புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏழு தலையான பாவங்கள் - 4. அகங்காரம்.

நான்காவது திருவசனம்: என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?

சிறிய மனிதர்கள்தான் தங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நிஜமாகவே செல்வந்தனாக இருக்கிற ஒரு சிறுவன் தன் பணக் காரன் என்பதைத் தன் நண்பர்களுக்கு நிரூபிப்பதற்கு, விலையுயர்ந்த ஆடைகளை அணிய வேண்டிய அவ சியமில்லை. மாறாக, தான் செல்வந்தன் என்ற ஒரு போலியான தோற்றத்தை உண்டாக்கும்படி ஏழை யான ஒரு சிறுவன்தான் அப்படிச் செய்ய வேண்டும். தங்கள் தலைகளில் ஒன்றுமில்லாதவர்களும் கூட இப் படித்தான். அவர்கள் தங்களுக்கு எவ்வளவு அதிக மாகத் தெரியும் என்பதையும், தாங்கள் வாசித்த புத்த கங்கள் என்னென்ன, தாங்கள் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் எது ஆகியவை பற்றியெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையான அறிஞர்களோ, தங்களை அறிஞர் களாகக் காட்டிக் கொள்வதேயில்லை. அவ்வாறே வெளிவேடக்காரர்களைப் போல, அர்ச்சிஷ்டவர்கள் பக்தியுள்ளவர்களாகத் தோன்றுவதில்லை. மிக அநேக மனிதர்கள், பெருமை சிலாக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதால், தங்கள் குரல்களை மாற் றிக் கொள்கிறார்கள், தங்கள் தோற்றங்களை மேம் படுத்திக் கொள்கிறார்கள், இதன் மூலம் இந்த மகத் துவங்களைத் தாங்கள் உண்மையில் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை என்பதை எண்பிக்கிறார்கள் --இவை அவர்களுக்குப் பொருந்தாத அளவுக்குப் பெரிய மகிமைகளாக இருக்கின்றன. அவர்கள் மகிமைகளைக் கிரகித்துக் கொள்வதில்லை. மகிமை கள்தான் அவர்களைக் கிரகித்துக் கொள்கின்றன. அவர்கள் அரச வஸ்திரம் அணிந்துகொள்வதற்குப் பதிலாக, அரச வஸ்திரம்தான் அவர்களை அணிந்து கொள்கிறது. ஒரு நுரைப்பஞ்சினால் ஓரளவு தண் ணீரை உறிஞ்சிக் கொள்ள முடியும், அதற்கு மேல் இல்லை. ஒரு மனிதனின் குணம் ஓரளவுக்குத்தான் மகிமையைப் பெற்றுக் கொள்ள முடியும், அதற்கு மேல் இல்லை. உண்மையாகவே மேன்மை மிக்க வர்கள் அர்ச். பிலிப்பு நேரியாரைப் போன்றவர்கள். அவர் ஒருநாள் ஒரு குற்றவாளி, சிறைச்சாலைக்கு நடத்திச் செல்லப்படுவதைக் கண்ட போது, கடவு ளின் வரப்பிரசாதம் மட்டும் இல்லை என்றால், பிலிப்பு நேரி அதோ போகிற அந்தக் கைதியைப் போல்தான் இருப்பான் என்றார்!

நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்கத் தொடங்கியிருக்கிறோம், மற்றவர்களைக் குறைந்த பட்சம் நமக்குக் குறைவில்லாமல் மதிக்கத் தொடங்கி யிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ தூறான அம்புகளால் நம்மைக் காயப்படுத்தியவர் களை நோக்கி, பிதாவே மன்னியும் என்று சொல்லி யிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம் மைத் திருடர்கள் என்று வகைப்படுத்தியவர்களை மன்னித்து, இன்றே, பரலோகத்தில் என்று சொல்லி அவர்களை மனந்திருப்பினோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உறவினர்களுக்கு முன் நம்மை அவமானப்படுத்தியவர்களை நம் பரலோக அன்னை யிடம் காட்டி, இதோ உம் மகன் என்று சொல்லி அவர்களை மாதாவின் மகனாக ஆக்கினோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உலக மகிமையில் நமக்குக் கீழ்ப்படடவர்களுக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவர்களிடம் நான் தாகமாயிருக்கிறேன் என்று சொல்லி நமக்குக் குடிக்கத் தரும்படி கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் உண்மை யுள்ளவர்களாக இருக்கத் தொடங்கி, நம் உண்மை யான மதிப்பில் நம்மை மதிக்கத் தொடங்கியிருக் கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை யெல்லாம் ஒரு மணி நேரம் மட்டுமே நாம் செய்தா லும், நாம் உலகத்தை முழுமையாக மாற்றியமைத்து விடுவோம். நமக்கு முன்மாதிரிகைக்குக் குறை வில்லை. ஏனெனில் சிலுவை மரண மட்டும் தம்மைத் தாழ்த்தியவரை நம் முன்மாதிரிகையாகக் கொண் டிருக்கிறோம். வீண் ஆடம்பரத்திற்குப் பரிகாரம் செய்யும்படி சகல கண்களுக்கு முன்பாக ஆடையற்ற வராக மரித்தவரை நம் கண்முன் நாம் கொண்டிருக் கிறோம். அவர் ஏன் இதைச் செய்தார்? ஏனெனில் நீங்களும் நானும் கடவுளின்றி வாழவும், சுதந்திரமாக இருக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். ஆங்காரத்திற்குப் பரிகாரம் செய்யும் படியாக அவர் நம்மை மீண்டும் தாவீது மற்றும் கோலியாத்தின் கதைக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போகிறார்.