சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 42

இரகசியத்தைக் காப்பாற்றுவது.

1. நீ கேட்ட வார்த்தையைத் திருப்பிச் சொல்லாதே! இரகசியமாயிருப்பதை வெளிப்படுத்தாதே! அப்போதுதான் நீ வெட்கமடைய மாட்டாய், சகல மனிதருக்கும் முன்பாக ஆதரவைக் கண்டடைவாய்; இந்தக் காரியங்களில் எதைப் பற்றியும் வெட்கப்படாதே; அதன் மூலம் எந்த மனிதனும் பாவம் செய்வதை ஏற்றுக்கொள்ளாதே. 

2. உந்நதக் கடவுளின் திருச் சட்டத்தைப் பற்றியும், உடன்படிக்கை யைப்பற்றியும், அவபக்தியுள்ளவனை நீதிமானாக்கும் தீர்மானத்தைப் பற்றியும்;

3. தோழர்களுடையவும் பயணிகளுடையவும் பிரச்சினை பற்றியும், நண்பர்களின் உரிமைச் சொத்தைத் தானம் செய்வது பற்றியும்;

4. தராசு மற்றும் எடைக்கல்லின் துல்லியத்தைப் பற்றியும், அதிகமாக அல்லது குறைவாகப் பெறுவது பற்றியும்;

5. வாங்குவதில் நடக்கும் ஏமாற்று பற்றியும், வியாபாரிகளைப் பற்றியும், பிள்ளைகளை அதிகமாய்க் கண்டித்துத் திருத்துவது பற்றியும், தீயவனான அடிமையின் விலாவை இரத்தம் வடிக்கச் செய்வதுபற்றியும் பேச வெட்கப்படாதே. 

6. கெட்டவளான மனைவியை அடைத்து வைத்திருப்பது நலம்.

7. எங்கே பல கைகளுண்டோ அங்கே பூட்டிவை; கொடுப்பதையெல்லாம் கணக்கிட்டு நிறுத்துக் கொடு; கொடுத்தது வாங்கினதெல்லாம் குறித்துவை.

8. ஞானமற்றவனுக்கும், மூடனுக்கும் வாலிபரால் தீர்ப்பிடப்படுகிற முதியவர்களுக்கும் கற்பிக்க வெட்கப்படாதே; அப்போது சகலத்திலும் நல்ல அறிவுள்ளவனாகவும், உயிர் வாழும் எல்லா மனிதர்களின் பார்வையிலும் அங்கீகரிக்கப்பட்டவனாகவும் இருப்பாய்; சகலருக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்படுவாய்.

9. எந்த மனிதனும் அறியாத நேரத்தில் தந்தை மகளுக்காக விழித்தெழுகிறான். தன் வயதுக்கு மீறியவளாக அவள் ஆகிவிடாதபடியும், அவள் திருமணம் செய்துகொள்ளும் போது, வெறுப்புக்குரியவளாக ஆகிவிடாதபடியும், அவளைப் பற்றி அவன் கொள்ளும் கவலை அவனுடைய தூக்கத்தை நீக்கிவிடுகிறது. 

10. தன் கன்னிப் பருவத்தில் அவள் கெட்டுப் போய், தன் தந்தை வீட்டில் இருக்கும்போதே கருவுற்றுவிடாத படியும், கணவனோடு வாழும்போது கெட்ட நடத்தையுள்ளவளாகி விடாதபடியும் அல்லது குறைந்தபட்சம் மலடியாக ஆகி விடாதபடியும் தகப்பன் கவலை கொள்கிறான்.

11. நாணங்கெட்ட மகளைத் தீவிர மாய்க் கண்காணித்துக்கொள்; இல்லாவிடில், எந்நேரமும் அவள் உன்னை உன் எதிரிகளின் நகைப்புக் குரியவனாகவும், நகரவாசிகளால் சாடை காட்டிப் பேசப்படுபவனாகவும், மக்களிடையே நிந்தைக்குரிய வனாகவும் ஆக்கிவிடலாம். 

12. யாருடைய அழகையும் பாராதே; பெண்கள் நடுவில் தாமதித்து நில்லாதே.

13. உடைகளிலிருந்து அந்துப்பூச்சி வருகிறது; பெண்ணிடமிருந்து ஆணின் அக்கிரமம் வருகிறது.

14. நன்மை செய்யும் பெண்ணை யும், உன்னை நிந்தைக்குள்ளாக்கி வெட்கப்படுத்தும் பெண்ணையும் விட ஆணின் அக்கிரமமே மேல்.

15. இப்போது ஆண்டவருடைய செயல்களை நினைத்துக்கொள் வேன்; நான் பார்த்த காரியங்களை அறிவிப்பேன்; ஆண்டவருடைய வார்த்தைகள் எப்படியோ, அப்படியே அவருடைய செயல் களும்.

16. ஒளி தரும் சூரியன் அனைத் தையும் பார்த்தது, ஆண்டவருடைய செயல் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.

17. சர்வ வல்லபராகிய ஆண்டவர் தம்முடைய மகிமைக்காகத் தாம் ஏற்படுத்தி நிலைநிறுத்திய தமது அற்புதச் செயல்கள் அனைத்தையும் அறிவிக்கும்படி, அவர் அர்ச்சிய சிஷ்டவர்களை ஏற்படுத்தவில் லையா?

18. அவர் பாதாளத்திலும் மனிதர் களின் இருதயத்திலும் தேடினார்; அவர்களது தந்திரமுள்ள திட்டங் களை அவர் அறிந்துகொண்டார்.

19. ஏனெனில், ஆண்டவர் அறிவை யெல்லாம் அறிந்திருக்கிறார்; உலகத் தின் அடையாளங்களைக் கண்டிருக்கிறார்; கடந்தவைகளையும், வர விருக்கும் காரியங்களையும் அறிவிக் கிறார்; மறைவான காரியங்களின் குறிப்புகளை வெளிப்படுத்துகிறார்.

20. எந்த நினைவும் அவரிட மிருந்து தப்புவதில்லை; எந்த வார்த்தையும் அவரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள இயலாது.

21. அவர் தமது ஞானத்தின் மகிமை யுள்ள வேலைகளை அழகுபடுத்தி னார்; அவரே யுகங்களுக்கு முன்னும் சதாகாலத்திற்கும் இருக் கிறவர்; எதுவும் அவரோடு சேர்க்கப் பட முடியாது,

22. அவர் குறைக்கப்படவும் முடி யாது; யாருடைய ஆலோசனையும் அவருக்குத் தேவையில்லை.

23. அவருடைய செயல்கள் யாவும் எவ்வளவு விரும்பத்தக்கவையாக இருக்கின்றன; ஆனால், அவை களை நாம் அறிந்திருக்கக் கூடியதோ ஒரு தீப்பொறி மட்டுமே!

24. இவை யாவும் உயிர் வாழ் கின்றன; சதாகாலமும் நிலைத்திருக் கின்றன; ஒவ்வொரு பயன்பாட்டிற் கும் எல்லாமும் அவருக்குக் கீழ்ப்படி கின்றன.

25. சகலமும் இரட்டையாகவும், ஒன்றுக்கொன்று விரோதமாகவும் இருக்கிறது; எதையும் அவர் குறை பாடுள்ளதாக உண்டாக்கவில்லை.

26. ஒவ்வொருவருடைய நல்ல காரியங்களையும் அவர் நிலைப் படுத்தினார். அவருடைய மகிமை யின் காட்சியால் நிரப்பப்படுபவன் யார்?