இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நல்ல பிரதிக்கினை செய்வதன் முக்கியத்துவம்

உலகத்தில் இன்று எல்லாவகைப் பாவங்களும் கடலைப் போல் பெருக்கெடுத்திருக்கின்றன. அவை தேவ தண்டனை மனுக்குலத்தைத் தாக்கும்படி கூச்சலிடுகின்றன. இன்றைய உலகின் பாவங்களுக்கு முன், பெருவெள்ளத்திற்கு முந்தின உலகின் பாவநிலையும், சொதோம், கொமோராவின் பாவநிலையும் ஒன்றுமேயில்லை என்னும் அளவுக்கு பாவமே இன்று வாழ்வின் நடைமுறைச் சட்டமாகக் கூட ஏற்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நம் ஆண்டவரும், நம் வியாகுல அன்னையும் கடவுளுக்கும், நமக்கும் மத்தியில் நின்று, கடவுளின் கோபத்தைத் தணித்து, மனுக்குலத்தைத் தேவ தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், தேவ கோபத்தின் கரத்தின் பாரம் தாங்க இயலாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில்தான் கடவுளையும், தங்கள் அயலாரையும் நேசிக்கும் நல்ல கிறீஸ்தவர்கள் தங்கள் ஜெப, தவ, பரிகார வாழ்வால் தங்களுக்கு உதவும்படி சேசுவும் மாதாவும் அவர்களை அவசரமாக அழைக்கிறார்கள். இன்று நம் ஒத்துழைப்பு நம் ஆண்டவருக்கும், மாதாவுக்கும் மிகவும் தேவைப்படுகிறது. இதில் நல்ல கிறீஸ்தவர்களும் கூட அசட்டைத்தனமுள்ளவர்களா யிருப்பது ஆண்டவரையும் மாதாவையும் வெகுவாக நோகச் செய்கிறது. "தங்களுக்காக ஜெபிக் கவும், பரித்தியாகம் செய்யும் யாருமில்லாததால் நரகத்திற்குச் செல்கிற" எண்ணற்ற ஆன்மாக்கள் சேசுமரியாயின் திரு இருதயங்களின் வேதனைகளை அளவற்ற விதமாய் அதிகரிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் சேசுநாதர் பாரலேமோனியாவிலும், தேவ அன்னை பாத்திமாவிலும், "நீயாவது எனக்கு ஆறுதல் தர முயற்சி செய்" என்ற ஒரே வார்த்தைகளை நம்மிடம் கூறுகிறார்கள். நம் ஒவ்வொரு செயலையும், துன்பத்தையும் பரிகாரமாக்குவதும், தலை வெள்ளி, முதல் சனி பக்தி களை பக்தியோடு அனுசரிப்பதுமே அவர்கள் கேட்கும் வேண்டுகோள்களாக இருக்கின்றன.