இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருப்பாத முத்தி!

வானவர் வீழ்ந்தடி பணிந்த பாதம்
மானில ஏதனில் துவைந்த பாதம் 
கானவர் பெத்திலை கண்ட பாதம் 
கன்னியாம் தாய்மடி நின்ற பாதம் 
கோனவர் வணங்கிய குழந்தைப் பாதம் 
கொற்றவன் சூசை கண் ஒற்றும் பாதம் 
மானவர் எகிப்த்தில் மருண்ட பாதம் 
மண்ணதில் ஊன்றியே தவழ்ந்த பாதம் 
தானவர் தன்னகர்க்கேகும் பாதம் 
தனித்துமா எருசலை தங்கும் பாதம் 
ஈனவர் எமக்கதாய் உழைந்த பாதம்
ஏசுவின் மாசறு பாதம் போற்றி.

அலைகடல் தனில் நடந்தரிய பாதம்
ஆத்தும தாகங்கொள் ஆயன்பாதம்
மலை திடல் வெளியெலாம் அலைந்த பாதம் 
மறுகிடு நேசரின் மலர்ப்பொற் பாதம் 
விலையுடல் களை, பசிக்க கயர்ந்த பாதம்
வீணராம் எமக்குறு விந்த பாதம்   
கலைமடல் அருளதைக் கொணர்ந்த பாதம் 
கசடரைத் திருத்தவே விழைந்த பாதம் 
இலைதடல் எனத்தசை அறுந்த பாதம் 
ஈனரால் குரு சறையுண்ட பாதம் 
நிலைவிடல் மக்களை உயர்த்தும் பாதம் 
நித்திய அன்பரின் பாதம் போற்றி.