புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - மதங்கு

தாழிசை.

முன்னடந்த வன்னநாணி முகமுடைந்த மென்னடை
மொய்த்தலம்பு பொற்சிலம்பு முந்து தாண் மதங்கிகேள்!
பொன்னின் மாட மின்னலாடப் பொன் னிலத்து வானவர் .
பூசை செய்து வீசு தூபப் புகைமணக்குங் கோயில் சீர்
மன்னுமெண்ணூர் தன்னில் நீடு மாடவீ தி யெங்கணும்
மகரயாழினிசைநரம்பேழ் மாடகத் திருத்திமேல்
பன்னு வாகை முன்னவன் சீர் பாடியாடிப் போற்றியே
பரிசு பெற்ற வரிசைமுற்றும் பாங்கர்சூழ வாழ்வையே.