புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - ஊசல்

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்.

எழுத் தசைசீர் பந்தமெனுந் தம்பம் காட்டி
இசைந்த அடி தொடைவிகற்ப விட்டங் கூட்டி
வழுத்தரு வெண் பாவாலாம் பலகை சேர்த்து
வஞ்சி கலித் துறை விருத்தக் குஞ்சந் தூக்கிப்
பழுத்த தமிழ்க் கலம்பகமாம் ஊசல் மீது
பனுவல் வடி வாய்வந்தோய் ஆடீரூசல்.


இதுவு மது.

ஆனவர்க ளிருமருங்கும் வடந்தொட் டாட்ட
அமரர்மலர் வாய்புதைத் துன் னேவல் கேட்ப
மான வர்க ள டிபணிந்து ன் வ ச ங்கள் வேண்ட
மறையவரும் மன்னவரும் வாழ்த்து கூறத்
தேன மரும் பூங்கொடியி னிழலிருந்து
தெய்வகன்னி மகனுடனே ஆடீ ரூசல்
கான மரும் பொழில்வயல் சூழ் எண்ணூர் மேவுங்
காவலனே! தேவியுடன் ஆடீரூசல்.