புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச். சூசையப்பரின் ஜீவியமும், மகிமைகளும். அத்தியாயம் 6

எட்வர்ட் ஹீலி தாம்சன், எம். ஏ.

அர்ச் சூசையப்பர் எந்த விதத்தில் ஏலியின் மகனாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்படி, திருச்சபையின் வேதபார கர்களிடம் நாம் செல்வோம். அவர்கள் இரண்டு முக்கியக் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். முதலாவது ஜூலியஸ் ஆஃப்ரிக்கானுஸ் என்ற வேதபாரகருடையது: அர்ச். லூக்காஸின் வம்ச அட்டவணையில் வருகிற ஏலி ஒரு பெண்ணை மணமுடித்தாலும், குழந்தைகளின்றி இறந்தார் என்று ஜூலியஸ் கூறுகிறார். இனி, ஏலியின் விதவை, மோயீசனின் திருச் சட்டத்தின்படி, ஏலியின் சகோதரனாகிய யாக்கோபை மணம் செய்து கொண்டாள் என்றும், ஆகவே சுபாவப்படி யாக்கோபின் மகனாகிய அர்ச். சூசையப்பர், திருச்சட்டப்படி ஏலியின் மகன் ஆனார் என்று இவர் கூறுகிறார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொள்வதில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த வாதத்திற்கு அடிப்படையாக இருக்கிற வேதாகமப் பகுதி பின்வருமாறு: இரண்டு சகோதரர்கள் ஒன்றாய்க் குடியிருக்கையில், இருவரில் ஒருவன் புத்திர பாக்கியமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி வேறொருவனை விவாகம் பண்ண வேண்டாம். புருஷனுடைய சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு தன் சகோதரனுக்கு பிள்ளைப்பேறு உண்டாகச் செய்து, மரித்தவனுடைய பெயர் இஸ்ராயேலில் அற்றுப் போகாதபடி அவன் பேரையே அவள் பெறும் தலைப்பிள்ளைக்கு இடக்கடவான் (உபா.25:5,6). ஆகவே இங்கு சேர்ந்து வாழ்கிற இரு சகோதரர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது; மேலும் பிறக்கும் தலைப் பிள்ளை இறந்த கணவனின் பெயரைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் இவ்வேத வாக்கியம் கூறுகிறது. ஆனால் இங்கே நிலைமை வேறு: யாக் கோபும், ஏலியும் உடன்பிறந்த வர்களாக இருக்க முடியாது, ஏனெனில் சுவிசேஷம் கூறுகிற படி அவர்களுக்குத் தந்தையர் வேறு வேறு; யாக்கோபின் தந்தை மாத்தான் என்று அர்ச். மத்தேயு கூற, ஏலியின் தந்தை மாத்தாத் என்று அர்ச். லூக்காஸ் கூறுகிறார். மேலும் யாக்கோபும், ஏலியும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுடைய குடும்பங்கள் வேறுபட்டவை, ஏனெனில் யாக்கோபு சால மோன் வழியாகவும், ஏலி, நாத்தானின் வழியாக வும் தாவீதின் குடும்பத்தினராக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏலியின் விதவையை யாக்கோபு மணமுடிக்க எந்தக் காரணமும் இல்லை. மேலும் ஏலியின் பெயரும் சூசையப்பருக்குத் தரப்படவில்லை.

இனி இரண்டாவது வாதத்திற்கு வரு வோம். இந்த வாதத்தின்படி, அர்ச். லூக்காஸால் குறிப்பிடப்படுகிற ஏலி, பரலோக பூலோக இராக்கினியான மாமரியின் பாக்கியம் பெற்ற தந்தையாகிய அர்ச். சுவக்கினேயன்றி வேறு யாருமில்லை. அர்ச். அகுஸ்தீனார் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார். திவ்விய கன்னிகையின் பிறப்பு பற்றிய பிரசங்கத்தில் அர்ச். ஜெரோமும் இதை ஏற்றுக் கொள்கிறார். இவர்கள் தவிர இன்னும் அநேக வேதசாஸ்திரிகளும் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் காரணங்கள் பின் வருமாறு:

