புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கண்டீரோ பராபானை

கண்டீரோ பராபானை- ஜெருசலையின்
மாந்தர் காளெந் தன் மகனை

கண்டவர் வசைகூற கடும் யூத ரதட்டிசீற
கனத்த கங்குலிற் பூங்காவினிற் சேர்ந்திட
காரணனை யூதாஸ் தழுவியே முத்தமிட
கருணைகர்த்தனிரு கரத்தை சேர்த்திறுக்கவும்
பருத்த வார்க்கசை யாலடித்துமெய் நொறுக்கவும்

பாதகரடிக்து நடத்தி கைபாஸன்னாஸ் முன்
பற்பலபொய்க் கூறி நிறுத்தி
காதக ரென்மகனைக் கன்னத்தி லறைந்து நெட்ட
கனத்த மெய்நடுங்கித் தரையினில் வீழ்ந்திட
கருணை முகத்திற்காரித் துப்பியே வைதிட
ஒருமை சீஷர்களால் மறுதளித் திடநல்ல
பரதேசி யைப்போற் பாதகருடன் செல்ல

பிலாத்தரண்மனை நடத்தி கற்றூணிற்சேர்த்துக்
கயிறாலிருகரத்தையிறுக்கி
வலுவாகவே யூதர்கள் வையாயிர சில்வான
வார்க்கசைப் பிரம்பா லடிக்கத் திரு உதிரம்
மேனியாவுந் தெரித்து சோரவன் னேரம்
கூர்மை யானமுண் முடியதை யழுத்தவே
ஆர்பரித்து மூங்கிற் றடியினாற் சுழற்றவே

பாரக்குருசைச் சுமத்தி பாதகயூதர்
பங்கப் படுத்தியே நடத்தி
மாறாத்துய ருதிக்க கண்டழுக,
அதிரத் தள்ளிகொடும் யூதர்கள் நடத்திட
அயர்ந்து சோரபுயத் தசைகள் தெரித்திட
அரியமேனித் தள்ளாடிக் குருசுட
னிரடிதூய முகங் குப்புர வீழ்ந்திட

சிலுவையை சிமியோன் தாங்க-சீடனருளப்பர்
சிந்தைநொந் தலறியேங்க
தலம்புகழ் வீரோணிக்காளுந் தற்பரன் முகந்துடைக்க
தாதைப்டுங் கொடிய துயரை நானறியவே
தூயவங்கிற் றிருவுரு வந்தெ ரியவே
தத்தளித்து கூனி நடுங்கியே நடந்திட
பத்தனைக் கண்டெம் மனமது பொடிபட

வலுயூதர் கட்செய்கொடிய-வாதைகளை யென்
வாயால் சொல்லப்போமோ துகையை
வலுவாய் நூற்றிரண்டறையு மெழுபத்திரண்டுத்துளை
வழுத்தொணாத நூற்றிருபது குத்துகள்
வடித்த முட்கிரீட மாயிர முனைகள்
சிரசிற் பதியவிரு பத்து மூவாயிர
குருதியான துளி தெரிக்க மெய்சோர

கபாலையிற் சிலுவைமேற்கிடத்தி-மூன்றாணியினால்
கொடிதாயறைந்து நிறுத்தி
விபுலையோர்க் காகவேழு வாக்கிய மீந்தவன்னேரம்
வல்லவனே திரு வலது விலாவி னில்
வல்லயத்தால் வில்யங் குத்திதிறக்க நல்
லுதிரமானதோர் துளியெமக் களித்திட
துதிசெய் வேதுயக னுக்காய் மரித்திட