புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவமாதா அம்மானை - நாடு நகரச்சிறப்பு

விருத்தம். 

செகவிரட்சகனார் தாயார் திருமரியனையுதித்த பகாருகலிலே யென்னும் பரிவுறு நாட்டின் சீரும் நிகாறுநேர்மை பொங்கி நிறைந்திடுநசரேயென்னும் நகரத்தின் வளனுமிங்கே நலமுற நவிலுவாமே.

அம்மானை.

சுருதிதனை வரைந்த தூயசுவிசேஷகரில் 
கருதுஞ்சிரேட்ட முனி கற்றவனாம்மத்தேயு 

ஆதியாத் தீட்டும் அதிகாரமான திலே 
சோதியருட்கொண்டு தொகுத்தேயெழுதிவைத்த 

பேரிற்சிறந்த (அபிராம்) பிதாப்பிதாவான முனி 
பாரிற்படைத்தபிதிர் பல்லோருமந்நாளில் 

கூட்டமதாகக் குலவுகலிலேயவெனும் 
நாட்டின் பெருமைதனை நான் சிறிது கூறுகிறேன் 

மாமதயானையைப் போல் மாமேகம்வந்தெழுந்து 
வாமநெடுங்கடலில் வண்மைச்சலம் பெருகிப் 

பொன்மலையிற்காலூன்றிப் பொழிந்தவெள்ளமேபுரண்டு 
வன்மலைசேர் பூநிலத்து நானிலத்தும்வந்ததுகாண் 

செந்நெல்முடிசாய்த்துச் சேவடியைப் போற்றுதல்போல் 
மன்னர் முடிநெருங்கி மணிசிதறுமாநாடு 

மாதமும்மாரி வருஷித்துப் பூதலத்தில் 
ஓதும்பலவளனு முள்ள பெருநாடு 

சாலைகளுஞ்சோலைகளுஞ் சார்ந்த திருநாடு 
மூலைக்குமூலை முரசொலிக்கும் பொன்னாடு 

சொல்லுமிந்த நாடதனிற் றோன் றுந்திருப்பதியாம் 
நல்லநசரையெனும் நாமமுளபட்டணமாம 

நீதியுங்காரணமும் நீண்டபெரும்புகழும் 
வீதியங்கோபுரமும் மிக்கநவமானதுவும்

எப்பதிக்கு மொப்பிடவும் இணையில்லா நன்ன கராம் 
செப்பரியதான தவஞ் சிறந்திலங்குநன்னகராம் 

சருவேஸ்பரன் கிருபை தழைத்திலங்குநன்னகராம் 
மறுவில்லாவேதம் வழங்குகின்ற நன்னகராம்