சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 43

சர்வேசுரனுடைய மகத்துவம் அவருடைய சிருஷ்டிகளில் விளங்குகிறது.

1. உன்னத வானமண்டலமானது அவருடைய அழகாக, தனது மகிமையுள்ள காட்சியோடு பரலோக அழகாக இருக்கிறது.

2. சூரியன் தன் உதயத்தில் தோன்றும்போது, ஒரு வியக்கத்தக்க கருவியை, மகா உன்னதக் கடவுளின் கைவேலையைக் காட்டுகிறது. 

3. நண்பகலில் அது பூமியைச் சுட்டெரிக்கிறது; அதன் சுட்டெரிக்கும் உஷ்ணத்தைத் தாங்கக்கூடியவன் யார்? உஷ்ணத்தின் வேலைகளில் சூளையைத் தொடர்ந்து எரியச் செய்பவனைப் போல:

4. சூரியன் மும்மடங்கு அதிகமாய், மலைகளை எரித்து, அக்கினிமயமான திரவ ஆவிகளை வெளியிட்டு, தன் கதிர்ளைக் கொண்டு பிரகாசித்து, கண்களைக் கூசச் செய்கிறது.

5. அதைச் சிருஷ்டித்த ஆண்டவர் மகத்தானவர்; அவரது வார்த்தைகளால் அது தன் வழியில் விரைகிறது.

6. சந்திரனும் தன் எல்லாப் பருவங்களிலும், காலத்தை அறிவிப்பதற்காகவும், உலகத்தின் அடையாளமாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

7. சந்திரனைக் கொண்டுதான் திருநாள் குறிக்கப்படுகிறது; தன் உத்தமதனத்தில் குறையும் ஓர் ஒளி.

8. அதன் பேரைக் கொண்டுதான் மாதம் குறிக்கப்படுகிறது; அது வரவர தன் முழுமையில் அற்புதமான விதத்தில் அதிகரிக்கிறது.

9. உன்னத சேனைகளின் கருவியாயிருந்து, பரலோக ஆயுதக் கிடங்கில் மகிமையோடு அது பிரகாசிக்கிறது.

10. நட்சத்திரங்களின் மகிமை வானத்தின் அழகாக இருக்கிறது; ஆண்டவர் உன்னதத்தினின்று பூமியைப் பிரகாசிப்பிக்கிறார்.

11. பரிசுத்தரின் வார்த்தைகளால் அவை தீர்மானமாய் நிற்கும், விழிப்பாயிருந்து செயலாற்றுவதில் அவை ஒருபோதும் தவறிப் போவ தில்லை.

12. வானவில்லைப் பார்; அதை உண்டாக்கியவரை வாழ்த்திப் போற்று; தன் பிரகாசத்தில் அது மிகுந்த அழகுள்ளதாயிருக்கின்றது.

13. தன் மகிமையின் சுற்றைக் கொண்டு அது வானத்தைச் சூழ்ந்து கொள்கிறது; உன்னதக் கடவுளின் கரங்கள் அதைக் காட்சிப்படுத்தின. 

14. அவர் தமது கட்டளையால் பனியைத் துரிதமாய் விழச் செய் கிறார்; தமது தீர்ப்பின் மின்னல்களை அவர் விரைவாய் அனுப்புகிறார்.

15. இதன் வழியாகப் பொக்கி ஷங்கள் திறக்கப்படுகின்றன; மேகங்கள் பட்சிகளைப்போல பறக் கின்றன.

16. அவர் தமது வல்லமையால் மேகங்களை நிறுத்தினார்; அதனா லேயே ஆலங்கட்டிகள் உடைக்கப் படுகின்றன.

17. அவர் பார்வைக்கு முன்பாக மலைகள் அதிரும்; அவருடைய சித்தத்தால் தென்றல் வீசும்.

18. அவரது இடியின் சத்தம் பூமி யைத் தாக்கும்; அப்படியே வட திசைப் புயலும், சுழற்காற்றும் செய்கின்றன.

19. பூமியைப் பிரகாசிக்கும் பறவை களைப் போல், அவர் பனியைச் சிதறடிக்கிறார், அது விழுவது வெட்டுக்கிளிகள் இறங்கி வருவது போல் இருக்கிறது.

20. அதன் வெண்மையின் அழகைக் கண் கண்டு பிரமிப்படை கிறது; அதன் மழையைக் கண்டு இருதயம் அதிசயிக்கிறது.

