புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவமாதாவின் அமலோற்பவமும் பரிசுத்ததனமும்!

லூர்துபதியிலே தேவதாய் காட்சியளித்ததன் நினைவாக பிப்ரவரி 11-ம் நாளை அர்ச். லூர்து மாதா திருநாளாக சிறப்பித்து வருகிறோம். லூர்து மசபியேல் கெபியில் 18 தடவைகள் அர்ச். பெர்னதெத்தம்மாளுக்குக் காட்சியளித்து தம்மை அமலோற்பவம் என்று அழைத்துக் கொண் டார்கள். திருச்சபை அதற்கு நான்கு ஆண்டு களுக்கு முன்பாக 1854-ல் தேவமாதாவின் அமலோற்பவ சத்தியத்தை விசுவாசப் பிரகடன மாக அறிவித்திருந்தை அங்கீகரித்து, உறுதிப் படுத்துவதாகவே தேவதாயின் லூர்து காட்சிகள் அமைந்தன. ஆனால் அதற்கும் மேலாக நாம் சிந்திப்போமேயானால் விசுவாசிகளான நம்மை தேவதாயின் அமலோற்பவத்தில் அவர்களது பரிசுத்ததனத்தில் பங்கடைய விடுக்கப்பட்ட அழைப்பாக இக்காட்சிகளைக் கொள்ளலாம்.


பரிசுத்ததனத்திற்கான அழைப்பு!

சர்வேசுரன் தமது திருத்தாயை அமல உற்பவமாக படைத்தார். தமது தாயை அனைத்து வரப்பிரசாதங்களாலும், பரிசுத்த தனத்தாலும், புண்ணியங்களாலும் அழகுபடுத் தினார். மாமரியிடம் இல்லாத புண்ணியம் எதுவுமில்லை; இல்லாத மகிமை யாருக்கு மில்லை என்று அர்ச். எரோணிமுஸ் கூறுகிறார். ஆம்! இதுவே மாதாவின் அமல உற்பவப் பண்பு. மாதாவின் இந்த அமலோற்பவ அந்தஸ்து முதலில் நமது ஆதிப் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆதாமின் மீறுதலால் மனுக்குலம் இந்த மேன்மையான அந்தஸ்தை இழந்து பாவத்தில் விழுந்தது. உலகம் சாவு- நோவு-பாவ சோதனைகள் என்ற அனைத்து தண்டனைகளையும் தன்மேல் பெற்றுக் கொண்டது. இதிலிருந்து மீட்கவே மீட்பரின் வருகையும் அவரது கொடிய மரணமும் தேவையாயிற்று. ஞானஸ்நானத்தால் ஜென்மப் பாவம் கழுவப்பட்டலும் அதன் தோஷம் மனித ஆன்மாவில் படிந்துள்ளதால் கர்மப் பாவம் விளைகிறது. பாவச் சார்பு ஆன்மாவைக் கீழே இழுத்துச் செல்கிறது. இந்த நிலையில் பரிசுத்ததனம் - கற்பு என்ற புண்ணியத்தில் உயர்வது வெகு கடினமாகிறது. ஆனாலும் தேவ இரக்கத்தோடான பராமரிப்பு தேவமாதா வின் அமலோற்பவத்தை நமக்குத் தந்து, அதன் பரிசுத்ததனத்தில் பங்கடைய அழைப்பு விடுக்கிறது. இதுவே லூர்து மாதாவின் காட்சியின் எதார்த்தம்!

எனவே, மாதாவின் பிள்ளைகளான நாம் நமது அமலோற்பவ அன்னையின் அமலோற் பவத்தில் பங்கடைந்து, இவ்வுலகில் பரிசுத்த மாக வாழ மன்றாடுவோமாக! தேவதாயிடம் அவர்களது அமலோற்பவ மகிமைக்காக நன்றி கூறி, நமக்கும் அவர்களது பரிசுத்ததனத்தில் பங்கடையும் வரத்தைக் கேட்போமாக!

மரியாயே வாழ்க!