சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 38

மருத்துவரின் பயன்

1. மருத்துவனின் தேவையின் நிமித்தம் அவனுக்கு மரியாதை செய்; ஏனெனில் உன்னத கடவுளே அவனைச் சிருஷ்டித்திருக்கிறார்.

2. ஏனெனில் குணமாக்கப்படுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருகிறது; அவன் அரசரின் கொடைகளைப் பெறுவான்.

3. மருத்துவனின் திறமை அவனது தலையை நிமிர்த்துகிறது; பெரியோருக்கு முன்பாக அவன் கொண்டாடப்படுவான்.

4. பூமியினின்று கடவுள் மருந்துகளைச் சிருஷ்டித்தார், ஞானமுள்ள மனிதன் அவற்றை அருவருக்கமாட்டான்.

5. கசப்பான தண்ணீர் மரத்துண்டால் இனிமையாக்கப்படவில்லையா?

6. இந்தப் பொருட்களின் பயனை மனிதர்கள் அறிய வருகிறார்கள், மகா உன்னதர் தம் அற்புதங்களில் மகிமைப்படுத்தப்படும்படியாக, இவை பற்றிய அறிவை மனிதருக்குத் தந்திருக்கிறார்.

7. அவைகளைக்கொண்டு அவன் குணப்படுத்துகிறான், வேதனை களைத் தணிக்கிறான். இவற்றிலிருந்து மருந்து தயாரிப்பவன் இனிப்பான மருந்துகளைச் செய்வான், உடல் நலம் தரும் தைலங்களைத் தயாரிப் பான், அவனுடைய வேலைகளுக்கு முடிவு இராது. 

8. ஏனெனில், பூமி முகத்தே எங்கும் கடவுளின் சமாதானம் இருக்கிறது.

9. என் மகனே! உன் வியாதியில் உன்னையே அசட்டைபண்ணாதே; ஆனால் ஆண்டவரை மன்றாடு, அவர் உன்னைக் குணமாக்குவார்.

10. பாவத்தை அகற்று, உன் கைகளை ஒழுங்குபடுத்து, உன் இருத யத்தை எல்லாக் குற்றத்தினின்றும் சுத்தப்படுத்து.

11. மெல்லிய மாவின் இனிய சுவையையும், ஞாபகத்தையும் கொடு; கொழுத்த காணிக்கையை ஒப்புக் கொடு, மருத்துவனுக்கு இடங்கொடு.

12. ஏனெனில், அவனை ஆண்டவர் படைத்தார்; அவனது வேலைகள் அவசியமாயிருப்பதால் உன்னை விட்டு அவன் விலகாதிருக்கக் கடவான்.

13. ஏனெனில், நீ அவர்களுடைய கைகளில் விழவேண்டிய காலம் ஒன்றுண்டு.

14. அவர்களோ, தங்கள் உரை யாடலுக்காக தங்கள் ஓய்விற்காகவும் தீர்வுக்காகவும் செய்வதை ஆண்டவர் வளமாக்கும்படியாக அவரை மன்றாடுவார்கள்.

15. தன்னைச் சிருஷ்டித்தவரின் சமூகத்தில் பாவம் செய்கிறவன் மருத்துவனின் கைகளில் விழுவான்.

16. என் மகனே! மரித்தவனுக் காகக் கண்ணீர் சிந்து; ஏதாவது ஒரு பெரிய தீங்கை அனுபவித்தவன் போல துக்கித்து அழத் தொடங்கு; தீர்ப்பின்படி அவனுடைய பிரேதத்தை மூடு, அவனுடைய அடக்கத்தை அசட்டை பண்ணாதே.

17. ஆனால் உன்னைப் பற்றிப் புறணி பேசப்படுவதுபற்றி ஒருநாள் முழுதும் மனங்கசந்து அழு, அதன் பின் உன் துக்கத்தில் உன்னைத் தேற்றிக்கொள்.

18. புறணியைப்பற்றிய பயத்தால் அவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஒரு நாளோ, இரண்டு நாட்களோ துக்கங் கொண்டாடு.

19. ஏனெனில் துக்கத்தால் சாவு வருகிறது, பலத்தை மேற்கொள்கிறது, இருதய துக்கம் தலையைப் பணியச் செய்கிறது.

20. விலகியிருக்கும்போது, துக்கம் தங்கிவிடுகிறது; ஏழையின் பொருள் அவனுடைய இருதயத்திற்குத் தக்கதாயிருக்கிறது.

21. உன் இருதயத்தைத் துயரத்திற் குக் கையளிக்காதே; மாறாக, அதை உன்னை விட்டு அகற்றிவிடு, மேலும் பிந்தைய முடிவை நினைத்துக்கொள்.

22. அதை மறந்துவிடாதே; ஏனெனில் முடிவு வந்தபின் திரும்பி வருதல் இல்லை; அவனுக்கு நீ எந்த நன்மையும் செய்ய மாட்டாய், உன்னையே நீ வேதனைப்படுத்திக் கொள்வாய்.

