புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பலியாகும் ஆன்மாக்கள்: 2. முத். சகோதரி ஜோசபா மெனெண்டஸ் (1890 - 1923)

"சேசு என் இருதயத்தில் ஒரு தாகத்தை எழுப்பியிருக்கிறார். அது: உலகிலுள்ள சகல மனிதர்களும் அவரைச் சிநேகிக்கும்படி செய்ய வேண்டும் என்பதே. அதற்காக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும், உயிரையே தத்தம் செய்ய வேண்டுமானாலும், இதோ தயாராயிருக்கிறேன்..."   -முத். ஜோசபா மெனெண்டஸ்.


இளமையில் வறுமை!

ஜோசபா 1890-ம் வருடம் பிப்ரவரி 4-ம் நாளன்று ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட் ரீட்டில் பிறந்தாள். தந்தை லெயோனர்டு மெனெண்டஸ் இராணுவ அதிகாரியாக பணி யாற்றியவர். தாய் லூஸியா. 4 பெண் குழந் தைகளில் மூத்தவளான ஜோசபாவின் சிறு வயது வாழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவளை மிகவும் நேசித்த தந்தை "பேரரசி" என்றே அழைத்து வந்தார். 5-வது வயதில் உறுதி பூசுதல் பெற்ற ஜோசபா, 7-வது வயதில் முதல் பாவசங்கீர்த்தனம் செய்தாள். அவளது ஆன்ம குரு சங். ரூபியோ சுவாமி தியானம் செய்வதையும், சிறுசிறு மன வல்லய ஜெபங்களைப் பயன்படுத்தி எப்போதும் தேவ பிரசன்னத்திலேயே வாழவும் கற்றுக் கொடுத் தார். பின்னாளில் அவள் கன்னியர் மடம் செல்வது வரை அவளுக்கு ஆன்மகுரு அவரே!

சிறு வயதிலேயே புண்ணியத்திலும், தேவசிநேகத்திலும் மேலோங்கி இருந்த ஜோசபா தியாக உணர்வு மிக்கவளாகத் திகழ்ந் தாள். வீட்டின் மூத்த பிள்ளை என்ற பொறுப்பை உணர்ந்து தமது சகோதரிகளையும் நற்குணங் களில் பழக்கி வந்தாள். அவள் புது நன்மை வாங்கிய தினத்தில் தனது உள்ளத்தில் ஒலித்த குரலொலிக்கேற்ப தனது கன்னிமையை என்றும் காப்பாற்றி வருவதாகவும், சர்வே சுரனை அதிகமதிகமாக சிநேகிக்கவும், ஒரு போதும் அவரை மனநோகச் செய்யா திருக்கவும் கிருபை செய்ய வேண்டும் என்ற தனது வாக்குறுதியை ஒரு சிறு தாளில் எழுதி வைத்து, அதை தமது மரண நாள் வரை பாது காத்து வந்தாள்.

