சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 33

தேவ பயத்தினுடையவும், கட்டளைகளை அனுசரிப்பதினுடையவும் பயன்.

1. தேவ பயமுள்ளவனுக்குத் தீமைகள் நேரிடாது; ஆனால் சோதனையில் கடவுள் அவனைக் காத்து, தின்மைகளினின்று விடுவிப்பார்.

2. ஞானமுள்ளவன் கட்டளைகளையும், நியாயங்களையும் பகைக்க மாட்டான்; புயலில் சேதப்படும் கப்பலைப் போல் அவன் மோதி நொறுங்க மாட்டான்.

3. புத்தியுள்ள மனிதன் கடவுளின் கட்டளைக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான்; திருச்சட்டமும் அவனுக்குப் பிரமாணிக்கமாயிருக்கின்றது.

4. கேள்விக்குத் தெளிவான மறுமொழி சொல்பவன், என்ன சொல்வதென்று முதலில் தயார் செய்து கொள்வான்; அவன் ஜெபிக்கும் போது, அவனுடைய ஜெபம் கேட்கப்படும், அவன் முதலில் ஒழுங்கின்படி நடப்பான், அதன் பிறகே மற்றவர்களுக்குப் பதில் சொல்வான்.

5. மூடனின் இருதயம் வண்டியின் சக்கரத்தைப் போன்றது; அவனது சிந்தனைகள் சுழலும் அச்சாணியைப் போன்றவை.

6. ஏளனம் செய்யும் நண்பன் காயடிக்கப்படாத இளம் ஆண் குதிரை போன்றவன்; தன்மீது யார் உட்கார்ந்தாலும் அவன் கனைக் கிறான்.

7. எல்லாமே சூரியனிடமிருந்து தான் வருகின்றன என்னும்போது, ஏன் ஒருநாள் மற்றொரு நாளை விடவும், ஓர் ஒளி மற்றோர் ஒளியை விடவும், ஒரு வருடம் மற்றொரு வருடத்தை விடவும் நல்லதாக இருக்கிறது?

8. சூரியன் உண்டாக்கப்பட்டுக் ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றுவதால், அவை அவரது அறிவால் வேறுபடுத்தப்பட்டன.

9. அவரே பருவ காலங்களையும், அவற்றின் திருநாட்களையும் கட்ட ளையிட்டார்; அவற்றில், குறித்த நேரத்தில் அவர்கள் திருநாட்களைக் கொண்டாடினார்கள்.

10. அந்நாட்களில் சிலவற்றைக் கடவுள் உயர்வான, மேலான நாட் களாக ஆக்கினார்; சிலவற்றைச் சாதாரண நாட்களின் கணக்கில் வைத் தார்; ஆதாம் எதிலிருந்து படைக்கப் பட்டானோ, அந்த நிலத்தினின்று, அந்த மண்ணினின்று மனிதர்கள் வருகிறார்கள்.

11. ஆண்டவர் மிகுந்த அறிவைக் கொண்டு அவர்களைப் பிரித்து, அவர்களுடைய வழிகளை வகைப் படுத்தினார்.

12. அவர்களில் சிலரை அவர் ஆசீர்வதித்து உயர்த்தினார்; சிலரை அர்ச்சித்துத் தம் அருகில் வைத்துக் கொண்டார்; சிலரைச் சபித்துத் தாழ்த்தி, அவர்களுடைய நிலையை மாற்றினார்.

13. குயவனின் கையில் களிமண் வடிவமைக்கப்பட்டு, ஒழுங்கு செய் யப்படுவது போல:

14. அவருடைய ஒழுங்குபடுத் தலின்படியே அவனுடைய எல்லா வழிகளும் இருக்கின்றன. ஆகவே, மனிதன் தன்னைப் படைத்தவரின் கரத்தில் இருக்கிறான், தம் தீர்மானத் தின்படி அவர் அவனை நடத்துவார்.

15. தின்மைக்கு விரோதமாக நன்மை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமானுக்கு எதிராகப் பாவி இருக்கிறான். இவ்வாறே உந்நதமான வரின் சகல செய்கைகளையும் பார். அவை இரண்டிரண்டாகவும், ஒன்றுக் கொன்று விரோதமாகவும் இருக் கின்றன.

