சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 46

யோசுவா, காலேப் என்பவர்களை வாழ்த்துதல்.

1. நாவேயின் மகனான சேசு (யோசுவா) என்பவர் போரில் பெரும் வீரராக இருந்தார். தீர்க்கதரிசிகளில் அவர் மோயீசனின் ஸ்தானாதிபதியாக இருந்தார். தம்முடைய பெயரின்படி அவர் பெரியவராயிருந்தார்.

2. இஸ்றாயேலுக்காக ஓர் உரிமைச் சொத்தைத் தாம் சுதந்தரித்துக் கொள்வதற்காக, சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் இரட்சணியத்திற்காக, அவர்களுக்கு எதிராக எழும்பிய விரோதிகளை வெல்லும்படி, அவர் மிகப் பெரியவராயிருந்தார். 

3. அவர் தம் கரங்களை உயர்த்தி, நகரங்களுக்கு எதிராக வாள்களை நீட்டியபோது, அவர் எவ்வளவு பெரிய மகிமையை சம்பாதித்துக் கொண்டார்!

4. அவருக்கு முன் எவன் எதிர்த்து நின்றான்? ஏனெனில், விரோதிகளை ஆண்டவரே கூட்டிவந்தார்.

5. அவரது கோபத்தில் சூரியன் நிறுத்தப்படவில்லையா? ஒரு நாள் இரண்டு நாட்களைப்போல் ஆக வில்லையா?

6. எதிரிகள் எப்பக்கத்திலும் சூழ்ந்து தம்மைத் தாக்கியபோது, அவர் உன்னதரான அரசரை மன்றாடி னார்; மகிமையுள்ள பரிசுத்த கடவுள் அவர் மன்றாட்டைக் கேட்டுக் கல் மழைகளை அதிதீவிர விசையோடு அவர்கள் மீது பொழிந்தார்.

7. தம் எதிரிகளின் நாட்டின்மீது அவர் கடுமையான தாக்குதல் தொடுத்தார். இறங்கி வருகையில் அவர் தம் எதிரிகளை அழித் தொழித்தார்.

8. மக்களினங்கள் தமது வல்ல மையை அறிந்துகொள்ளும்படியாக வும், கடவுளை எதிர்த்துப் போராடு வது எளிதானதல்ல என்று காட்டும் படியாகவும், அவர் வல்லபமுள்ள வரைப் பின்சென்றார். 

9. மோயீசனின் நாட்களில், அவரும் ஜெபோனின் மகனான காலேபும், எதிரியை எதிர்த்து நின்ற திலும், மக்களைப் பாவத்தினின்று தடுத்ததிலும், தீய முறுமுறுப்பை அமைதிப்படுத்துவதிலும் அவர் இரக்கச் செயல் ஒன்றைச் செய்தார்.

10. அவர்கள் இருவரும் கடவுளால் நியமிக்கப்பட்டு, ஆறுலட்சம் காலாட்களோடு ஆபத்தினின்று விடுவிக்கப்பட்டு அவர்களைப் பாலும் தேனும் பொழியும் நாடாகிய அவர்களுடைய உரிமைச் சொத்துக்குக் கூட்டி வந்தார்கள். 

11. காலேபுக்கும் ஆண்டவர் பலத்தைக் கொடுத்தார்; அவர் நாட்டின் உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்லும்படியாக, முதிர்வயது வரையிலும் கூட அவருடைய பலம் அவரோடு தொடர்ந்து இருந்தது. அவருடைய வித்து அந்நாட்டைத் தன் உரிமைச் சொத்தாகப் பெற்றுக் கொண்டது.

12. பரிசுத்தரான கடவுளுக்குக் கீழ்ப்படிவது நல்லதென்று இஸ்றா யேல் மக்களெல்லாரும் பார்க்கும் படி இவ்வாறு நிகழ்ந்தது.

13. பிறகு தத்தமக்குரிய பெய ரோடு நியாயாதிபதிகள் ஒவ்வொருவராய் வந்தார்கள்; அவர்கள் இருதயம் கெட்டுப் போகவில்லை; அவர்கள் ஆண்டவரிடமிருந்து அகன்றுபோகவில்லை.

14. அவர்களுடைய ஞாபகம் வாழ்த்தப்படும்படியாகவும், அவர் களது எலும்புகள் தங்கள் இடங்களி லிருந்து துள்ளியெழும்படியாகவும்,

15. அவர்களது பெயர் என்றென்றும் நிலைத்திருக்கவும், பரிசுத்த மனித ரின் மகிமை அவர்களுடைய பிள்ளைகள் வரை நிலைத்திருக்கவும், அவர்கள் இவ்வாறு கடவுளோடு இணைந்திருந்தார்கள்.

16. ஆண்டவருடைய தீர்க்கதரிசி யும், தமது தேவனாகிய ஆண்டவ ரின் நேசத்திற்குரியவருமாயிருந்த சாமுவேல் ஒரு புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். ஆண்டவரின் மக்களை ஆள அரசர்களை அபிஷேகம் செய் தார்.

17. ஆண்டவருடைய திருச்சட்டத் தால் அவர் மக்களுக்கு நீதி செலுத்தி னார்; அதை யாக்கோபின் கடவுள் கண்டார்; தமது பிரமாணிக்கத்தால் அவர் தீர்க்கத்தரிசி என்று எண்பிக்கப் பட்டார்.

18. அவர் தம் வார்த்தைகளில் பிரமாணிக்கமுள்ளவராக அறியப்பட்டார்; ஏனெனில், அவர் ஒளியின் கடவுளைக் கண்டார்.

19. மாசற்றதாகிய ஒரு செம்மறிக் குட்டியை அவர் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, எப்பக்கத்திலும் சூழ்ந்து தாக்கிய விரோதிகளை எதிர்த்துப் போரிடுவதில் அவர் ஆண்டவரை மன்றாடினார்.

20. பரமண்டலத்தினின்று ஆண்ட வர் இடியென முழங்கினார்; பெரியதோர் ஓசையால் தமது சத்தம் கேட்கப்படச் செய்தார்.

21. தீரியரின் அரசர்களையும், பிலிஸ்தியருடைய பிரபுக்கள் அனை வரையும் அவர் நசுக்கினார்.

22. உலகில் தன் வாழ்வின் முடிவின் காலத்திற்கு முன், ஆண்டவருடை யவும், அவருடைய அபிஷேகம் பெற்றவருடையவும் சமுகத்தில் எதிர்த்து நின்றார்; பணத்தையோ வேறு எதையுமோ, ஒரு பாதணியைக் கூட, அவர் எவனிடமிருந்தும் எடுத்துக் கொண்டதில்லை; எவனும் அவரைக் குற்றஞ் சாட்டியதில்லை.

23. இதன்பின் அவர் நித்திரை செய் தார்; அரசனுக்குத் தெரியப்படுத்தி னார்; தமது வாழ்வின் முடிவை அவனுக்குக் காண்பித்தார்; மக்களின் அக்கிரமத்தை அழிக்கும்படி, தீர்க்கதரிசனத்தில் பூமியினின்று தம் குரலை உயர்த்தினார்.