இரு வருடங்கள் ஒரு தையல் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜோசபா தையல் வேலை களை மிகச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தாள். பின்னர் அவளும் அவளது சகோதரிகளும் வீட்டிற்கருகிலுள்ள சேசுவின் திரு இருதய சகோதரிகள் நடத்தி வந்த இலவச பள்ளியில் சேர்ந்தனர். எப்போதும் தனிமையையும், கடவுளோடு ஐக்கியத்தையும் விரும்பித் தேடும் குணம் கொண்டவளாக ஜோசபா திகழ்ந்தாள். இனிமையாக சென்ற அவளது வாழ்வில் 1907-ல் முதன்முதலாக துயரம் வரத் தொடங்கியது. அவளது அன்புக்குரிய இளைய சகோதரி திடீரென மரணமடைந்தாள். அந்தத் துயரத்தால் பெற்றோருக்கும் வியாதி கண்டது. மூத்த மகள் என்ற நிலையில் அவர்களையும், குடும்ப வேலைகளையும் பார்ப்பதும் அவளது கடமையாகிப் போனது. அதோடு வீட்டில் கொடிய வறுமை வேறு! இச்சமயத்தில் திரு இருதயச் சபை சகோதரிகள் உதவிக்கு வந்தார் கள். சபைத் தலைவி தையல் வேலை தெரிந்த ஜோசபாவுக்கு ஒரு தையல் எந்திரம் வாங்கிக் கொடுத்து, தங்களுக்குத் தையல் தைத்துக் கொடுக் கும்படி வேலையும் கொடுத்தார்கள். அப்போது அச்சகோதரிகள் ஸ்பானிய இராணுவ வீரர்களுக்கு ஆயிரக்கணக்கான உத்தரியங்களை வழங்கு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உத்தரி யங்களைத் தைக்கும் பணி ஜோசபாவிடம் கொடுக்கப்பட்டு, கூலி பணம் குடும்பத்திற்குக் கிடைக்கச் செய்தனர். இதனால் திரு இருதய சபைச் சகோதரிகளோடு நல்ல பழக்கம் ஜோசபா விற்கு ஏற்பட்டது. அவர்களின் புண்ணிய வாழ்வால் ஈர்க்கப்பட்ட ஜோசபா அச்சபையில் சேரும் ஆவல் கொண்டாள். இதற்கிடையில் அவளது தந்தை மரணமடையவே, குடும்பப் பொறுப்புகள் ஜோசபா மீதே விழுந்தன. துறவற வாழ்வை விரும்பிய ஜோசபாவிற்கு அது பெரும் தடையாக இருந்தது. 


தேவ அழைத்தல்

இருந்தாலும் ஆன்ம குருவின் ஆலோ சனையின்படி தமது 22-வது வயதில் மரியாயின் பரிகார சபையில் உட்பட்டாள். அதற்கு தாயின் சம்மதம் கிடைத்தாலும், சில மாதங்களிலேயே தாய் மனம் மாறி, அவளைத் தன்னோடு அனுப்பும்படி கேட்டு கட்டாயப்படுத்தவே, ஜோசபா வீட்டிற்கு அனுப்பப்பட்டாள். மீண்டும் தையல் வேலை செய்து குடும்பத்திற்கு உழைத்த ஜோசபாவின் மனம் திரு இருதய சபை யிடமே ஆவல் கொண்டிருந்தது. எப்படியாவது அதில் சேர்ந்து விட வேண்டும் என்று ஆசித்த ஜோசபா அதற்காக உருக்கமாக ஜெபிக்க லானாள்; ஜோசபாவிடம் விளங்கிய பக்தியை யும், கடமைப் பற்றையும், மென்குணங்களையும் கண்ட அச்சகோதரிகள் அவளை மிகவும் விரும்பினர்.

வீட்டில் வேலை செய்து குடும்பத்திற்கு உதவி செய்வதிலேயே நாட்கள் கழிந்தன. துறவற ஜீவியத்தை நாடிய ஜோசபாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் திரு இருதய சபைச் சகோதரிகளிடம் தம்மை சபையில் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தாள். தாயின் கண் ணீர்கள் அவளது முடிவிற்கு பெரும் தடைக் கற்களாக இருந்தன. எனவே இம்முறையும் அவளால் மடத்திற்குச் சொல்ல முடியவில்லை. குடும்ப நிலைக்காக திரும்பவும் கொஞ்ச காலம் வீட்டிலேயே தங்கியிருக்க சம்மதித்தாள். சில மாதங்கள் தவிப்பிலும் மடம் புக முடியவில் லையே என்ற அங்கலாய்ப்பிலும் கழிந்தன. மடம் வர அழைப்புப் பெற்று வராமல் போன தன்னை திரு இருதய சபை சகோதரிகள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகத்திலும், வருத்தத் திலும் இருந்த ஜோசபாவின் உள்ளத்தில், "திரும்பத் திரும்பக் கேள்!" என்ற குரல் ஒலித்துத் தூண்டியது.

