இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - களி

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். 

உம்பரார் தொமுங்கோயி லெண்ணூர் மேவி
ஒதுகின்ற களியரே முரைக்கக் கேண்மின்
இம்பரா ருண்பதுவுங் களியே யாகும்
ஈக்களெல்லா மொய்ப்பதுவும் மதுவேயாகும்
கொம்பார்ந்தொழுகுவ துந் தேனே யாகும்
குடிப்பவருங் குவலயத்து மக்களாவார்
வம்பறாப் பூங்கொடிகொள் வளனார் செந்தாள்
வணங்காரை வணங்குவிப்போம் மட்டிலாதே.