21. உறைந்த பனியை உப்பைப் போலப் பூமியின்மீது பொழிவார்; அது உறையும்போது, முட்செடி களின் உச்சிகளைப் போலாகும்.

22. குளிர்ச்சியான வாடைக் காற்று வீசுகிறது. தண்ணீர் படிகம்போல் உறைகிறது; நீர்த் திரள் ஒவ்வொன் றின் மேலும் அது தங்கும், நீர்நிலை களை மார்க்கவசத்தைப் போல் அது உடுத்தும். 

23. அது மலைகளை விழுங்கும்; வனாந்தரத்தைச் சுட்டெரிக்கும்; பசுமையான அனைத்தையும் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது போல விழுங்கி விடும்.

24. அனைத்திற்கும் ஓர் இன்றைய தீர்வு ஒரு மேகத்தின் விரைவான வருகைதான். வருகிற வெப்பத்தால் அதைச் சந்திக்கும் பனித்துளி, அதை அடக்கி மேற்கொள்ளும்.

25. அவருடைய வார்த்தையால் காற்று அசையால் நிற்கிறது; தமது நினைவால் அவர் ஆழ்கடலை அமர்த்துகிறார்; ஆண்டவர் அதில் தீவுகளை நட்டு வைத்திருக்கிறார்.

26. கடல் பயணம் செய்பவர்கள் அதிலுள்ள ஆபத்துகளைப் பற்றிச் சொல்வார்களாக; நாம் அதை நம் செவிகளால் கேட்கும்போது, பிரமித் துப் போவோம்.

27. அதில் மகத்தான, அற்புதமான கைவேலைகள் இருக்கின்றன: பல வகையான மிருகங்களும், சகல ஜீவராசிகளும், திமிங்கிலங்களாகிய இராட்சதப் படைப்புகளும் இருக் கின்றன. 

28. அவர் வழியாக அவற்றின் பயணத்தின் முடிவு தீர்மானிக்கப் படுகிறது; அவருடைய வார்த்தை யால் எல்லாக் காரியங்களும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

29. நாம் அதிகம் சொன்னாலும், வார்த்தைகள் இன்னும் போதாமல் இருக்கும்; முடிவான வார்த்தை என்னவெனில், அவரே அனைத்து மாயிருக்கிறார்.

30. அவரை மகிமைப்படுத்த நம்மால் என்ன செய்ய முடியும்? ஏனெனில், சர்வ வல்லபர்தாமே தம் எல்லாக் கைவேலைகளுக்கும் மேற்பட்டவராயிருக்கிறார்.

31. ஆண்டவர் பயங்கரமுள்ளவர், பயங்கரத்திற்குரிய மிதமிஞ்சிய மேன்மையுள்ளவர், அவருடைய வல்லமை வியப்பிற்குரியது.

32. உங்களால் முடிந்த வரை அதிக மாக ஆண்டவரை மகிமைப்படுத் துங்கள், ஏனெனில் அப்போதும் அவர் நம் மகிமைக்கு வெகுவாய் அப்பாற்பட்டவராயிருப்பார், அவருடைய உன்னத மகத்துவம் அதிசயத்திற்குரியது. 

33. ஆண்டவரை வாழ்த்தி உங்க ளால் முடிந்த வரைக்கும் அவரை உயர்த்துங்கள்; ஏனெனில் அவர் சகல புகழ்ச்சிக்கும் மேலானவர்.

34. அவரை ஏற்றிப் போற்றும் போது, உங்கள் பலத்தையெல்லாம் பயன்படுத்துங்கள்; சோர்ந்து போக வேண்டாம். ஏனெனில், போதுமான அளவுக்கு அவரைப் போற்றித் துதிக்க உங்களால் ஒருபோதும் முடியாது.

35. அவரைப் பார்ப்பவன் யார்? அவரை அறிவிப்பவன் யார்? அவர் ஆதியிலிருந்தே இருப்பதுபோல் அவரை ஏற்றிப் போற்றுகிறவன் யார்?

36. இவற்றைவிடப் பெரிய இன்னும் அநேக காரியங்கள் நம்மிட மிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன; ஏனெனில் அவருடைய கைவேலை களில் ஒரு சிலவற்றை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.

37. சகலத்தையும் ஆண்டவரே சிருஷ்டித்தார்; தெய்வ பக்தியுள் ளவர்களுக்கு அவர் ஞானத்தைத் தந்தருளினார்.