக்)


ஆரடா பேயே நீ அஞ்சாமல் என்னுடனே 
போரடா செய்யப் புறப்பட்டாய் - வீரப் 
படைக்கலமாக் கொண்டேன் நான்
பண்டு ( உ)னைத் தேய்த்து
அடைக்கலமா தாசீர் அடி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை


விலை 2 ரூபாய் வீரமாமுனிவர் மின் அச்சகம் ஏலாக்குறிச்சி