புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பலியாகும் ஆன்மாக்களுக்கு ஓர் அழைப்பு!

திருச்சபையின் போதனை!!

இன்று பலியாகும் ஆன்மாக்கள் தேவைப்படுகிறார்கள் - ஏனெனில் சர்வேசுரன் மறுக்கப்படுகிறார். அவரது இரக்கமுள்ள அன்பு புறக்கணிக்கப்படுகிறது. இதனாலேயே உலகில் பாவங்கள் கடலென பெருகிவிட்டன. அவை தேவ நீதியையும் - அதன் தண்டனையையும் உலகிற்குக் கேட்கின்றன.

இச்சமயத்தில் தமது அன்பை எடுத்துக் கூற, தமது மீட்பின் பேறுபலன்களை பிற ஆன்மாக்களுக்கு வழங்க ஒத்துழைப்பாளர்களை நமதாண்டவர் விரும்புகிறார். அத்தகையோரே பலியாகும் ஆன்மாக்கள்! 


பாப்பரசர் 12-ம் பத்திநாதரின் போதனை!

ஆன்மாக்களை சர்வேசுரனிடம் கொண்டு வரும் மீட்பு அலுவலில் சாதாரண விசுவாசிகளையும் இணைத்துக் கொள்ளும் நடை முறையை தாய் திருச்சபையும் எப்போதும் அங்கீகரித்து ஆதரித்து வந்துள்ளது. குறிப்பாக பிந்தைய காலங்களில் நமது பரிசுத்த பிதா 12-ம் பத்திநாதர் இந்த போதனையை தமது "ஞான சரீரம் - னிதீவிமிஷ்உஷ் ளீலிrஸ்ரீலிrஷ்வி" என்ற சுற்று மடலில் விளக்கிக் கூறுகிறார். "...விசுவாசிகளுக்கு தெய்வீக மீட்பரின் உதவி தேவை என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...ஆனாலும் இதையும் அறிந்துகொள்ள வேண்டும்... கிறீஸ்துவுக்கு அவரது உறுப்புகளின் (திருச்சபை என்கிற கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் அங்கங்களான விசுவாசிகள்) உதவியும் தேவை... இது பலவீனத் தினாலோ, அவரால் இயலாது என்ற காரணத் தினாலோ அல்லாமல்-தமது பத்தினியாகிய திருச்சபையின் அதிமிக மகிமைக்காக இவ்வாறு சித்தம் கொள்கிறார்..." என்று கூறுகிறார்.

 மேலும் பாப்பரசர் தமது மடலில், "நிச்சயமாக சேசுவுக்கு நாம் தேவையில்லை; ஆனால் ஒரு காணக்கூடிய திருச்சபை - மனிதர்களின் ஒன்றிப்பால் உருவாக்கப் பட்டு, காணக் கூடிய வகை யில் திகழ் வதன் மூலமாக- ஒவ்வொரு மனிதனும் மீட்பின் வரப் பிரசாதங்களை பகிர்ந்தளிப்பதில் அவ ரோடு ஒத் துழைக்கும் ஒரு அலுவலை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்..." என்கிறார்.

சேசு தமது அளவற்ற நன்மைத்தனத் தால் நம்மையும் அவரோடு சேர்த்துக் கொள்ள ஆசிக்கிறார். உலகில் மீட்பின் மாபெரும் அலு வலை நிறைவேற்றுவதில் அவரது ஒத்துழைப் பாளர்களாகும் மகிழ்வையும், உயர்வையும் நமக்குத் தரும்படியாக நம்மை தம்மோடு இணைத்துக் கொள்ள சித்தம் கொண்டுள்ளார். இச்சமயத்தில், நமது சக மானிட சகோதரர்களின் மீட்பு கிறீஸ்துவோடான நமது தயாளமான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்ற ஆழ்ந்த பொருளையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்.


வியக்கத்தக்க இரகசியம்!

பாப்பரசர் இந்த விசுவாசிகளின் ஒத்துழைப்பை "வியத்தகு இரகசியம்" என்று அழைக்கிறார். "...பலருடைய ஆன்ம இரட்சணியம் கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் (கத். திருச்சபை) உறுப்பினர்களின் தாராளமான தவ ஒறுத்தல்களையும், ஜெபங்களையும் சார்ந் துள்ளது. குருக்கள், விசுவாசிகளின் இணைப் பான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்பது ஒருவராலும் போதிய அளவு தியானித்து உணர முடியாத வியத்தகு இரகசியமாக இது உள்ளது" (காண்க னிதீவிமிஷ்உஷ் ளீலிrஸ்ரீலிrஷ்வி) என்று போதிக்கிறார்.

ஆம்! பலியாகும் ஆன்மாவாக - சக கிறீஸ்தவர்களின் மீட்பில் ஒத்துழைக்கும் ஆன்மாவாக இருப்பது என்பது வியக்கத்தக்க இரகசியமே! ஆனாலும் அது கத். விசுவாசி களான - மாதாவின் அப்போஸ்தலர்களான நம் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடமை - பொறுப்பு என்பதையும் நாம் சிந்தித்தறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இது எவ்வளவு அளப்பரிய பொறுப்பு! இதுவே பலியாகும் ஆன்மாக்களுக்கான அழைப்பு! 

மரியாயே வாழ்க!