சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 40

ஆதாமின் மக்கள்மேல் சுமத்தப்பட்ட பாரமான சுமை

1. சகல மனிதருக்கும் மாபெரும் வேலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது; ஆதாமின் மக்கள் தங்கள் தாயின் உதரத்தினின்று வெளிப்பட்ட நாள் முதல், சகலருக்கும் தாயாயிருப்பவளுக்குள் அவர்கள் அடக்கம் செய்யும் நாள்வரை அவர்கள் மீது ஒரு பாரமான நுகத்தடி வைக்கப் பட்டிருக்கிறது.

2. அவர்களுடைய எண்ணங்களும், இருதயத்தின் பயங்களும், வருங் காரியங்கள் பற்றிய கற்பனையும், அவர்களுடைய முடிவின் நாளும் அவர்களுக்குப் பார நுகத்தடியாயிருக்கின்றன.

3. மகிமையுள்ள சிம்மாசனத்தில் வீற்றிருப்பவன் முதல் தூசியிலும், சாம்பலிலும் தாழ்த்தப்பட்டவன் வரை;

4. பட்டு உடுத்தி முடிதரித்திருப் பவன் முதல் முரட்டுச் சணலாடை யால் மூடப்பட்டவன் வரை, அனை வரும் கோபம், காய்மகாரம், கலக்கம், அமைதியின்மை, மரண பயம் தீராத கோபம், சச்சரவு ஆகியவற்றிற்கு உள்ளாகிறான்.

5. படுக்கையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரவுத் தூக்கம் அவனது அறிவை மாற்றுகின்றது.

6. அவனுடைய ஓய்வு சிறிதாக வும், ஓய்வே இல்லாதது போலவும் இருக்கிறது. பிற்பாடு உறக்கத்திலும் பகல் நேரக் காவலில் இருப்பது போலிருக்கிறான்.

7. யுத்த நாளில் தப்பித்து ஓடியவனைப்போல தன்னிருதயத்தின் பார் வையில் அவன் கலக்கம் கொண் டிருக்கிறான், தன் பாதுகாப்பின் காலத்தில் எழுந்து; பயமின்மையைப் பற்றி ஆச்சரியப்படுகிறான்.

8. இவ்விதக் காரியங்கள் மனிதன் முதல் மிருகம் வரை மாம்சம் அனைத் திலும் நிகழ்கின்றன; பாவிகளிடமோ இவை ஏழுமடங்காக இருக்கின்றன. 

9. மேலும் சாவு, இரத்தம் சிந்துதல், சண்டை, வாள், அடக்கி ஒடுக்கப் படுதல், பஞ்சம், துயரம், வாதைகள்,

10. இவை யாவும் தீயவர்களுக்காக உண்டாக்கப்படுகின்றன; அவர்கள் நிமித்தமாகவே பெருவெள்ளம் வந்தது.

11. மண்ணினின்று உற்பத்தியான யாவும், மண்ணுக்கே திரும்பிப் போகும்; தண்ணீர்கள் எல்லாம் கடலுக்குத் திரும்பிவிடும்.

12. எல்லா இலஞ்சமும் அநீதமும் துடைத்தகற்றப்படும்; பிரமாணிக் கமோ நித்தியத்திற்கும் நிலைத் திருக்கும். 

13. அநீதரின் செல்வம் ஆற்றைப் போல வற்றிப்போகும். மழையில் பெரிய இடிச் சத்தம் போலக் கடந்து போகும்.

14. அவன் தன் கரங்களைத் திறக் கையில் அக்களிப்பான்; ஆனால் கட்டளைகளை மீறி நடக்கிறவர்கள் முடிவில் தேய்வுற்று மறைந்து போவார்கள்.

15. அவபக்தியுள்ளவர்களின் சந்ததி பல கிளைகளை விடாது, பாறையின் உச்சியிலுள்ள அசுத்த வேரைப் போல் அது சத்தமெழுப்பும்.

16. ஒவ்வொரு நீர்நிலையின் மீதும் ஆற்றங்கரையிலும் வளரும் களைச் செடிகள் எல்லாப் புல்லுக்கும் முன்பாக வெளியே இழுக்கப்படும்.

17. வரப்பிரசாதமானது ஆசீர் வாதங்களால் சிங்காவனத்தைப் போலிருக்கிறது; இரக்கமானது நித்தியத்திற்கும் நிலைநிற்கும்.

18. தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் உழைப் பாளியின் வாழ்வு இனிமையானது,  அதில் நீ ஒரு பொக்கிஷத்தைக் காண்பாய்.

19. பிள்ளைகளும், ஒரு நகரத்தைக் கட்டுவதும் பெயரை நிலைநாட்டும்; ஆனால் குற்றமற்ற மனைவி இவை இரண்டிற்கும் மேலாக மதிக்கப் படுவாள்.

20. திராட்சை இரசமும், இசையும் இருதயத்தைக் களிகூரச் செய்கின் றன; ஞானத்தின் நேசம் இவ்விரண் டுக்கும் மேலானது.

21. புல்லாங்குழலும் யாழும் இனிய இசையைப் பிறப்பிக்கின்றன; ஆனால் இனிய நாவு இவை இரண்டுக்கும் மேலானது.

22. நட்பையும் அழகையும், உனது கண் ஆசிக்கிறது; இவைகளுக்கு மேலானது பசுமையாக விளைந்திருக்கும் வயல்கள் இவற்றை விட மேலானவை.

23. உரிய காலத்தில் நண்பனும், தோழனும் ஒருவரையயாருவர் சந்திக் கிறார்கள்; ஆனால் இவ்விருவருக்கு மேலாக கணவனோடு இருக்கிற மனைவி இருக்கிறாள்.

24. துன்ப காலத்தில் சகோதரர்கள் உதவி புரிகிறார்கள்; ஆனால் இரக் கமோ அவர்களை விட அதிகமாய் உதவி செய்யும்.

25. பொன்னும், வெள்ளியும் பாதங் களை உறுதியாக நிற்கச் செய்கின் றன. ஆனால் இவ்விரண்டையும்விட ஞானமுள்ள ஆலோசனை மேலானது.

26. செல்வமும், பலமும் இருதயத்தை உயர்த்துகின்றன; தேவபயம் இவைகளை விட மேன்மையானது.

27. தேவ பயத்தில் குறையயான்று மில்லை; அதில் உதவி தேட வேண்டிய அவசியமில்லை.

28. தேவபயம் ஆசீர்வாதத்தின் சிங்காரவனத்தைப் போலிருக்கிறது; அவை எல்லா மகிமைக்கும் மேலான பெரும் மகிமையால் அதை மூடின.

29. என் மகனே! உன் வாழ்நாளில் பிச்சையெடுக்காதே; ஏனெனில் பிச்சை எடுப்பதை விட சாவது மேல்.

30. மற்றொருவனின் உணவு மேசையை எதிர்பார்த்து வாழ்பவ னின் வாழ்வு, வாழ்வு என்றே மதிக்கப் படத் தகாது; ஏனெனில் மற்றொரு வனின் உணவைக் கொண்டு அவன் தன் ஆத்துமத்தைப் போஷிக்கிறான்.

31. ஆனால் நற்போதகமும், கல்வியும் பெற்ற மனிதன் தன் தேவை யைத் தன்னிடமே தேடுவான்.

32. அவிவேகியின் வாயில் பிச்சை யெடுப்பது இனிமையாயிருக்கும்; ஆனால் அவனுடைய வயிற்றில் அக்கினி பற்றி எரியும்.