இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் இனிமை!

கிறீஸ்துநாதர்: ஆண்டவர் எம்மாத்திரம் மதுரமாயிருக்கிறாரென்று சுகித்துக் காணுங்கள். அவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற மனிதன் பாக்கியவான் (சங்.33:8). மகனே! இதோ! தேவன் தமது வல்லபத்தில் உன்னதமானவர். சட்ட அதிபர்களில் அவருக்கு நிகரானவர் எவருமில்லை (யோபு.36:22).

நான் ஆதியின் வார்த்தையானவர்; என் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்டதொழிய, படைக்கப்பட்டவை களில் எதுவும் என்னாலன்றி உண்டாக்கப்படவில்லை (அரு.1:1). என் கிரிகைகள் அனைத்தும் உத்தமமானவை; என் வல்லபம் அளவற்றது; என் நீதி நிதானமுள்ளது; என் வழிகள் நாணயமுள்ளவை. உன்னை ஆட்கொண்ட பிதா நானல்லவா? உன்னைச் சிருஷ்டித்து உருவாக்கி, உன்னை என் வசமாக்கினது நானல்லவா? பூர்வீக நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாக, சென்ற வருடங்களை ஆராய்ந்து பார். உன் தகப்பனைக் கேள். அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள். அவர்கள் உனக்கு மறுமொழி சொல்வார்கள் (உபாகமம். 32:4).

உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே, நம்மையன்றி வேறே சர்வேசுரன் உனக்கு இல்லை (யாக்.20:1). உன் தேவனும் கர்த்தாவுமான நான், ஆ என் மகனே! கழுகு தன் குஞசுகளின் மேல் இறக்கை அசைவாடி, அவைகளைப் பறக்கும்படி தூண்டுவதற்காகத் தன் செட்டைகளை விரித்துத் தன் குஞ்சுகளை அதன்மேல் வைத்து, எடுத்துச் சுமப்பது போல் உன்னைச் சுமந்தேன் (உபாகமம்.32:11).

ஒன்றுமில்லாமையினின்று உன்னை உண்டாக்கிக் காப்பாற்றுவது மாத்திரமல்ல, படைக்கப்பட்ட சகல வஸ்துக்களையும் நீ அனுபவிக்கவென்று உனக்குக் கையளித்தது மாத்திரமல்ல, எவராலும் படைக்கப்படாத நான், ஆதியும், அந்தமுமில்லாத நான், எங்கும் நிறைந்த அசரீரியாகிய நான், எவ்வித நன்மைக்கும் ஊற்றாயிருக்கிற நான், எல்லாப் பொருட்களுக்கும் ஆதிகாரணரான நான், உனக்காக மனித அவதாரம் எடுத்தேன்.

மனுமக்களுடன் வாசம் பண்ணுவதே என் ஆனந்தமாகக் கொண்டேன். வார்த்தையானது மாம்சமாகி மனிதரோடு வாசமானது (அரு.1:14). நான் சத்தியத்திற்குச் சாட்சி சொல்லும்படியாகப் பிறந்தேன். அதற்காகவே உலகத்திற்கு வந்தேன் (அரு.18:37). நான் உன் பாவங்களுக்காகவும், சகல மனிதருடைய பாவங்களுக்காகவும் என்னைக் கையளித் தேன். உன்னையும், சகல மனிதரையும் நேசிக்கத் தொடங்கி முடிவு பரியந்தம் நேசித்தேன் (அரு.13:1).

உனக்கு நல்வழிகாட்ட, கஷ்டம் நிறைந்த ஒரு தொழி லாளியின் வாழ்வை நான் தெரிந்துகொண்டேன். புண்ணி யங்களைச் செய்தேன்; செய்து காண்பித்தபின் போதித் தேன். உனக்காக அநேக இடையூறுகளை ஏற்றுக்கொண் டேன்; கொடிய உபாதனைகளை அனுபவித்தேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; சிலுவை மரணமட்டும் என்னைத் தாழ்த்தினேன்; உனக்காக என்னைப் பரித் தியாகம் செய்தேன். உனக்காக என்னையே நான் பலியாக் கினேன் (பிலிப்.2:8).

உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் ஞாபக மாக, கோதுமை அப்பத்தின் வழியாக நீ என் சரீரத்தைப் புசிக்கவும், திராட்சை இரசத்தின் வழியாக, நீ என் இரத்தத் தைப் பானம் பண்ணவும் ஏற்பாடு செய்தேன்.

நான் படைத்த படைப்புக்கள் அனைத்தையும், அப்படைப்புக்களின் கர்த்தத்துவ ஆண்டவராகிய என்னையுமே உனக்கு முற்றிலும் கையளித்த பின்பு, சர்வ வல்லபமுள்ள நான் முதலாய் இன்னும் உனக்கு என்ன செய்யக்கூடும்?

ஆத்துமம்: என் ஆண்டவராகிய தேவனே! தேவரீர் அதியற்புதமான செயல்களைப் புரிந்தீர். உமது யோசனை களில் உமக்குச் சமமானவர் ஒருவருமில்லை. அவைகளை நான் விளக்கிக் கூற முயற்சித்தேன் என்றால், அவை எண்ணிலடங்காதவை (சங்.8:9).

வான மண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விஸ்தாரம் அவரது கரங்களின் கிரிகைகளைக் காட்டுகிறது.

பகல் பகலுக்கு இச்சத்தியத்தை உரைக்கின்றது. இரவு இரவுக்கு அறிக்கையிடுகின்றது. அவைகளுடைய சத்தத் தைக் கேட்காத பேச்சுமில்லை, பாஷையுமில்லை.

அவைகளின் சப்தம் பூமியெங்கும் செல்கின்றது; பூலோகக் கடைசி எல்கை மட்டும் அவைகளின் வார்த்தைகள் எட்டுகின்றன.

அந்த சப்தம் வானத்தின் ஒரு மூலையில் இருந்து புறப் பட்டு, மறு மூலை வரைக்கும் செல்கின்றது (சங்.18:1-23...).

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே! உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எம்மாத்திரம் ஆச்சரியத்திற்குரியதாய் இருக்கின்றது! ஏனெனில் உம்முடைய மகத்துவம் பரமண்டலங் களுக்கு மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது (சங்.8:1).

தேவரீருடைய கரங்களின் வேலைகளாகிய உமது வான மண்டலங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்து, மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனித புத்திரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்! (சங்.8:3).

நீர் அவனைத் தேவ தூதரிலும் சற்றே தாழ்த்தி, மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டினீர் (சங்.8:5).

உமது கரங்களின் செய்கைகளின் மேல் அவனுக்கு அதிகாரம் கொடுத்தருளினீர். சகல ஆடுகள், காட்டு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், சமுத்திரத்தின் விசாலத்தில் உலாவும் மீன்கள் முதலிய சகல ஜெந்துக்களையும் அவனுடைய கால்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் (சங்.8:6,7).

உமது இரட்சணிய ஆதரவை எனக்குக் கொடுத்தீர். உமது வலது கரம் என்னைத் தாங்கினது.

சர்வேசுரன் என் இரட்சகராயிருக்கிறார்; பயப்படாமல் நம்பிக்கையோடு நான் நடந்துகொள்வேன். ஏனெனில் ஆண்டவர் என் பலமும் புகழ்ச்சியுமாய் இருப்பதல்லாமல், என் இரட்சணியமாகவும் இருக்கிறார் (சங்.12:2).

மனவல்லய ஜெபம்: சேசுவின் திரு இருதயமே, என் நம்பிக்கையை உமதுபேரில் வைக்கிறேன்.

- 300 நாள் பலன், அர்ச். பத்தாம் பத்திநாதர், 1906.