நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 01

யூதா தளக்கர்த்தனாக நியனனம் பெற்றுச் சத்துராதிகளை எதிர்த்தல். 

1. ஜோசுவா மரித்தபிறகு இஸ்ராயேல் மக்கள் கர்த்தரை நோக்கிப் பிரார்த்தித்து: கானானையரை எதிர்த்து எங்களுக்கு முன் சென்று யத்தத்தை நடத்துகிறவர் யார் என்று வினவினார்கள்.

2. அப்பொழுது கர்த்தர்: யூதா எழுந்தி ருந்து நடக்கக்கடவான். அந்தத் தேசத்தை அவன் கைவசப் படுத்தினோம் என்றார்.

3. யூதா தன் சகோதரனாகிய சிமெயயா னை நோக்கி: நீ என் பங்கில் நின்று என் னோடுகூட கானானையரை எதிர்த்து யுத்தஞ் செய்ய வா. நானும் உன் பங்கில் இருந்து உன் சத்துராதிகளை எதிர்ப்பேன் எனறான். அப்படியே சிமெயோனும் அவனோடு சென்றான்.

4. யூதா படையுடன் செல்லவே கானா னையரையும், பெரேசையரையுங் கர்த்தர் அவனுக்குக் கையளித்தார். பெசேக் பட்ட ணத்தில் பதினாயிரம்பேர்களையுங் கொன் றார்கள்.

5. பெசேக் என்னுமிடத்தில் அதொனி பெ சேக்கையுங் கண்டு அவனையும் எதிர்த்துக் கானானையரையும் பெரேசையரையும் முறிய அடித்தார்கள்.

6. அதொனி பெசேக் என்பவனோ ஓடிப் போகவே அவனைப் பின்தொடர்ந்து பிடித்து அவன் கை கால் விரல் நுனிகளை வாங்கிப் போட்டார்கள்.

7. அதொனி பெசேக் என்பவன்: எழுபதரசர்கள் கை கால் விரல் நுனிகள் வாங்கப்பட்டு என் சாப்பட்டு மேசையின்கீழ் வி ழும் மிகுதியான உணவுகளை அருந்தினார் கள். நான் பிறருக்குச் செய்தவண்ணமே சர்வே சுரனும் எனக்குச் செய்துவிட்டார் என்றான். அவனை எருசலேமுக்கு நடத்திக்கொண்டு போனார்கள்; அவன் அவ்விடத்தில் மரித் தான். 

8. யூதாவின் மக்கள் எருசலேம் பட்டணத் தை முற்றிக்கைபோட்டு அதனுள் பிரவே சித்துச் சகலரையும் வாளால் சங்காரஞ் செய்து பட்டணம் முழுமையும் அக்கினிக்கு இரை யாக்கினார்கள்.

9. அதன் பிறகு அவர்கள் போய் மலை இராஜ்ஜியங்களிலும், தென் சீமைகளிலும், சம பூமியிலும் வாசஞ் செய்திருந்த கானானை யரை எதிர்த்தார்கள்.

10. பிற்பாடு பழைய காரியாத்தார்பே என்னும் எபிரோனில் வாசஞ்செய்த கானா னையருக்கு விரோதமாய் யூதா சென்று சே சாயி, அயிமான், தோல்மாயி என்றவர்களை வென்றான்.

11. அவ்விடத்தினின்று புறப்பட்டு முன் காலத்தில் காரியாத்சேபர் அதாவது: கல்விமா நகர் என்ற தாபீர் வாசிகளின்மேல் படையய டுத்தான்.

12. அப்போது காலேப் என்பவன்: காரி யாத் சேபேர் பட்டணத்தை எவன் பிடித்து அழிக்கிறானோ அவனுக்கு என் குமாரத்தி அக்சம் என்பவளை விவாகஞ்செய்து கொடுப்பேன் என்றான். 

13. காலேபின் இளைய சகோதரன் செனே சினுடைய குமாரன் ஒட்டோனியேல் அப் பட்டணத்தைப் பிடித்தபோது காலேப் அவனுக்குத் தன் குமாரத்தி அக்சம் என்ப வளை மனைவியாகக் கொடுத்தான்.

14. இவள் பிராயணமாய்ப் புறப்பட்டுப் போகையில் அவள் புருஷன் அவளை நோக்கி அவள் தகப்பனிடத்தில் விளைநிலம் கேட்கும் படி ஏவினான்.அவளும் கழுதையின் மேல் உட்கார்ந்து பெருமூச்செறிந்தபோது, கா லேப்: உனக்கென்ன என்றவளைக் கேட் டான். 

15. அவளோவென்றால்: அடியாளுக்கு உம்முடைய ஆசீர்வாதங் கட்டளையிடும், வ ரட்சியான நிலத்தைத் தந்த நீர் எனக்கு நீர் வளமான நிலத்தையுங் கிருபைசெய்யும் என்றாள். காலேப் என்பவன் மேற்புறத்திலுங் கீழ்புறத்திலுமிருந்து நீர்பாயும் நிலத்தை அவளுக்குக் கொடுத்தான்.

16. மோயீசனின் உறவினான சீனயிசின் மக்கள் யூதாவின் மக்களோடு பனைமரத் தூரினின்று புறப்பட்டு அவன் பாகத்துக்குக் கிடைத்த ஆராத் ஊருக்குத் தெற்கிலுள்ள வனாந்தரத்திற்கு வந்து அங்கு குடியேறினார் கள். 