23. எனக்கு வந்த தீர்ப்பை நினைத்துக்கொள்; உன்னுடையதும் இப்படித்தான் இருக்கும், நேற்று எனக்கு, இன்று உனக்கு.

24. மரித்தவன் இளைப்பாற்றியில் இருக்கும்போது, அவனது ஞாபகம் இளைப்பாறட்டும்; அவனுடைய உயிர் பிரிந்துபோகையில் அவனைத் தேற்று.

25. வல்லுனனின் ஞானத்தை அவனது இளைப்பாற்றியின் காலத் தில் அறியலாம்; செயலில் குறைவா யிருப்பவன் ஞானத்தைப் பெற்றுக் கொள்வான்.

26. கலப்பை பிடிக்கிறவனும், குதிமுள்ளில் பெருமைகொள்கிற வனும், அதைக் கொண்டு எருது களை ஓட்டுகிறவனும் அவனவன் வேலையில் ஈடுபட்டிருக்கிறான், எருதுக் கன்றுகளைப் பற்றியே அவனுடைய பேச்சு இருக்கிறது. 

27. ஏர் கொண்டு சால்களை உழுவதில் அவன் தன் மனதைச் செலுத்துவான், அவனுடைய கவனம் எருதுகளுக்குத் தீவனம் தருவதில் இருக்கிறது.

28. இவ்வாறே ஒவ்வொரு கைவேலைக்காரனும், அல்லும் பகலும் வேலை செய்கிற வேலை யாளும், உலோக முத்திரைகளை அடிப்பவனும் இருக்கிறான். அவன் தன் தொடர்ச்சியான கவனத்தால், உருவத்தை மாற்றுகிறான்; படத்தில் உள்ளதை அப்படியே உருவாக்குதில் அவன் தன் மனதைச் செலுத்துவான், விழிப்பாயிருந்து அவன் தன் வேலையை முடிப்பான்.

29. பட்டறையருகில் உட்கார்ந்து இரும்பு வேலையைக் கவனிக்கும் கொல்லனும் அப்படியே செய்கிறான்; நெருப்பின் ஆவி அவன் சதையை மெலியச் செய்கிறது; உலையின் வெப்பத்தோடு அவன் போராடு கிறான்.

30. சம்மட்டியின் சத்தம் எப்போ தும் அவன் காதில் இருக்கிறது; தான் செய்யும் பாத்திரத்தின் அச்சின்மீது அவனுடைய கண் இருக்கிறது.

31. வேலைகளை முடிப்பதில் அவன் தன் மனதை இருத்துகிறான், அவற்றைப் பளபளப்பாக்கி, முழுமையாக்குவதில் அவன் விழிப்பாயிருக் கிறான்.

32. தன் வேலையில் உட்கார்ந்து தன் கால்களால் சக்கரத்தைச் சுற்றும் குயவனும் அப்படியே; அவன் தன் வேலையில் எப்போதும் கவனமா யிருக்கிறான்; எண்ணிக்கைப்படி அவன் தன் வேலை முழுவதையும் செய்கிறான்.

33. அவன் தன் கையால் களி மண்ணை வடிவமைக்கிறான்; தன் கால்களுக்கு முன்பாகத் தன் பலத் தைக் குறைக்கிறான்.

34. பாண்டத்தின் மேற்புறத்தைத் தேய்த்துப் பளபளப்பாக்குவதில் அவன் தன் மனதைச் செலுத்துவான்; சூளையைச் சுத்தமாக்குவதில் அவனுடைய கவனம் இருக்கிறது.

35. இவர்கள் எல்லோரும் தங்கள் கைகளில் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஒவ்வொருவனும் தன் தொழிலில் ஞானியாயிருக்கிறான்.

36. இவர்கள் இல்லாமல் நகரம் கட்டப்படுவதில்லை.

37. ஆனால் அவர்கள் அதில் வசிப்பதில்லை, அதில் நடப்பது மில்லை, சங்கத்திலும் அவர்கள் நுழைவதில்லை.

38. நியாயாதிபதிகளின் ஆசனத்தில் அவர்கள் உட்காரமாட்டார்கள்; தீர்ப்பின் உத்தரவை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை; ஒழுங்கையும், தீர்ப்பையும் அவர்கள் அறிவிப்பது மில்லை. உவமைகள் பேசப்படும் இடத்தைச் சுற்றி அவர்கள் இருப்பது மில்லை.

39. ஆனால் உலகத்தின் நிலையை அவர்கள் பலப்படுத்துவார்கள்; அவர்களது கைத்திறனின் வேலை யில் அவர்களது ஜெபம் இருக்கும், அதைத் தங்கள் ஆத்துமத்திற்கு அவர்கள் பயன்படுத்துவார்கள், மகா உன்னதரின் திருச்சட்டத்தை அதில் அவர்கள் தேடுவார்கள்.