சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 31

பேராசைக்காரன், உலோபி, இவர்களுடைய ஏக்கம்.

1. செல்வங்களை விழிப்பாயிருந்து பாதுகாப்பது சரீரத்தை நலியச்செய்கிறது; அவற்றைப் பற்றிய கவலை தூக்கத்தை விரட்டிவிடுகிறது.

2. முன்கூட்டியே அடுத்து வரப்போவதை யோசிப்பது புத்தியை விலக்கி விடுகிறது; கடும் வியாதி ஆத்துமத்தை நிதானப்படுத்துகிறது.

3. செல்வந்தன் செல்வங்களைச் சேர்ப்பதில் உழைத்திருக்கிறான்; தான் இளைப்பாறும்போது அவன் தன் பொருட்களால் நிரப்பப்படு வான்.

4. ஏழை தன் வாழ்வில் தாழ்வான முறையில் உழைத்திருக்கிறான், இறுதியில் அவன் இன்னும் ஏழையாகவே இருப்பான். 

5. பொன்னை நேசிப்பவன் நீதிமான் ஆக மாட்டான்; கேட்டைப் பின்செல்பவன் அதனாலேயே நிரப்பப்படுவான்.

6. பொன்னைத் தேடியதால் அநேகர் வீழ்ச்சியுற்றனர்; அதன் அழகு அவர்களுடைய அழிவாக இருந்திருக்கிறது.

7. பொன்னுக்கு பலியிடுபவர்களுக்கு அது இடறுகல்லாக இருக்கிறது; அதை ஆவலோடு பின்செல்பவர்களுக்கு ஐயோ கேடு; மூடன் எவனும் அதிலேயே மடிவான்.

8. கறைதிரையற்றவனாகக் காணப்படும் செல்வந்தன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலும் பொக்கிஷங்களிலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான்.

9. நாம் புகழும்படி அப்படி இருப் பவன் யார்? ஏனெனில், தன் வாழ் நாளில் அற்புதமான காரியெங்களைச் செய்தான்.

10. அதனால் பரிசோதிக்கப்பட்டு உத்தமனாக்கப்பட்டவன் எவனோ அவன் நித்திய மகிமையைக் கொண் டிருப்பான்; அவன் மீறி நடந்திருக்கக் கூடும்; ஆனால் மீறி நடக்கவில்லை, தீயவற்றைச் செய்திருக்கக்கூடும், ஆனால் செய்யவில்லை.

11. ஆகையால் அவனுடைய பொருட்கள் ஆண்டவரில் நிலை யாக்கப்பட்டன; அர்ச்சியசிஷ்டவர் களின் சபை முழுவதும் அவன் தர்மங்களை அறிக்கையிடும்.

12. அறுசுவையான பதார்த்தங்கள் உள்ள பந்தியில் அமர்த்தப்பட்டிருக் கிறாயா? அதை உண்ண வாயைத் திறக்கும் முதல் ஆளாக இராதே.

13. நிறைய பதார்த்தங்கள் அதல் இருக்கின்றன என்று சொல்லாதே.

14. கொடியதான பார்வை தீயது என்று நினைத்துக்கொள்.

15. கண்ணைவிட அதிகக் கொடிய தாகப் படைக்கப்பட்டிருப்பது எது? ஆகையால் அது பார்க்கும்போது முகமெல்லாம் நனையக் கண்ணீர் சிந்தும்.

16. பொறாமையால் அவமானப் படுத்தப்பட்டு நீ வெட்கிப் போகாத படி, முதலில் உன் கையை நீட்டாதே.

17. பந்தியில் அவசரப்படாதே.

18. உன்னைக் கொண்டே உன் அயலானின் குணத்தையும் அறிந்து கொள். 

19. அதிகமாய்ச் சாப்பிடுவதால் நீ வெறுப்புக்கு ஆளாகாதபடி, மட்டுத் திட்டமுள்ள மனிதனாக, உனக்கு முன் வைக்கப்படுவனவற்றைப் பயன் படுத்து.

