புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தவம்

கட்டளைக் கலித் துறை. 

அருந்தவ மென்னக் கனிகாய் சருகை யருந்திவனத்
திருந்தவஞ் செய்யத் திரிவீ  ருரவோ ரியங்குமெண்ணூர்
பொருந்தவந்தானை மனமொழி வாக்கிற் பொருந்துவிரேற்
பெருந்தவமாகு மிதுவே தரும்பின் பெரும்பயனே.

இதுவுமது 

அறுசீர்க்கழி நெடிலா சிரிய விருத்தம். 

பயன் றருமென் றுன்னிபல தீர்த்தத்தும் மூர்த்தத்தும்
   படிந்துஞ் செற்றும்
நயன் றருமென் றுலகுரைத்தும் நனிகூடா வொழுக்கத்தி
   னடித்து நிற்பீர்
வயன்றருமெண்ணூர்வதிந்து சடைமுடியோ டுடைநீத்து
   வளனார் தெய்வ
வியன் றருமெல் லடிமுடியாப் புனைந்திருப்பீர் தவப்பேறு
   விளங்கத் தானே

சிந்தடி வஞ்சி விருத்தம். 

விண்ணூர் செல்வமு மேன்மையும்
மண்ணூர் கல்வியு மானமும்
எண்ணூர் வந்திடி லெய்தலாம்
புண்ணூர் நெஞ்சேமுப் போதுமே.

கட்டளைக் கலித்துறை. 

முப்போதும் வானவர் வாழ்த்திய வாழ்த்தொலி மொய்த்த வெண்ணூர்
கைப்போது வாகை யுடையாய்! எனக்குக் கருத்தொடுங்கும்
அப்போது சொல்லவும் நாவெழு மோவெனும் அச்சத்தினால்
இப்போதே சொல்லிவைத் தேனருள் என்மே லிருக்கவென்றே.