புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 7

பூமியொடு வானமுதல் யாவும் படைக்கு மொரு 

புத்திரனை நீ படைத்தாய்; 

பொற்புமிகு வானவரும் நற்பதம் பணிகின்ற 

புதல்வியா யுற்பவித் தாய்; 

தீமைதரு பேய்மகன் சென்னியை நசுக்கவே 

திருவடிகளைப்பதித் தாய்;

திக்கற்ற பாவியரை யெப்போதும் ஆட்கொளத் 

திகழுமிரு கரம்விரித் தாய்; 

மாமறை புரக்கும் அடி யார்துரை மாற்றினாய்; 

மந்திரித் திட்ட நீரால் 

மங்கைசுக மாகவே நன்குதவி யாற்றினாய்; 

மாபெரும் துரோகியாகும். 

காமியென் துயர்களைதல் தானுமொரு பாரமோ ? 

கடுகிவர வெகுதூர மோ? 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!