இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 34

மோயீசன் நேபோ மலையிலிருந்து தேசத்தைப் பார்த்ததும்--அவ்விடத்தில் மரித்ததும்--அவன் அடக்கம் பண்ணப் பட்டதும்--ஜனங்கள் அவனைக் குறித்து முப்பது நாள் துக்கங் கொண்டாடினதும்--ஜோசுவா அவனுக்குப் பதிலாக ஏற்பட்டதும்--மோயீசனைக் குறித்து அவன் புகழ்ச்சி சொல்லியதும்.

1. இதன் பிறகு மோயீசன் மோவாபின் வெளிகளிலிருந்து ஜெரிக்கோவிக்கெதிரான நேபோ மலையிலிருக்கும் பாஸ்கா கொடுமுடியில் ஏறினான். அப்பொழுது கர்த்தர் தான் வரைக்குமுள்ள கலாத் தேசம் அனைத்தையும்,

2.  நெப்தளி தேசம் முழுவதையும், எப்பிராயீம், மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3. தென்னாடுகளையும், சேகோர் மட்டும் பனமர நகரமாகிய ஜெரிக்கோவின் வெளிகளையும் காண்பித்தார்.

4. பின்பு கர்த்தர் மோயீசனை நோக்கி: நாம் உங்கள் சந்ததிக்குக் கொடுப்போமென்று அபிரகாமுக்கும், இசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொல்லிய தேசம் இதுதான். அதைக் கண்ணாலே கண்டாய். ஆனால் அதிலே நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

5. கர்த்தரின் தாசனாகிய மோயீசன் மோவாப் தேசமான அவ்விடத்தில்தானே கர்த்தருடைய கற்பனைப்படி மரித்தான்.

6. கர்த்தரே அவனைப் பொகோருக்கெதிராக மோவாபின் பள்ளத்தாக்கில் அடக்கம் பண்ணினமையால் இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவனுடைய கல்லறையை அறியான்.

7. மோயீசன் இறந்த போது நூற்றிருபது வயதாயிருந்தான். ஆகிலும் அவனுடைய கண் மங்கினதுமில்லை. பல்லுகள் உதிர்ந்ததுமில்லை.

8. இஸ்றாயேல் புத்திரரோ மோயீசனுக்காக முப்பது நாளாய் மோவாப் வெளிகளில் அழுது கொண்ட பின்பு மோயீசனுக்காக இழவு கொண்டாடுகிறவர்களுடைய துக்கம் முடிவு பெற்றது.

10. மோயீசன் நூனின் குமாரனான ஜோசுவாவின்மேல் தன் கரங்களை நீட்டிப் போட்டிருந்தமையால் இவன் ஞானத்தின் இஸ்பிரீத்துவினால் நிறைக்கப் பட்டனன். இஸ்றாயேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்தபடி செய்து வந்தார்கள்.

10. கர்த்தரால் முகமுகமாய்த் தரிசித்தறியப்பட்ட மோயீசனுக்கு நிகரான வேறொரு தீர்க்கத்தரிசியும் இஸ்றாயேலரில் அப்புறம் எழும்பினதேயில்லை.

11. கர்த்தர் அவன் மூலியமாய் எஜிப்த்து தேசத்திலே பரவோனுக்கும் பரவோனின் ஊழியர்களுக்கும் பரவோனின் இராச்சியமனைத்திற்கும் விரோதமாய்ச் செய்து காண்பித்த சகல அடையாளம் முதலிய அற்புதாதிசயங்களின் நிமித்தமாகவும்,

12. மோயீசன் இஸ்றாயேல் சபையாரெல்லோருக்கும் முன்பாகச் செய்துவந்த எல்லா வல்லமை பொருந்திய வர்த்தமானம் முதலிய ஆச்சரியமான கிரியைகளின் நிமித்தமாகவும் (மோயீசன் நிகரில்லாதவனென்பது உறுதி.