புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவமாதா தேடியழுதேகும் பிரலாபப் பண்ணாபரணம். - முதற்பக்கம்

சர்வேஸ்வராய நம
மரியாயே வாழ்க. 

ஆதிப்புரையறுத்து அற்பர் நமக்காய் பலியாக பாரச்சிலுவைசுமந்து கொல்கதாமலைக்கேகின சுதனை 
பதிதர்பகைக்குத் திரிஜெகதீஸ்வரியான

தேவமாதா தேடியழுதேகும் பிரலாபப் பண்ணாபரணம்.

இது சீர்பம்பாய் பைக்கில்லாவில் புகழோங்கும் அருட்சத்ய வேதாந்த வாலிப வித்வசங்கத்தார் வேண்டுகோட்படி தமிழ்மணக்கும் பெங்களுர் வேதாந்த போதக ஞான பிதாவாகிய ஸ்ரீமான். சி. கு. து. தேவசகாயப்புலவர் சிகாமணியவர்கள் ஞான புத்ர ரத்நம் பம்பாய் பிரபல வித்வ சிரோமணி ஸ்ரீமான் P. S. வேதநாயகம்பிள்ளை அவர்களாலியற்றி பூலோகவியாசன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது

ஷை சங்கத்தின் பரிசோதகரும், ஸ்ரீமான் சி. கு. து. தே. புலவர் சிகாமணியவர்கள் புத்திரரும், பிரபல வித்வசிரோமணி P. S. V அவர்கள் மாணருமாகிய பாலகவி ம-ள-ள- ஸ்ரீ D. ஆரோக்கியசாமி அவர்களாலும், ஷை சங்கத்தின் பிரயாசைத் தலைவர் கனம் D, சாமியே ற்பிள்ளையவர்களாலும் 1912 ஏப்ரல் 5 சுக்ரவாரத்திரவு அன்னாள் முனீஸ்வரியினாலயத்திலரங்கேற்றி கர்த்தருயிர்த்த திருநாளன்று ஷை சங்க பொக்கிஷாதிபர் கனம் பிரான்ஸிஸ் டேவிட் அவர்களால் விநியோகஞ் செய்யப்பெற்றது,

05-04-1912