இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 33

தேவமகத்துவம், பன்னிரண்டு கோத்திரங்களுக்கு ஆசீர்வாதங்கள்--இஸ்றாயேல் சபையின் மேன்மை.

1. தேவதாசனாகிய மோயீசன் மரணமடையுமுன் இஸ்றாயேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர் வசனமாவது:

2. கர்த்தரானவர் சீனாயி மலையினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பரான் மலையிலிருந்து ஆயிரமாயிரமான அர்ச்சியசிஷ்டவர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலது கரத்தில் அக்கினிமயமான பிரமாணமிருந்தது.

3. அவர் ஜனங்களை நேசித்தார். பரிசுத்தவான்கள் யாவரும் அவருடைய கையிலிருக்கின்றனர். அவருடைய பாதக் கமலங்களை அண்டி வருகிறவர்கள் அவருடைய (வார்த்தையினால்) போதனைப் பெறுவார்கள்.

4. மோயீசன் நமக்கு ஒரு நியாயப் பிரமாணத்தை விதித்தான். அது யாக்கோப் சபையின் காணியாட்சியாம்.

5. இஸ்றாயேல் தலைவர்களும், இஸ்றாயேலின் கோத்திரங்களும் கூட்டங் கூடிய மகா பரிசுத்தமான ஜனத்துக்கு அவர் இராசா.

6. ரூபன் சாகாமற் சீவிப்பான். ஆனால் அவன் ஜனம் கொஞ்சமாயிருக்கும்.

7. யூதாவைக் குறித்த ஆசீர்வாதமாவது: யூதாவின் குரல் சப்தத்தைக் கேளும் ஆண்டவரே: அவனைத் தன் ஜனத்தோடு சேர்ந்திருக்கப் பண்ணும். அவன் புஜம் இஸ்றாயேலுக்கு உதவியாகப் போராடும். சத்துருக்களுடைய கையினின்று அவனை விடுதலையாக்கச் சகாயமாயிருக்கும் என்றான்.

8.  பிறகு லேவியை நோக்கி: (கர்த்தரே) உம்முடைய சம்பூரண சாங்கோபாங்கமும், உம்முடைய :ஞானமும் தேவரீர் தெரிந்து கொண்ட உமது பரிசுத்த தாசனுக்கு உண்டு. தேவரீர் அவனை ஒரு சோதனையில் பரிட்சித்து வாக்குவாதத் தண்ணீர் என்னும் ஸ்தானத்தில் அவன் மேல் தீர்ப்பு சொன்னீரே.

9. அவன் தன் தகப்பனுக்கும் தாய்க்கும்: நான் உங்களை அறியேன் என்றும் தன் சகோதரருக்கு: நீங்கள் யார் என்றும் சொன்னான். (லேவியர்கள்) தங்கள் பிள்ளைகளையும் பாராமல் தேவரீருடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு உமது உடன்படிக்கையைப் பிரமாணிக்கமாய்க் காட்டினவர்களே.

10. (அவர்கள்) யாக்கோபே! உன் நியாயப் பிரமாணத்தையும், இஸ்றாயேலே! உன் கற்பனைகளையும் (கைக்கொண்டு அனுசரித்தோம் என்கிறார்கள்.) தேவரீர் கோபமாயிருக்கும்போது அவர்கள் உமக்குத் தூபம் காட்டி உம்முடைய பலிப்பீடத்திலே சர்வாங்கத் தகனப் பலியையிடுவார்கள்.

11. ஆண்டவரே, (லேவியுடைய) வல்லமையை ஆசீர்வதியும். அவன் கைக்கிரியைகளின் மேல் பிரசன்னமாயிரும். அவன் சத்துராதிகளின் முதுகுகளை நொறுக்கி விடும். அவன் விரோதிக்ள எழுந்திராதபடிக்குச் செய்யும் என்றான்.

12. இப்பாலே பெஞ்சமீனை நோக்கி: இவன் கர்த்தரால் அதிகமாய் நேசிக்கப் பட்டவனாகையால் அவரோடு நம்பிக்கையாய் வசிப்பான், அவன் அவரோடு: படுத்துக் கொண்டு அவருடைய இரு கரங்களின் நடுவில் தூங்குவான் என்றான்.