16. நான் அனைவரிலும் கடைசி யாகக் கண்விழித்தேன்; திராட்சைப் பழங்கள் சேகரிப்பவர்கள் சிந்தும் கனிகளைச் சேகரிப்பவன் போலா னேன்.

17. கடவுளின் ஆசீர்வாதத்தில் நானும் நம்பிக்கை கொண்டிருந் தேன். திராட்சைப் பழங்களைச் சேகரிப்பவனைப் போல் ஆலையை நிரப்பினேன்.

18. எனக்காக மாத்திரமல்ல, ஆனால் நல்லொழுக்கத்தைத் தேடும் சகலருக்காகவும் உழைத்தேன் என்ப தைக் காணுங்கள்.

19. பெரியோரே! சகலமான மனிதர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்; சபையின் அதிகாரி களே! எனக்குச் செவிகொடுங்கள்.

20. மகனோ, மனைவியோ, சகோ தரனோ நண்பனோ, நீ வாழும்போது யாருக்கும் உன்மேல் அதிகாரங் கொடாதே; பிறகு நீ வருந்தாதபடி யும், உன் உரிமைச் சொத்தைக் கேட்டுக் கெஞ்சாதபடியும், அதை மற்றொருவனுக்குத் தராதே.

21. நீ உயிரோடிருந்து சுவாசத் தைக் கொண்டிருக்கும் வரை, எவனும் உன்னை மாற்றாதிருக்கட்டும்.

22. உன் பிள்ளைகளின் கைகளி லிருந்து நீ எதிர்பார்த்துக் காத்திருப் பதை விட, அவர்கள் உன்னைக் கேட்பது மேலானது.

23. உன் எல்லாச் செயல்களிலும் முதன்மையாயிரு.

24. எந்தக் கறையும் உன் மகிமை யைப் பழுதுபடுத்த விடாதே; உன் வாழ்நாட்களை முடிக்கிறபோது, உன் மரண நேரத்தில் உன் சொத் தைப் பகிர்ந்து கொடு.

25. தீவனமும், அடிக்கும் கம்பும், சுமையும் கழுதைக்குரியவை; அப்ப மும், கண்டிப்பும் ,வேலையும் அடிமைக்குரியவை.

26. அவன் கண்டிப்பின் கீழ் வேலை செய்கிறான்; ஓய்வெடுக்கத் தேடுகிறான்; அவன் கைகள் சோர்ந் திருக்க அனுமதிப்பாய் என்றால், அவன் சுதந்திரத்தைத் தேடுவான்.

27. நுகத்தடியும் வடமும் முரட்டுக் கழுத்தை வளைக்கின்றன; ஓயாத வேலைகள் அடிமையை வளைக் கின்றன.

28. கெட்ட மனதுள்ள அடிமைக்கு சித்திரவதையும், விலங்குகளும்; சோம்பேறியாயிராதபடி அவனை வேலைக்கு அனுப்பு.

29. ஏனெனில் சோம்பேறித்தனம் அதிகத் தீமையைக் கற்றுக்கொடுத் திருக்கிறது.

30. வேலையில் அவனை நிறுத்து; ஏனெனில் அதுதான் அவனுக்குத் தகுதியானது; அவன் கீழ்ப்படியா விட்டால், விலங்குகளால் அவனைக் கீழ்ப்படுத்து; ஆனால் எவனிடமும் மிதமிஞ்சி நடவாதே; உண்மை யாகவே, முக்கியமான எதையும் முன்யோசனையின்றிச் செய்யாதே.

31. பிரமாணிக்கமுள்ள ஓர் ஊழியன் உனக்கு உண்டென்றால், அவன் உன் ஆத்துமத்தைப்போல் உனக்கு இருக்கக்கடவான்; சகோதர னைப்போல் அவனை நடத்து; ஏனெனில், உன் ஆத்தும இரத்தத்தில் நீ அவனைக் கண்டடைந்தாய்.

32. அவனை நீ அநியாயமாய் நோகப்பண்ணினால், ஓடிவிடுவான்.

33. அவன் எழுந்து ஓடிப் போவான் என்றால், அவனைப் பற்றி யாரிடம் கேட்பது, எவ்வழியில் அவனைத் தேடுவது என்று உனக்குத் தெரியாது.