புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அப்போஸ்தலர்கள்: 1. அர்ச். சீமோன் இராயப்பர்.

"நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின் மேல் என் திருச் சபையைக் கட்டுவேன். மோட்சத்தின் திறவு கோல்களையும் உனக் குக் கொடுப்பேன்...'' (மத். 16:18-19).

அர்ச். இராயப்பர் அப்போஸ்தலர்களின் தலைவர். இவர் கலிலேயா கடலருகே உள்ள பெத்சாயிதாவில் யோனா, யோவன்னாவின் மகனாகப் பிறந்தார். இவரது சகோதரர் பிலவேந்திரர்தான் சேசுவுக்கு இராயப்பரை அறிமுகம் செய்து வைத்தவர். சேசு இவரைக் கண்ட வுடனே, ""நீ கெபாஸ் என்றழைக்கப்படுவாய்'' (அரு.1:43) என்று அன்றே தேர்ந்தெடுத்துக் கொண்டார். கெபாஸ் என்பதற்கு பாறை (இரா யப்பர்) என்பது பொருள். இவர் சீமோன், சிமி யோன், சீமோன் இராயப்பர், கெபாஸ் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். தமிழில் இராயப்பர் என்றும் ஆங்கிலத்தில் பீற்றர் என்றும் அழைக்கப்படுகிறார்.


மனிதரைப் பிடிக்க அழைப்பு

ஒருநாள் இராயப்பர் ஜெனேசரேத் ஏரி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். மீன்பாடு கிடைக்காததால், கரையில் வலையை அலசிக் கொண்டிருந்தார். சேசு இராயப்பரின் படகில் ஏறி, கரைக்கு அப்பால் தள்ளும்படி செய்து, அந்தப் படகில் உட்கார்ந்து ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்தார். பிரசங்கம் முடிந்த பின்னர் சேசு படகை ஆழத்தில் தள்ளச் செய்து அற்புத மாய் மீன்பாடுகளைக் கொடுத்தார். இந்தப் புதுமையைக் கண்டு பிரமிப்படைந்த இராயப் பர் சேசுவின் பாதங்களில் விழுந்து ""ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், என்னை விட்டு அகலும்'' என்றார். அதற்கு சேசு, ""பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப் பாய்'' (லூக். 5:2-10) என்று கூறினார். சேசு இவரை அழைக்கும்போது வயது 34.


இராயப்பரின் விசுவாசம்!

இராயப்பர் சேசுவிடம் குழந்தைக்குரிய விசுவாசமும், அன்பும், பிரமாணிக்கமும் கொண் டிருந்தார். பன்னிரு அப்போஸ்தலர்கள் சார்பாக இராயப்பரே ஆண்டவரிடம் உரையாடினார். அவரது செயல்களும், வார்த்தைகளும் எப்போ தும் விசுவாசத்தை எண்பிப்பவையாக இருந் ததை நாம் சுவிசேஷங்களில் அறியலாம்.

ஒரு முறை அப்போஸ்தலர்கள் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, சேசு கடலில் நடந்து வந்தார். அவர் சேசுதான் என்பதில் உறுதியடைய கடலில் தாமும் நடக்கச் செய்யும் என்று கேட்ட இராயப்பர் கடலில் நடந்து சேசுவிடம் சென்றார் (மத்.14:22-31).

மற்றொரு முறை சேசு தமது திரு சரீரம்- திவ்ய நற்கருணையைப் பற்றி போதித்தபோது அதன் உண்மையை உணராத பல சீஷர்கள் அவரை விட்டு அகன்றனர். சேசு தமது அப்போஸ்தலர்களும் போய்விட நினைக் கிறார்களா என்று வினவ, இராயப்பர்: ""ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவிய வார்த்தைகள் உம்மிடத் திலிருக்கின்றதே. தேவ சுதனாகிய கிறீஸ்துநாதர் நீர்தான் என்று நாங்கள் விசுவசித்தும் அறிந்துமிருக்கிறோம்'' (அரு.6:68-70) என்று விசுவாசத்தை வெளியிட்டார்.