13. பிறகு ஜோசேப்பை நோக்கி: இவனுடைய பூமி கர்த்தரால் ஆசீர்வதிக்கப் படுவதாக! அது வானத்து வரங்களின் கனி மிகுதியினாலும், பனியின் பலன்களினாலும், ஆழத்திலுள்ள நீர் ஊற்றுகளின் பலன்களினாலும்,

14. சூரிய சந்திரர் பக்குவப்படுத்தும் பலன்களினாலும்,

15. புராதன பர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய குன்றுகளில் அகப்படும் அரும்பழங்களினாலும்,

16. பூமியின் பலன்களினாலும் அதின் கம்பூரண சம்பத்தினாலும் செல்வத்தை அடையக் கடவது! முட்செடியில் எவர் தெரிசனமானாரோ அவருடைய ஆசீர்வாதம் ஜோசேப்புடைய சிரசின் மேலும் அவன் சகோதரரில் விசே´க்கப் பட்டவனுடைய உச்சந்தலையின் மேலும் வரக் கடவதாக.

17. இவன் அழகு பசுவின் தலையீற்றுக் காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளை நிகர்த்ததாம். அவைகளாலே ஜனங்களைத் தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துவான் என்றான். எபிராயீமின் சேனைகளும், மனாசேயன் படைவீரர்களும் அத்தன்மை போலிருப்பார்கள் என்றான்.

18. ஸபுலோனை நோக்கி: ஸபுலோனே, உன் ஏற்றுத் துறைகளிலும், இஸக்காரே உன் கூடாரங்களிலும் மகிழக் கடவீர்கள்.

19. இவர்கள் ஜனங்களை மலைகளிடம் அழைப்பார்கள். அங்கே நீதியின் பலிகளையிடுவார்கள். கடல் திரவியங்களையும் மணலில் மறைந்திருக்கும் ஆஸ்திகளையும் பாலைப் போல் உறிஞ்சுவார்கள் என்றான்.

20. காதை நோக்கி: காத் த்ன விஸ்தாரமான நாட்டில் ஆசீர்வாதம் பெற்றுச் சிங்கம் போல் இளைப்பாறி ஒரு புஜத்தையும் ஒரு தலையையும் பீறிப் போட்டான்.

21. அவன் தன் சுதந்தரத்திலே வேதபாரகன் ஒருவன் வைக்கப் பட்ட விசேஷ மகிமையைக் கண்டு மகிழ்ந்தான். அந்த வேதபாரகன் ஜனத்தின் தலைவர்களுடனிருந்து கர்த்தருக்கடுத்த நீதி நியாயங்களையும் விதித்து இஸ்றாயேலரோடு நீதிகர்த்தனாயிருந்தான் என்றான்.

22, தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக் குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரம்புவான என்றான்.

23. நேப்தளியை நோக்கி: நேப்தளி சம்பத்தை உடையவனாய் திருப்தி அடைவான். அவன் கர்த்தருடைய ஆசீர்வாததினால் நிறைந்திருப்பான். அன் கடல் திசையையும் தென் திசையையும் சுதந்தரித்துக் கொள்வான் என்றான்.

24. ஆஸேரை நோக்கி: இஸ்றாயேல் புத்திரருக்குள் ஆஸேர் ஆசீர்வதிக்கப் பட்டவன். அவன் தன் ககோதரருக்குப் பிரிமாயிருந்து தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

25. இரும்பும் செம்பும் அவனுக்குப் பாதரெட்கையாம். உன் யயளவன தசயில் எப்படிக்கிருந்தாயோ அப்படியே உன் முதிர்ந்த பிராயத்திலுமிரு;பாய்.

26. மகா நீதிமானான பிரஜையின் தேவனுக்கு நிகரான தேவனில்லை. வானத்தின் மேல் ஏறிப் போகிறவரே உனக்குச் சகாயராயிருக்கிறார். அவருடைய மகிமைப் பிரதாபத்தைக் கண்டு மேகங்கள் பயந்து சிதறிப் போகும்.

27. அவருடைய வாசஸ்தலமோ உன்னதத்திலுண்டாம். அவருடைய நித்திய கரமோ கீழே வீற்றிருக்கின்றது. அவர் உன் முகதாவினின்று உன் பகைவனைத் தள்ளிவிட்டு நெருங்கக் கடவாய் என்பார்.

28. இஸ்றாயேல் ஆபத்திற்கஞ்சாமல் தனித்து வாசம் பண்ணுவான். யாக்கோப் திராட்ச ரசத்தையும் கோதுமையையும் விளைவிக்கிற பூமியை நோக்குவான். பனி மிகுதியால் வானம் மங்கிப் போகும்.

29. இஸ்றாயேலே நீ பாக்கியவான்! கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட சனமே, உனக்கு நிகரானவனார்? ஆண்டவர் உனக்குப் பரியும் கேடயமும், உன் மகிமையைக் காக்கும் பட்டயமுமாயிருக்கிறார். உன் சத்துருக்கள் உன்னை நிந்திப்பார்கள். நீயோ அவர்களுடைய கழுத்தை மிதித்து முறித்துப் போடுவாய்.