சில மாதங்கள் கழிந்தன. 1919 நவம்பர் 19-ம் தேதி. ஜோசபா வழக்கம் போல் தைக்க துணிகள் வாங்க செமார்த்தீன் என்ற இடத் திலிருந்த திரு இருதய சபை மடத்திற்குப் போயிருந்தாள். அங்குள்ள இல்லத் தாயார் அவளிடம், "பிரான்ஸ் நாட்டில் பூவாத்தியர் என்ற இடத்தில் ஒரு நவகன்னியர் மடம் ஆரம் பிக்கிறார்கள். அதில் சேர உனக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். எதிர்பாராமல் வந்த அழைப்பைக் கேட்ட ஜோசபா அகமகிழ்ந்து போனாள். உடனே, "சரி! போகிறேன்" என்று கூறினாள். எல்லாம் ஏற்பாடாகியது. ஜோசபா வின் தாய்க்கு இதில் வருத்தம் தான், ஆயினும் எந்த மறுப்பும் கூறவில்லை. ஜோசபாவும் இனி தாயின் கண்ணீருக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தாள். அதனால் தான் புறப்படும் நாளைப் பற்றி தாயிடம் எதையும் சொல்லாமல் எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமலே புறப்பட்டாள்.

1920-ம் வருடம், ஜனவரி 20 அன்று சேசுவின் அன்பின் அழைப்பினை பின்பற்றி ஸ்பெயின் எல்லையைக் கடந்து பிரான்ஸ் நாட் டிலுள்ள பூவாத்தியர் மடத்தில் ஜோசபா பிர வேசித்தாள். அப்போது அவளுக்கு வயது 29!


பலியாகும் ஆன்மாவாகத் தேர்வு!

 பூவாத்தியர் மடம் மிகவும் தொன்மையானது, இங்குதான் திரு இருதயச் சபையின் ஸ்தாபகி அர்ச். மதலேன் சோபி பாரா தாயார் தனது முதல் நவகன்னியர் மடத்தை ஆரம்பித் தார்கள். அங்கேதான் அத்தாயார் பல வருடங் கள் தங்கியிருந்தார்கள். அப்படிப்பட்ட புண்ணிய மடத்தில்தான் ஜோசபா உட்பட்டாள். அவள் அங்கு நான்கு வருடங்களே வாழ்ந்தாள். அங்குதான் சேசுவின் திரு இருதயம் தமது அளவற்ற இரக்கத்தின் செய்திகளை வெளியிட்டு அவளை பலியாகும் ஆன்மாவாக அழைத்து அருள் வரங்களைப் பொழிந்தார்!