வேறொரு முறை, சேசுநாதர் அப்போஸ் தலர்களிடம் தன்னை யாரென்று அவர்கள் கருது கிறார்கள் என்று விசாரித்த உடனே, சீமோன் இராயப்பர், ""நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன்'' என்று விசுவாச அறிக்கையிட்டார் (மத்.16:15-16).

இதனால் மகிழ்ந்த நமதாண்டவர் பாறை யாகிய அவர்மீது தமது திருச்சபையைக் கட்டு வதாகவும், மோட்சத்தின் திறவுகோல்களை அவருக்கு கொடுப்பதாகக் கூறி (மத். 16:17-19) திருச்சபையின் தலைவராக, பூலோகத்தில் கட்டு வதும், கட்டவிழ்ப்பதுமாகிய அதிகாரத்தையும் வழங்கினார் (மத்.16:13-20).


இராயப்பரின் உயர்வுகள்

திருச்சபையின் தலைவராக, அப்போஸ்தலர்களுக்கெல்லாம் தலைவராக ஏற்படுத்தப் பட்ட அர்ச். இராயப்பர், சேசுவின் தெய் வீகத்தை அறியவும் அதனை எண்பிக்கவும் அறிவு பெற்றார். எப்படியெனில், தபோர் மலையில் நமதாண்டவர் மறுரூபமடைந்த போது அங்கிருந்த மூன்று பேரில் அர்ச். இராயப்பரும் ஒருவர்! (மத்.17:1-6).

ஜெப ஆலயத் தலைவன் ஜயீரென்பவனுடைய குமாரத்தியையும், லாசரையும் உயிர்ப்பித்தபோதும் உடனிருந்து ஆண்டவரின் தெய்வீகத்தை அறிந்தவர் (மாற்கு. 5:222-41).

உயிர்த்த ஆண்டவர் மற்ற அப்போஸ்தலர்களுக்கு காட்சி கொடுக்கும் முன்பாக இராயப்பருக்குத் தரிசனமானார். சேசுவால் அவரது விசுவாசிகளை மேய்க்கும் அலுவல் வழங்கப்பட்டு, மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார்.

தொடக்கத் திருச்சபையின் அனைத்துக் காரியங்களையும் அர்ச். இராயப்பரே நடத்தினார். யூதாசுக்குப் பதிலாக அர்ச். மத்தியாசை அப்போஸ்தலராக ஏற்படுத்தினார்.

பெந்தேகோஸ்து நாளில் சேசுவின் சுவிசேஷத்தை யூத மக்களுக்கு அதிகாரத்தோடு போதித்தார். முதன்முதலில் புதுமையைச் செய் ததும் இராயப்பரே!


ரோமையில் வேதசாட்சியம்!

தேவ சித்தத்தால் நீரோவின் ஆட்சியில் கி.பி.67-ல் ரோமையில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு வேதசாட்சியமடைந்த அர்ச். இராயப்பர் ரோமானிய பேரரசின் மையத் திலேயே கிறீஸ்துவின் அப்போஸ்தலிக்க ஸ்தானத்தை நிறுவினார்! வத்திக்கான் குன்றில் அடக்கம் செய்யப்பட்ட அவரது கல்லறைக்கு மேலே கத். திருச்சபையின் தலைமை இடமாகத் திகழும் அர்ச். இராயப்பர் பேராலயம் கட்டப்பட்டுள்ளது.

திருச்சபை ஜூன் 29-ம் தேதியை அர்ச். இராயப்பரின் திருநாளாகவும், பிப்ரவரி 22-ம் நாளை அர்ச். இராயப்பரின் தலைமை பீடத் திருநாளாகவும் கொண்டாடுகிறது.