இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 9

அனியாய மாயிந்த உலகவாழ் வினை நம்பி 

அமைதியை யிழந்து போனேன்; 

ஆகாத பாவியாய் அவியாத நரகத்து

அலகையின் அடிமை யானேன்; 

தனியா யிருந்துனது தாள் மலர் பணிந்திடத் 

தாசனாய்த் தொண்டு செய்யத்

தவவிரத மேபுரிய நினையாது மதிகெட்ட

சண்டாள னாகும் என்னை 

இனியார் புரந்திடுவர்? கதியேதுமில்லையே! 

எய்துமொரு தீர்வை நாளில் 

என்னபதில் கூறுவேன்? உன் மகவை மன்றாடி 

ஏழையென் துயர் களைகுவாய். 

கனியாகி மற்றுமொரு அனையாகி வையகம் 

காக்குமொரு செல்வி யாகிக் 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!