மடத்தில் சமையல் வேலை செய்வது, அறைகளைத் துடைப்பது, தையல் வேலை, பின்னல் வேலைகள் செய்வது, தினசரி பாடற் குழுவிலும் இணைவது என பல வேலைகளைச் செய்து தம்மை துறவற வாழ்வை அர்ப்பணித் தாள் ஜோசபா. மொழி தெரியாத அந்நிய நாட் டில் வாழும் தனிமை உணர்வு அவளைக் கலக்க மடையச் செய்தாலும், சபையில் தமது எளிய பணிகளை மிகவும் உத்தமமான முறையில் நிறை வேற்றி வந்தாள். 1920 ஜூலை 16-ம் தேதி சபை உடுப்பைப் பெற்றுக் கொண்ட அன்று முதன் முதலாக ஓர் அசாதாரண அனு பவத்தைப் பெற் றாள். சேசுவின் திரு இருதயத் தின் காயத்துக் குள் அவள் வைக் கப்பட்டாள். (சுபாவத்துக்கு மேலான ஞான பரம இரகசிய அனுபவம் -துதீவிமிஷ்உழியி eமுஸ்ரீerஷ்eஐஉeவி). அப்போது மனிதர்கள் செய்யும் பாவங்களால் அவ்விருதயம் எவ்வளவு புண்பட்டுப் போயிற்று என்ற அறிவை பெற்றாள். உடனே தன்னால் கூடிய மட்டும் அவரை சிநேகிக்கவும், தன்னை முழுவதும் அவருக்குத் தத்தம் செய்யவும் தீர்மானித்தாள். அன்றிலிருந்து அநேக தடவை நமதாண்டவரின் தரிசனங்களையும், பரலோக பரவச காட்சிகளையும், செய்திகளையும் பெற லானாள். ஆனால் அவற்றை பிற சகோதரிகளிட மிருந்து மறைத்து ஒரு சாதாரண எளிய சகோதரி யாக வாழ்ந்து வந்தாள். எப்போதும் புன்சிரிப் போடும், இனிய முகத்தோடும், பிறருக்கு உதவ தயாராக இருக்கும் மனமும் கொண்டவளாகத் திகழ்ந்தாள். ஆனால் தனது ஆன்ம குருவுக்கும், சபைத் தலைவிக்கும் தனது அனைத்து நிகழ்வு களையும் வெளிப்படுத்தினாள். அவர்களின் கட்டளைக்கு ஏற்ப தனது பரலோக அனுபவங் களைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதலானாள்.

1920, ஜூன் 29-ம் நாள் மிகவும் குறிப் பிடத்தக்க செய்தியைப் பெற்றாள். திவ்விய பலி பூசையின் போது, நமதாண்டவர் அவளுக்குக் காட்சியளித்தார். இது பற்றி அவள், "எனது கண் களால், அற்பமான இந்த என் கண்களால், எனது அன்பான சேசுவை, என் இருதய சம்பூரணரான என் ஆண்டவரை, என் தேவனை, நான் தரிசித்தேன்" என்று எழுதுகிறாள். ஆண்டவர் அவளை நோக்கி, "நான் என்னை முழுவதும் ஒரு சிநேகப் பலியாக ஒப்புக்கொடுத்தது போல, நீயும் உன்னை முழுவதும் ஒரு சிநேகப் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அன்பின் பீடத்தில் எதையும் தகனம் பண்ண மறுக்காதே" என்று கூறினார். அதற்கு அவள்: "ஆண்டவரே, நான் முற்றிலும் உமக்குச் சொந்தம், நான் என்ன செய்ய வேண்டுமென்று தேவரீர் திருவுளம்பற்றி யருளும்" என்று மன்றாடினாள். காட்சி மறைந் தது. ஜோசபா சேசுவை மட்டுமல்லாது, தேவ தாயையும், சபை ஸ்தாபகி, அர்ச். சோபி பாரா தாயாரையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள்.

நமதாண்டவர் ஜோசபாவுக்கு ஆன்மாக் களை, குறிப்பாக குருக்கள், துறவியரின் ஆன்மாக் களை, நரகத்திலிருந்து காப்பாற்றவும், அவரது திரு இருதயத்திற்கு ஆறுதலாகவும், அதிகமான துன்பங்களை அனுபவிக்கும் அலுவலை வெளிப் படுத்தினார். அவர் அவளிடம்: "உலகம் என் இருதயத்தின் இரக்கத்தை அறிந்து கொள்ள வில்லை. உன் வழியாக அதனை வெளிப்படுத்த நான் சித்தம் கொள்கிறேன். நீ எனது அன்பினுடை யவும், இரக்கத்தினுடையவும் அப்போஸ்தல ராக இருக்க விரும்புகிறேன்" என்றும் கூறினார்.


