புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 5

மதியாய்க் கிடந்துனது பாதஞ் சுமத்திலேன்; 

மலரடித் தேனை யுண்ணும் 

வண்டாய்ச் சுழன்றிலேன்; நின்றலத் தேயுற்று 

வளர்பசும் புல்லாகி லேன்;

விதியா யருச்சனை புரிந்திடேன்; மிகுமற்ப 

விசுவர்சியாய் நடந்தே 

வெள்ளையிடு கல்லறைக் கொப்பாகி யுன்றனருள் 

வேதம் சுமந்து நின்றேன்; 

துதியாய் மகிழ்ந்தடியர் புகழ்பாட நின்றவர் 

தொழுந் தெய்வமாய் வருந்திச் 

சுமைசுமப் போர்தஞ்ச மாயென்றும் ஆளத்

துணைக்கரம் விரித்த நின்பால் 

கதியா யடைக்கலம் புகுபாவி யென்னையும் 

காத்தருள வேண்டும் அம்மா! 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே! 

உன்னுவ தெலாம் தீமை; உரைப்பதெல்லாம் வஞ்சம்; 

ஒருக்காலும் உண்மை வாழும் 

உறைவிடம் அறிந்திலேன்; பரகதி நினைந்திலேன்; 

உன்மலர்த் தாள் எண்ணிலேன்; 

பண்னுவ தெலாம்பழி; படிப்பதெல் லாம்களவு; 

பற்றுவைத் தெந்த நாழும்

பரவிப்ப துலகையே, சீவித்திருப்பதும்

பாழுமுடல் பேணு தற்கே, 

இன்னுமதி கஞ்சொல்ல வேண்டுமோ அன்னையே! 

இந்நிலத் துன்னை யன்றி 

என்பவ மனைத்தையும் மன்னித்து நற்கதியை 

ஈயவல் லவர் இல்லையே! 

கண்ணளி சுரந்துனது சேயை மன்றாடியென் 

கலிதீர்க்க வேண்டும் அம்மா! 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!