சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 47

நாத்தான், தாவீது என்பவர்களைப் பற்றியது.

1. அதன்பின் தாவீதின் நாட்களில் நாத்தான் தீர்க்கதரிசி எழும்பினார். 

2. சதையினின்று கொழுப்பு பிரிக்கப்படுவது போல, இஸ்றாயேல் மக்களிடையே இருந்து தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. செம்மறிக்குட்டிகளோடு விளையாடுவதுபோல, சிங்கங்களோடு விளையாடினார்; தமது வாலிபத்தில் தம் மந்தையின் ஆட்டுக்குட்டிகளோடு செய்வதுபோல கரடிகளோடும் செய்தார்.

4. இராட்சதனைக் கொன்று தம் மக்களின் நிந்தையை அவர் நீக்கி விடவில்லையா?

5. தம் கரத்தை உயர்த்தி, கவணின் கல்லைக் கொண்டு கோலியாத்தின் பெருமையை அவர் அடித்து வீழ்த்தினார்.

6. ஏனெனில், அவர் சர்வ வல்லப ஆண்டவரை மன்றாடினார்; தாவீது பலமிக்க போர்வீரனைக் கொல்ல வும், தமது மக்களின் கொம்பை ஸ்தாபிக்கவும், சர்வ வல்லப ஆண்ட வர் அவருடைய வலக்கரத்திற்குப் பலம் தந்தார். 

7. இப்படியே பத்தாயிரம் பேரில் அவர் அவரை மகிமைப்படுத்தினார்; ஆண்டவரின் ஆசீர்வாதங்களில், மகிமையின் முடியை அவருக்கு வழங்குவதில் அவரை உயர்த்தினார்.

8. ஏனெனில், எப்பக்கத்திலும் அவர் விரோதிகளை முறியடித்தார்; எதிரிகளான பிலிஸ்தியரை இந்நாள் வரைக்கும் நிர்மூலம்பண்ணினார்; எப்போதைக்கும் அவர்களுடைய கொம்பை அழித்து விட்டார்.

9. அவர் தமது சகல காரியங்களி லும் பரிசுத்தருக்கு நன்றி செலுத்தி னார்; மகிமையின் வார்த்தைகளால் உந்நத கடவுளைப் புகழ்ந்தார்.

10. தம் முழு இருதயத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்; தம்மை உண்டாக்கிய கடவுளை நேசித்தார்; அவருடைய எதிரிகளுக்கு விரோத மாய் அவருக்கு வல்லமை தந்தார்.

11. பீடத்திற்கு முன் பாடகர்களை நிற்கும்படி செய்தார்; அவர்களு டைய குரல்களால் இனிய இராகங் களை உருவாக்கினார்.

12. திருநாட்களை அவர் அழகு படுத்தினார்; அவர்கள் ஆண்டவ ருடைய திருப்பெயரைத் துதிக்கவும், காலையில் கடவுளுடைய பரிசுத்த தனத்தை ஏற்றிப் போற்றவும் தம் வாழ்வின் இறுதி வரைக்கும் கூட திருநாட்களை அவர் ஒழுங்குபடுத்தி வைத்தார்.

13. ஆண்டவர் அவரது பாவங் களை அகற்றினார்; அவருடைய கொம்பை எப்போதைக்கும் உயர்த்தி னார்; இராச்சியத்தின் ஓர் உடன் படிக்கையையும், இஸ்ராயேலில் ஒரு மகிமையின் சிம்மாசனத்தையும் அவருக்குக் கொடுத்தார்.

14. அவருக்குப் பின் ஞானமுள்ள ஒரு மகன் எழுந்தான்; அவன் நிமித்தம் அவர் எதிரிகளின் முழு வல்லமையையும் அழித்தார்.