பாவப் பரிகாரம்

நமதாண்டவர் ஒரு முறை அவளிடம்: "நான் விரும்பும் ஆன்மாக்களை வேதனை அனுபவிக்க அனுமதிக்கிறேன். வேதனை எல்லாவற்றிற்கும் மிகவும் அவசியமானது. ஆனால் எனது தெரிந்தெடுக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு எவ்வளவுக்கு அதிகம் தேவை!... அது அவர்களைத் தூய்மைப் படுத்துகிறது... நரக நெருப்பிலிருந்து அநேக ஆன்மாக்களை காப்பாற்ற அவர்களைப் பயன்படுத்த என்னால் முடிகிறது'' என்றார். மேலும் "எனக்கு ஆறுதலளிக்கும் பிரமாணிக்கமுள்ள ஓர் ஆன்மா, குளிர்ந்து வெதுவெதுப்படைந்து போன அநேக ஆன்மாக்களுக்கு ஈடுசெய்கிறது!'' என்றும் கூறினார்.

இத்தகைய ஆத்தும இரட்சண்ய அலுவ லில் அவளைப் பங்கேற்கச் செய்யும் சம்பவம் 1920-ஜூலை 22-ம் தேதி நடந்தது. அன்று நம தாண்டவர் ஜோசபாவுக்குத் தம் இருதயத்தைக் காண்பித்தார்.: அதில் ஆறு ஆணிகள் குத்தி யிருந்தன! "ஜோசபா, இந்த ஆணிகளை எடுத்து விட மாட்டாயா?'' என்றார். அவை பாவத்தால் அவருக்கு மிகுந்த கஸ்தி வருவித்துக் கொண்டிருந்த ஆன்மாக்கள். அவர்கள் மனந்திரும்பும்படி ஜெப தப முயற்சிகளில் ஈடுபட்ட ஜோசபாவிற்கு சில நாட்களுக்குப் பிறகு காணப்பட்ட சேசுவின் திரு இருதயத்தில் ஒரு ஆணிதான் காணப்பட்டது. என் இதயத்திலிருந்து ஐந்து ஆணிகளை எடுத்து விட்டாய். இன்னும் ஒன்று பாக்கி. அதையும் எடுத்து விடப் பிரயாசைப்படு என்று ஆண்டவர் தெரிவித்தார்.

ஜோசபாவுக்கு வெளிப்படுத்தப்பட்ட படி அது, அகங்காரமுள்ள ஒரு கன்னியாஸ்திரீயின் ஆத்துமம். சர்வேசுரன் தனக்குக் கொடுத்த வரங்களை, அவருடைய கொடையாகக் கருதாமல், தனக்குச் சொந்தமென பெருமை பாராட்டி வந்தாள். ஆங்காரம் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அந்த ஆத்துமத்திற்காக ஜோசபா அநேக பரித்தியாகங்களையும், வேதனைகளையும் ஒப்புக்கொடுத்தாள். சில நாட்களுக்குப் பின்னர் (ஆகஸ்ட் 25) ஆண்டவர் ஜோசபாவுக்கு மீண்டும் தரிசனையானார். இப்போது அவர் கண் கொள்ள முடியாத அழகோடு காட்சியளித்தார். அதனை பரவச நிலையில் கண்ட ஜோசபா, ஆ! சேசுவே, எவ்வளவு அழகாயிருக்கிறீர்! உம்மைப் பார்த்தால், எந்த ஆன்மாவும் உமது அழகில் ஈடு பட்டு லயித்துப் போகுமே என்று சொன்னாள். ஆண்டவர் அந்த கடைசி ஆறாவது ஆத்துமம் மனந்திரும்பி விட்டது,, சிறுசிறு காரியங்களில் பரித்தியாக முயற்சிகளை செய், அவற்றால் எனது இருதயத்துக்கு மிகுந்த ஆறுதல் உண்டாகும் என்று சொல்லி மறைந்தார்.

இப்படி பலியாகும் ஆன்மாவாக, ஆன்மாக்களை சேசுவுடன் மீட்க ஜோசபா அநேக சோதனைகளைத் தாங்க வேண்டியிருந்தது.

(தொடரும்)