சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 35

கற்பனைகளை அனுசரித்தல்.

1. திருச்சட்டத்தை அனுசரிப்பவன், காணிக்கைகளைப் பெருகச் செய்கிறான்.

2. கட்டளைகளில் அக்கறை கொள்வதும், சகல அக்கிரமத்தினின்றும் அகலுவதும் நலம் தரும் பலியாகும்.

3. அநீதியை விட்டகன்றுபோவது, அநீதிகளுக்காக ஒரு பரிகாரப் பலியை ஒப்புக்கொடுப்பதாகவும், பாவங்களுக்கு மன்னிப்பை இரந்து மன்றாடுவதுமாக இருக்கிறது.

4. மெல்லிய மாவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பவன் நன்றியறிந்த தோத்திரம் செய்கிறான்; இரக்கச் செயல் செய்பவன் பலி ஒப்புக்கொடுக்கிறான்.

5. அக்கிரமத்தினின்று அகன்று போவது ஆண்டவருக்குப் பிரியமானது; அநீதத்தினின்று விலகுவது பாவங்களின் மன்னிப்புக்கான மன்றாட்டாக இருக்கிறது.

6. ஆண்டவருடைய சமுகத்தில் வெறுங்கையனாய்க் காணப்பட மாட்டாய்.

7. இவையெல்லாம் கடவுளின் கட்டளையின் காரணமாகச் செய்யப் படுகின்றன.

8. நீதிமானின் காணிக்கை பலி பீடத்தைக் கொழுக்கச் செய்கிறது; அது உந்நத கடவுளின் பார்வையில் இனிய நறுமணமாயிருக்கிறது.

9. நீதிமானின் பலி ஆண்டவருக்கு உகந்ததாயிருக்கிறது; அவர் அதன் ஞாபகத்தை மறந்துவிடமாட்டார்.

10. நல்ல இருதயத்தோடு கடவுளுக்கு மகிமை செலுத்து; உன் கைகளின் முதற்பலன்களைக் குறைக்காதே.

11 .நீ தர்மம் செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தோஷ முகம் காண்பி. உன் பத்தில் ஒரு பாகத்தை சந்தோஷத்தோடு அர்ச்சிப்பாயாக.

12. உந்நத கடவுள் உனக்குக் கொடுத் திருப்பதற்குத் தக்கபடி நீயும் அவருக் குக் கொடு; உன் கரங்களின் திறனுக்கு ஏற்றபடி, நல்ல மனதோடு கொடு.

13. ஏனெனில், ஆண்டவர் சம்பாவனை அளிப்பவராயிருக்கிறார். ஏழுமடங்காக அவர் உனக்குத் திருப்பித் தருவார்.

14. தீய காணிக்கைகளை ஒப்புக் கொடுக்காதே; ஏனெனில், அத்தகை யவற்றை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

15. அநீதப் பலியைக் கவனியாதே; ஏனெனில், ஆண்டவர் நீதிபதியாயிருக்கிறார்; அவரிடம் முகத்தாட்ச ணியமில்லை.

16. ஆண்டவர் ஏழைக்கு விரோத மாய் எவனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்; தீமை இழைக்கப்பட்ட வனுடைய ஜெபத்தை அவர் கேட் பார்.

17. அனாதைப் பிள்ளையின் ஜெபங் களை அவர் புறக்கணிக்க மாட்டார்; அழுது முறையிடும் விதவையையும் அவர் தள்ளிவிட மாட்டார்.

18. விதவையின் கண்ணீர்கள் கன்னத்தில் வழிவதில்லையா? அவற்றைச் சிந்த வைப்பவன் மேல் அவள் அழுகைச் சத்தம் இறங்குவ தில்லையா?

19. ஏனெனில், கன்னத்தினின்று அவை பரலோகத்தையும் கூட எட்டுகின்றன. அவளது மன்றாட் டைக் கேட்கும் ஆண்டவர் அவற்றில் இன்பம் காண்பதில்லை.

20. சந்தோஷமாய்க் கடவுளை ஆராதிப்பவன் ஏற்றுக்கொள்ளப்படு வான்; அவன் மன்றாட்டு மேகங் களையும் அணுகிச் செல்லும்.

21. தன்னைத் தாழ்த்துபவனுடைய ஜெபம் மேகங்களை ஊடுருவிப் போகும்; அருகில் போய்ச் சேரும் வரை ஆறுதலடையாது; உந்நத கடவுள் பார்க்கும் வரை அது திரும்பிப் போகாது.

22. ஆண்டவரும் அதை அலட் சியம் செய்ய மாட்டார்; நீதிமான் களுக்கு ஆதரவாக அவர் தீர்ப்பிடு வார்; சர்வ வல்லபர் அவர்களிடம் பொறுமையாயிருக்க மாட்டார்; அவர்களுடைய முதுகை நசுக்கி விடுவார்.

23. ஆங்காரிகளின் கூட்டத்தை அகற்றி, அநீதர்களின் செங்கோல் களை முறிக்கும் வரை, அவர் புறஜாதியாரைப் பழிவாங்குவார்.

24. மனிதர்களுக்கு அவரவர் செயல்களுக்குத் தக்கதும், ஆதாமின் செய்கைகளுக்குத் தக்கதும், அவனு டைய தகாத்துணிவுக்குத் தக்கது மான தீர்ப்பிடும் வரையிலும்,

25. தம் மக்கள் சார்பாக நீதித் தீர்ப் பிடும் வரையிலும் அவர் பழி வாங்கு வார்; நீதிமான்களைத் தம் இரக்கத் தால் சந்தோஷப்படுத்துவார்.

26. வறட்சிக் காலத்தில் ஒரு மழை மேகத்தைப்போல துன்ப காலத்தில் கடவுளுடைய இரக்கம் அழகானதாயிருக்கிறது.