17. யூதா தன் சகோதரன் சிமெயோ னோடு சென்று இருவருஞ் சேர்ந்து சேபாத் தூரில் சஞ்சரித்த கானானையர்மேல் விழுந்து அவர்களைக் கொன்றார்கள். அவ்வூருக்கு ஓர்மா அல்லது சாபம் என்ற பேருண் டாயிற்று.

18. அதன் பிறகு யூதா என்பவன் காஜா வையும், அதின் சுற்று மதில்களையும், அஸ்காலோனையும், அக்காரோனையும் அதின் சுற்றெல்லைகளயும் பிடித்தான்.

19. கர்த்தர் யூதாவின்பேரில் பட்சமாயிருந்ததினால் அவன் மலை இராஜ்ஜியங்களைத் தன் சுயாதீனப்படுத்தினான். கணவாய்களில் வசித்தவர்களையோ அவன் நிர்மூலம் பண் ணக் கூடுமாயில்லை. ஏனென்றால் அவர்கள் நீளிய வாள் அமைத்த இரதங்களினின்று போர் புரிந்தார்கள். 

20. மோயீசன் கட்டளையிட்ட வண்ணம் காலேபுக்கு ஏபிரோனைக் கொடுத்ததில் அ வன் அவ்விடமிருந்த ஏனாக்கின் மூன்று மக்களையுஞ் சங்கரித்தான்.

21. பெஞ்சமீன் மக்கள் எருகலேமில் வசித்த ஜெபுசேயரைச் சங்காரம் பண்ணினதில்லை. ஜெபுசேயர் பெஞ்சமீன் மக்களோடு எருச லேமில் இந்நாள்வரைக்குங் குடியிருக் கிறார்கள்.

22. ஜோசேப்பின் குடும்பமும் பேட்டேல் ஊருக்குச் சென்றது. கர்த்தரும் அவர்களோடி ருந்தார்.

23. எப்படியயன்றால் லூசாவென்று முன்னர் அழைக்கப்பட்ட பட்டணத்தை அவர்கள் முற்றிக்கைப் போட்டபோது,

24. அப்பட்டணத்தினின்று வெளிப்பட்டு வந்த ஒரு மனிதனைக் கண்டு அவனை நோக்கி, பட்டணத்துக்குள் பிரவேசிக்க வழி காட்டினால் உன்னைக்காப்பாற்றுவோம் என்றார்கள்.

25. அவன் வழி காண்பித்தான்; அவர்கள் பட்டணத்தை வாள் முனைக்குப் பலியாக்கி னார்கள். ஆனால் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் (கொல்லாமல்) விட்டு விட்டார்கள்.

26. அவனோ தப்பித்துக்கொண்டு எத்திம் நாடு சென்று அவ்விடம் ஓர் பட்டணத்தைக் கட்டுவித்து அதற்கு லூசாவென்று பேருமிட் டான். அது இந்நாள்வரைக்கும் அப்படியே அழைக்கப்பட்டு வருகின்றது.

27. மானாசேசும் பெத்சான், தானாக் பட் டணங்களையுஞ் சிற்றூர்களையும், தோர், ஜே பிளாம், மகேதோ பட்டணவாசிகளையும் சிற்றூர்களையும் அழித்தவனல்ல. கானானை யரும் அவர்களோடு குடியிருக்கத் துடங்கி னர்.

28. இஸ்ராயேலரும் அதிக பலவான் களான பிறகு அவர்களைத் தங்களுக்குப் பகுதி கட்டும்படி செய்தார்களே தவிர அவர்களை முற்றிலும் அழித்தவர்களல்ல.

29. எப்பிராயீமும் காசேரில் வசித்த கா னானையரை நிர்மூலம்பண்ணாமல் அவர்க ளோடு வாசஞ் செய்தான்.

30. சபுலோன், கேத்திரோன் குடிகளையும் நாலோப் பட்டணத்தாரையுஞ் சங்காரம் பண்ணவில்லை; ஆனால் கானானையர் அவ னோடு வாழ்ந்து அவனக்குப் பகுதி கட்டி வந்தார்கள், 

31. ஆசேரும் ஆக்கோ, சிதோன், அலாப், அக்காசிப், எல்பா, ஆபெக், ரோக் பட்டணத் தார்களைச் சங்கரியாமல்,

32. அந்நாடுகளில் குடியிருந்த கானானை யரோடு வாசஞ் செய்தான், அவர்களைக் கொன்றவனல்ல.

33. நேப்தளியும் பெத்சாமெஸ், பெத்தா னாத் என்ற ஊரார்களை நிர்மூலம் பண்ணவில்லை. அவ்விடம் குடியிருந்த கானா னையரோடு தானுஞ் ஜீவித்தான்; பெத் சாமித்தாரும் அவனுக்குப் பகுதிகட்டி வந்தார்கள்.

34. அமோறையன் தான் மக்களைச் சம பூமியில் இறங்கவொட்டாமல் தடுத்து மலைகளிலேயே நெருக்கினான்.

35. அயலோன், சாலேபிமிலுள்ள ஆரேஸ் அதாவது களிமண் எனப்பட்ட மலையில் வசித்துவந்தான். ஜோசேப் குடும்பத்தார் அதிக பலவான்களானபோது அமோறை யரைத் தங்களுக்குப் பகுதி கட்டும்படி செய் வித்தார்கள்.

36. அமோறை யர் தேசத்தின் எல்லைகள் ஏதென்றால்: ஸகோர்பியோன், பேத்ரா, மலைத்தொடரும், மேட்டுப் பூமியுமாம்.