சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 48

எலியாஸ் தீர்க்கத்தரிசியின் பக்தி உருக்கம், அவர் செய்த அற்புதங்கள்.

1. அக்கினியைப்போல எலியாஸ் தீர்க்கதரிசி எழுந்தார்; பந்தம்போல, அவரது வார்த்தை பற்றியெரிந்தது.

2. அவர் அவர்கள் மேல் பஞ்சம் வரச் செய்தார்; தங்கள் பொறாமையால் அவர்கள் அவருக்குக் கோபம் மூட்டியவர்கள் ஒரு சிறு தொகையாகக் குறைந்து போனார்கள். ஏனெனில் அவர்களால் ஆண்டவருடைய கற்பனைகளைச் சகிக்க முடியவில்லை.

3. ஆண்டவருடைய வார்த்தையால் வானத்தை அடைத்தார்; வானத்தினின்று மும்முறை அக்கினி இறங்கச் செய்தார்.

4. இவ்வாறு எலியாஸ் தம் அற்புதச் செயல்களால் பிரபலமானார்; உம்மைப் போல மகிமை பாராட்டக்கூடியவன் யார்?

5. தேவனாகிய ஆண்டவரின் வார்த்தையால் நீர் பாதாளத்தினின்றும், மரித்தோரின் பாகத்தினின்றும், மரித்தவனை உயிரோடு எழுப்பினீர்.

6. மன்னர்களை அழிவிற்குள் விழச் செய்தீர்; எளிதாய் அவர்களது வல்லமையைத் துண்டுதுண்டாய் ஒடித்தீர்; மகிமையுள்ளவர்களைப் படுக்கையிலிருந்து அகற்றினீர்.

7. அவர்கள் சினாய் மலையில் தீர்ப்பைக் கேட்டார்கள்; ஒரேப் மலையில் பழிவாங்குதலின் தீர்ப்பு களைக் கேட்டார்கள்.

8. நீர் அரசர்களைத் தவத்திற்கு அபிஷேகம் செய்தீர்; உமக்குப் பின் தீர்க்கதரிசிகள் உம் இடத்தை வகிக்கச் செய்தீர்.

9. அக்கினியாலான சுழற்காற்றில் நெருப்பாலான குதிரைகள் பூட்டிய இரதத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டீர். 

10. ஆண்டவருடைய கோபத்தைத் தணிக்கவும், தந்தையின் இருதயத்தை மகனோடு சமாதானப் படுத்தவும், யாக்கோபின் கோத்திரங் களை அவற்றின் மகத்துவ நிலையில் மீண்டும் ஸ்தாபிக்கவும் காலங்களின் தீர்மானங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறீர்.

11. உம்மைப் பார்த்தவர்களும், உமது நட்பால் மகிமைப்படுத்தப் பட்டவர்களும் பாக்கியவான்கள்.

12. ஏனெனில் நம் வாழ்வில் மட்டுமே நாம் வாழ்கிறோம்; சாவுக் குப் பிறகு, நம் பெயர் அப்படியே இராது.

13. உண்மையாகவே எலியாஸ் சுழற்காற்றால் மூடப்பட்டார்; எலிசேயுவில் அவரது ஆவி நிரப்பப் பட்டது; தம் நாட்களில் அவர் அரசனுக்குப் பயப்படவில்லை; அவரைவிட அதிக வல்லமை யுள்ளவன் வேறு எவனுமில்லை.

14. எந்த வார்த்தையும் அவரை மேற்கொள்ள முடியவில்லை; இறந்த பின்னும் அவருடைய சரீரம் தீர்க்கதரிசனம் சொன்னது.

15. தமது வாழ்நாளில் அவர் பெரும் அற்புதங்களைச் செய்தார்; மரணத்திலும் அற்புதங்களை நடத்தினார்.

16. இவை எல்லாவற்றாலும் கூட மக்கள் மனந்திரும்பவில்லை; தங்கள் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு பூமி யெங்கும் சிதறடிக்கப்படும் வரை அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு விலகவுமில்லை.

17. தாவீதின் குடும்பத்தில் ஒரு சிறிய மக்களினமும், ஓர் அரசனும் மட்டுமே மீதமாக விடப்பட் டார்கள்.

18. இவர்களில் சிலர் கடவுளுக் குப் பிரியமானதைச் செய்தார்கள்; மற்றவர்களோ அநேக பாவங்களைக் கட்டிக்கொண்டார்கள்.

19. எசெக்கியாஸ் தம் நகரத்தைப் பலப்படுத்தினார்; அதின் மத்தியில் தண்ணீர் கொண்டுவந்தார்; இரும் பைக் கொண்டு பாறையைக் குடைந் தார்; தண்ணீருக்காகக் கிணறு கட்டினார்.

20. அவருடைய நாட்களில் சென்னாக்கெரிப் எழுந்து, ராப்சா சேஸை அனுப்பினான்; அவன் அவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை உயர்த்தினான்; சியோன் மேல் தன் கையை நீட்டினான்; தன் வல்லபத்தால் ஆங்காரம் கொண் டான்.

21. அப்போது அவர்கள் இருதயங் களும், கரங்களும் நடுங்கின; பிரசவ வேதனைப்படும் பெண்களைப் போல வாதைப்பட்டார்கள்.

22. இரக்கமுள்ள ஆண்டவரை அவர்கள் மன்றாடினார்கள்; கைகளை விரித்து வானத்தை நோக்கி உயர்த்தி னார்கள்; பரிசுத்த ஆண்டவரான கடவுள் உடனே அவர்களுடைய குரலைக் கேட்டார்.

23. அவர்களது அக்கிரமங்களை அவர் நினைக்கவில்லை; அவர் களை விரோதிகளுக்குக் கையளிக்க வில்லை; ஆனால் பரிசுத்த தீர்க்க தரிசியான இசையாஸ் கையால் அவர்களைச் சுத்திகரித்தார்.

24. அசீரியரின் படைகளை முறி யடித்தார்; ஆண்டவருடைய சம்மன சானவர் அவர்களை அழித்தார்.

25. ஏனெனில், எசெக்கியாஸ் கடவுளுக்குப் பிரியமானதைச் செய் தார்; தம் தந்தையாகிய தாவீதின் வழியில் வீரத்தோடு நடந்தார். அதைப் பெரிய தீர்க்கதரிசியும், கடவுளின் பார்வையில் பிரமாணிக்க முள்ளவருமான இசையாஸ் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

26. அவரது நாட்களில் சூரியன் பின்னால் போனது; அவர் அரசனின் வாழ்நாளைக் கூட்டினார்.

27. ஒரு மேலான உணர்வோடு இறுதியில் நிகழவிருக்கும் காரியங் களை அவர் கண்டார்; சீயோனில் துக்கித்துப் புலம்பியவர்களைத் தேற்றினார்.

28. என்றென்றைக்குமாக நிகழ விருக்கும் காரியங்களையும், மறை வான காரியங்களையும் அவை வருமுன்பே வெளிப்படுத்தினார்.