இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - நாரை விடுதூது

கட்டளைக் கலித்துறை.

மட்டுப்படாத் திசை யெங்கெங்குஞ் சுற்றி வருங்குரு!
கட்டுப்படாவரு ளெண் ஊர்த் தலைவரைக் கண்டதுண்டேல்
முட்டுப்படாத வென்காதலைச் சற்று மொழி திரியின்
தட்டுப்படாததோர் புண்ணிய முண்டிந்த தாரணிக்கே.

வெளி விருத்தம்.

தாய்போ லுயிர்கள் தழைக்கப் புரிவான்-நமாங்காள்
சேய்போல் தெய்வச் சிறு வற் புரந்தான் - நமரங்கள்
பேய்போற் புறவைப் பிடித்தாற் சினந்தான் - நமரங்காள்
நாய்போ லெண் ணூர் இயக்கத் தெளிமின்-நமாங்காள்.

முதலடி ஆறுசீரும் எனையடி நான் குருமாக வந்த வெண்டுறை. 

நயமிருக்கும் தமிழ்மாலை நலமிருக்கும் புகழ்மாலை நண்ணு மெண்ணூரர்
வயமிருக்கும் திருவளனார்க் காட்செய்யா ரென்செய்வார்?
பயமிருக்கு மரணமது பதிவாக வருமந்நாளே.