ஏலி, எலியாக்கிம், மற்றும் சுவக்கீன் என்ற மூன்று பெயர்களும் ஒன்றுதான், அவை அப்படியேதான் வேதாகமத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதை ஏறத்தாழ எல்லா வேத பாரகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரண மாக, 4 அரசர் ஆகமத்தில், எகிப்து அரசன் ஜோஸியாஸின் மகன் எலியாக்கிம் தன் பெயரை சுவக்கீன் என்று எப்படி மாற்றிக் கொள்கிறான் என்பதை நாம் பார்க்கிறோம். சீரியர்கள் மற்றும் எகிப்தியர்களைப் பொறுத்த வரை, இந்தப் பெயர்கள் ஒன்றுதான் என்று ஃபிலோ அனியா னுஸ் என்பவர் கூறுகிறார். ஆக, அர்ச். லூக்காஸ் கூறுகிற ஏலி, மாதாவின் தந்தையாகிய சுவக்கீன் தான் என்றால், சூசையப்பர் சுபாவப்படியல்ல, மாறாக சுவக்கீனின் மருமகன் என்ற முறையில் ஏலியைச் சேர்ந்தவர் என்று சொல்ல அர்ச். லூக்காஸுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. 

உண்மையில் மெல்க்கியோர் கானோ என்பவர் ஏலியினின்றும்... உண்டானவர் என் பது சூசையப்பரை விட சேசுநாதரையே குறிக் கிறது என்று விளக்குகிறார். அதாவது, சூசையின் மகனாகக் கருதப்பட்ட இயேசு, அவரிடமிருந்து அல்ல, மாறாக, ஏலியின் குடும்பத்தில், அதா வது, ஒரு மனிதனின் தலையீடு இன்றி, ஏலியின் மகளாகிய தமது கன்னித்தாயாரிடமிருந்து மட் டுமே பிறந்தவர்! சேசு மாம்சத்தின்படி சூசை யப்பரின் மகனாக அன்றி, ஏலியின் பேரனாக இருக்கிறார். இதன் மூலம் சேசுநாதரின் கன்னிப் பிறப்பை அர்ச். லூக்காஸ் உறுதி செய்கிறார்.

இவ்வாறு ஏலி அல்லது சுவக்கீனின் மகளாகிய பரிசுத்த கன்னிமாமரியிடம் இருந்து பிறந்தவராகிய சேசுநாதர் மெய்யாகவே யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும், தாவீதின் குடும்பத்தவராகவும் இருக்கிறார் என்று நாம் அறிந்துகொள்கிறோம். சேசு சாலமோன் அரச ரின் சந்ததியைச் சேர்ந்தவர் என்பது அர்ச். சூசை யப்பரின் வம்சாவளியின் காரணமாக மட்டு மல்ல, ஏனெனில் 13-ம் ஆசீர்வாதப்பர் மாமரி யின் ஜீவியத்தைப் பற்றிய தமது பிரசங்கம் ஒன் றில், சுவக்கீனின் மனைவியும், மாமரியின் தாயு மாகிய அர்ச். அன்னம்மாள், அர்ச். சூசை யப்பரின் தந்தையாகிய யாக்கோபின் சகோதரி யாக இருந்தாள் என்று உறுதியாகக் கூறுகிறார். இதிலிருந்து, உறவு முறைப்படி மாமரி சூசை யப்பரின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்கள், அவர்கள் தன் தாய் வழியில் சூசையப்பரைப் போலவே சாலமோனின் வழியாக தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

எனவே. அர்ச். சூசையப்பரின் வம்சாவளி, கடவுளின் திருமாதாவுடையவும், நம் தேவ இரட்சகருடையவும் வம்சாவளியை நாம் கண்டுபிடிக்க உதவுவதால் அது ஒப்பற்ற மகிமையுள்ளதாக இருக்கிறது. அவரது வம்சாவளியில் வந்த எந்த அரசரையும் விட அவருடைய கரம் ஓர் அரச செங்கோலைப் பிடித்திருக்கவும், அவருடைய திருச்சிரசு அரச கிரீடத்தைத் தாங்கவும் அதிக தகுதியுள்ளதாக இருக்கிறது! 

தொடரும்.