இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - திருநாமப் புகழ்ச்சி

இருபத்தெண் சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

சூசையெனு மீரெழுத்தே மெய்ஞ்ஞானத் தெய்வவரத் தொகுதி யாகும்
சூசையெனு மீ ரெழுத்தே திருக்குடும்பத் தலைமைபெறு சுடரே யாகும்
சூசையெனு மீ ரெழுத்தே சுருதிமறை வடிவான தோற்ற மாகும்
சூசையெனு மீரெழுத்தே வளனென்னச் செந்தமிழிற் றுலக்க மாகும்
சூசையெனிற் கல்விவருஞ் செல்வம் வரும் மெய்யறிவின் சூழ்ச்சி யுண்டாம்
சூசையெனிற் பத்திவரும் முத்திவருஞ் சித்தி வரும் துயராவார்
சூசையெனிற் பேயகலும் நோயகலுந் தீவினையின் தொடர்பு நீங்கும்
சூசையெனின் மகவில்லார் மகப்பெறுவர் எஞ்ஞான்றுஞ் சுகத்தைக் கொள்வார்
சூசை திருக் கரத்தழகைத் தெய்வமணங் கமழ்மலர்ப்பூந் துவசங் காட்டும்
சூசை திரு வரத்தழகை மெஞ்ஞான மறைவிளக்கித் துலங்கக் காட்டும்
சூசை திரு வுரத்தழகைச் சுடர் பாப்பிக் கருணை செய்யுஞ் சுதனே, காட்டும்

சூசை திருப் பதத்தழகை வான வர்க ளணியணியாச் சூழ்தல் காட்டும்
சூசையெனுந் திருநாமம் சுரர் தேம்பாவணி யென்னச் சொன்ன தாகும்
சூசையெனுந் திருநாமம் பரமனுயர் மார்பிலணி தொடையலாகும்
சூசையெனுந் திருநாமம் அளவில்லாத் தெய்வவருள் சுரக்கச் செய்யும்
சூசையெனுந் திருநாமம் பெற்றவர்கள் பெற்ற பயன் சொலமதிப்போ.

நேரிசை வெண்பா. 

மதுவுண்ட வண்டினங்கள்! மா மணத்திற் பூத்த
மதுவுண்ட வண்டின த்தை மானுங்க தியுண்டோ?
வாடா மதுவறா வாசம் பரந்தெண்ணூர்க்
கூடார்க் கடிந்தவன் கைக் கோல்.