15. சாலமோன் சமாதான நாட் களில் ஆண்டு வந்தார். அவர் தம் திருப்பெயரில் ஓர் ஆலயத்தைக் கட்டும்படியாகவும், என்றென்றைக் குமாக ஒரு பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணவும், சர்வேசுரன் அவருடைய எதிரிகளையெல்லாம் அவருக்குக் கீழ்ப்படுத்தினார். ஓ, நீ உனது வாலிபத்தில் எவ்வளவு ஞான முள்ளவராயிருந்தாய்!

16. நதியைப்போல ஞானத்தால் நிரப்பப்பட்டாய்; உன் ஆத்துமம் பூமியை மூடியது.

17. உவமைகளால் விடுகதைகளை பெருக்கினாய்; வெகு தூர தீவுகளுக்கும் உன் பெயர் சென்றது, உனது சமாதானத்தில் நீ நேசிக்கப் பட்டாய்.

18. உன் சங்கீதங்களாலும் பழ மொழிகளாலும், உவமைகளாலும், விளக்கங்களாலும் நாடுகள் உன்னைக் கண்டு அதிசயித்தன.

19. இஸ்றாயேல் தேவனென்று பெயர் கொண்ட தேவனாகிய ஆண்டவரின் திருப்பெயரால்,

20. நீ பொன்னைப் பித்தளையைப் போல சேகரித்தாய், வெள்ளியை ஈயத்தைப் போலப் பெருக்கினாய்.

21. நீ பெண்களுக்கு உன்னையே வளைத்தாய்; உன் சரீரத்தால் நீ கீழ்ப் படுத்தப்பட்டாய்.

22. நீ உன் மகிமையைக் கறைப் படுத்தினாய்; உன் பிள்ளைகளின் மீது தேவ கோபம் இறங்கும்படி யாகவும், உன் மூடத்தனம் தூண்டப் படும்படியாகவும், உன் வித்தைக் கெடுத்தாய்; 

23. இவ்வாறு இராச்சியத்தை நீ பிளவுபடுத்தினாய், அரசாள்வதற்கு; எபிராயீம் கோத்திரத்தினின்று கலகம் செய்யும் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தினாய்.

24. ஆனால் கடவுள் தமது இரக் கத்தை விட்டுவிடமாட்டார்; தமது சொந்த கைவேலைகளை அவர் அகற்றி விடவும் மாட்டார், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் சந்ததியை வேரோடு பிடுங்கவும் மாட்டார்; ஆண்டவரை நேசிப்பவனுடைய வித்தை அவர் முற்றிலுமாக அகற்றிவிட மாட்டார்.

25. ஆகவே யாக்கோபுக்கு எஞ்சிய வர்களைத் தாம் விட்டு வைத்தது போல, தாவீதுக்கும் அவர் குடும் பத்தில் சிலரை விட்டு வைத்தார்.

26. சாலமோன் தம் பிதாக்களோடு ஒரு முடிவை அடைந்தார்.

27. தமக்குப் பின் தன் சந்ததியில் மக்களினத்தின் மூடத்தனத்தை,

28. தன் ஆலோசனையால் மக்க ளைப் பாவத்தில் விழச்செய்த, குறைந்த ஞானமுள்ள ரோபோவாமையும் கூட அவர் விட்டுச் சென்றார். 

29. மேலும் நாபாத்தின் மகனான ஜெரோபோவாமையும் விட்டு வைத்தார்; அவனோ இஸ்றாயே லைப் பாவத்தில் விழச் செய்தான்; எபிராயீமுக்குப் பாவ வழியைக் காண்பித்தான்; அவர்களது பாவங் களோ வெகுவாய்ப் பெருகிப் போயின.

30. அவை அவர்களைத் தங்கள் தேசத்தினின்று வெகுதூரம் அகன்று போகச் செய்தன.

31. பழிவாங்குதல் தங்கள் மீது இறங்கி வந்து, தங்கள் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அவர்கள் எல்லா அக்கிரமங்களை யும் தேடித் தேடிச் செய்தார்கள்.