இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - மயில் பயிற்றல்

எழுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தம்.

பருந்தினஞ் சுழலும் பிணங்கமழ் வைவேல்
பார்த்திடர் குலத்தனெண ஹரன்
அருந்தமிழ்க் கிரங்கும் அருந்தவன் மேனள்
அமலனை வளர்த்தமை பொருட்டுத்
திருந்திய மோலி பரமனே கவிக்கச்
சிறந்தன னாதனத் தென்னில்
அரும்பெறல் மயில்காள்! தோகையைப் பரப்பி
ஆடுமின் அவன் வர வென்றே .

இதுவுமது.

வரமெலாந் தொகையாப் படைத்த காரணத்தால்
வௗனெனும் பெயர்கொளெண்ணூரன்
வரமொருவேழுந் தன் விருப்பாக
வழங்கிடத் தனிவரம் பெற்றோன்
வரமெலா மடியார்க் கருள் செய விரங்கி
வந்தனன் இங்கே ரென்னில்
அரவழி மயில்காள்! தோகையைப் பரப்பி
ஆடுமின் கோனவன் வரவே,