புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பக்தர்களின் பரவச பிரார்த்தனை

பரிசுத்த கன்னிகையே! இதோ உமது திருவடிகளைப் பணிந்து உமது திருக் குமாரனுக்கும் உமக்கும் நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகிறோம்; எங்கள் ஆத்தும நன்மைக்காகவும், சரீர நன்மைக்காகவும் நாங்கள் அறிந்தும் அறியாமலும் உமது வழியாய் அடைந்த உபகாரங்களுக்காகவும் உமக்குப் புகழ்ச்சியும் நன்றியும் செலுத்துகிறோம். 

ஓ பரிசுத்த கன்னிகையே! பச்சிளங் குழந்தைகளைக் காப்பாற்றும்; கல்வி கற்கும் சிறுவர்களையும், தேவ ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட வாலிபர்களையும் காப்பாற்றும்; ஆத்தும தொண்டு புரியும் குருக்களையும், துறவிகளையும் ஆதரியும். வியாதிக்காரருக்கு ஆறுதலகவும், வயோதிகருக்கு ஊன்று கோலாகவும், மரண அவஸ்தையிலிருப்பவர்களுக்கு தஞ்சமாகவும் இரும். அனாதைகளுக்கு அன்னையாகவும் விதவைகளுக்கு அடைக்கலமாகவும் இரும்.

விசுவாசத்தில் தளராமலும், சோதனைகளில் தத்தளியாமலும் பரிசுத்த கற்பில் உறுதியுள்ளவர்களாகவும் எங்களைக் காப்பாற்றும். பிறரன்பிலும், சமாதானத்திலும் அன்னியோன்னிய நம்பிக்கையிலும் எங்கள் இதயங்களை இணைத்துக் காப்பாற்றும், ஆமென்.