புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - கடலோடு உசாவல்

எண்சீராசிரிய விருத்தம்.

அலையெறிந்து வளை யெறிந்து முத்தஞ் சிந்தி
அழுகாற்றிப் பகலிரவா யு றக்க மின்றி
நிலைபெறிந் து கரை கடந்து அங்கு மிங்கும்
நில்லாத கருங்கடலே நீயுமென் போல்
கலையிருந்த வேதியர்க ளடி பணிந்து
கரங்கூப்பும் எண் ணரின் தலைவர் மீது
உலையிருந்த மெழுகாகிக் காதல் கொண்டு
உருகினையோ? உண்மையையிங் குரை செய்வாயே.

கட்டளைக் கலித்துறை.

உரை மீது வந்து புகழ் கின்ற எண்ணூர் உயர்தவனே!
திரைமீது வந்துன் மகன் றந்த காட்சித் திறமென்னவும்
வரைமீது வந்துன் மனை தந்த காட்சி வாமென்னவும்
தரைமீது வந்து தருவாயுன் பாத தரிசனமே.

மண்டலக் கட்டளைக்கலிப்பா. 

தந்தை தாயருந் தானமும் ஞான மும்
தங்கும் வேத மும் போதமும் மானமும்
முந்தை யோ ருரை நேசமும் பாசமும்
முத்தி சேர் தரு பத்தியும் புத்தியும்

எந்த நாளினும் நின்னரு ளெய்திடின்
எய்த லாமென நின்னடி நோக்கியே
வந்த மைந் தரெண் ஸர்வரக் கண்டுமே
வந் திரங்கிலை யென்னவுன் னன்பரோ.

எண்சீராசிரிய விருத்தம். 

அன்பர்தொழ வருமெண்ணூரரசே! முன்னம்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபாதி
இன்புற்ற வாதிபிதாப் பிதாக்க ளெல்லாம்
இச்சித்தும் தங்கண்ணால் கண்டிலாத
தென் புற்ற தேவசு தன் பிறந்த ஞான்றே
தெரிசித்தாய் நின் கரத்தி லேந்தப் பெற்றாய்
அன்புடனே வாய்முத்தங் கொண்டணைத்தாய்
ஆதரித்தா யிப்பேறு யார் பெற்றாரே.