20. நாகரீகத்தை முன்னிட்டு, மற்றவர்களுக்கு முன்பே உண்பதை நிறுத்திவிடு. உன் பெயர் கெடாதபடி அதிகமாய்ச் சாப்பிடாதே.

21. நீ பலரோடு பந்தியமர்ந்தால், எல்லோருக்கும் முதலில் கையை நீட்டாதே; முதல் ஆளாக, பருகப் பானம் கேட்காதே.

22. நற்பழக்கங்களைக் கற்றவனுக்குக் கொஞ்ச இரசம் மிகவும் போதுமானதாது. அப்போது, உறங்குவது உனக்குச் சிரமமாக இருக்காது. எந்த வேதனையையும் உணர மாட்டாய்.

23. மட்டுத்திட்டமில்லாதவன் உறக்கமின்மை, பித்தம், வாயு ஆகியவற்றால் அவதிப்படுகிறான்.

24. மட்டாய்ச் சாப்பிடுகிறனோடு சுகமான, நலமான உறக்கம் இருக் கிறது. அவன் காலை வரை தூங்கு வான்; அவன் ஆத்துமமும் அவனுடன் சந்தோஷிக்கும்.

25. அதிகமாய்ச் சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்டால் நடுவில் எழுந்து வெளியே போய் வாந்தி செய்துவிடு, அது உனக்குச் சுகம் தரும்; அது உன் சரீரத்தின்மீது நோயைக் கொண்டு வராது.

26. என் மகனே! நான் சொல் வதைக் கேள், என்னை நிந்திக்காதே; கடைசியில் என் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பாய்.

27. உன் சகல செயல்களிலும் சுறுசுறுப்பாயிரு; வியாதி ஒன்றும் உனக்கு வராது.

28. எவன் தாராளமாய் உணவளிக் கிறானோ, எவனுடைய சத்தியத்தின் சாட்சியம் பிரமாணிக்கமுள்ளதாக இருக்கிறதோ, அவனை அநேக ருடைய உதடுகள் வாழ்த்தும்; 

29. உலோபித்தனமாய் உணவளிப் பவனுக்கு எதிராக ஊர் முறுமுறுக்கும். அவனது உலோபித்தனத்தின் சாட்சியம் உண்மையானது. 

30. மதுபானப் பிரியரிடம் சபதம் செய்யாதே. ஏனெனில் மது மிகப் பலரை அழித்திருக்கிறது.

31. அக்கினி உறுதியான இரும் பைப் பரிசோதிக்கிறது; அப்படியே, மிதமிஞ்சிப் பருகிய மதுவும் ஆங்காரி களின் இருதயங்களைக் கண்டிக்கும்.

32. மட்டாய்ப் பருகிய மது, மனிதருக்குத் தகுந்த சீவியம்; மிதமாக அதைப் பருகுவாயானால், தெளிவா யிருப்பாய்.

33. மதுவால் நலிந்தவனுடைய சீவியம் எதற்குப் பயன்படும்?

34. உயிரைப் போக்கடிப்பது என்ன? சாவு.

35. ஆதியிலிருந்து மனிதர்களைக் சந்தோஷமாக்க மது உண்டாக்கப் பட்டதே தவிர, மயக்கத்திற்காக அல்ல.

36. மிதமாக அருந்தப்படும் மது, ஆத்துமத்தினுடையவும், இருதயத் தினுடையவும் ஆனந்தம்.

37. மட்டான பானம் ஆத்துமத் திற்கும் சரீரத்திற்கும் ஆரோக்கியம்.

38. மிதமிஞ்சி சாப்பிடப்பட்ட மது, கோபம், ஆத்திரம், வெகு நஷ்டங்களுக்குக் காரணமாயிருக் கிறது.

39. மிதமிஞ்சி சாப்பிட்ட மது, ஆத்துமத்தின் கசப்பாக இருக்கிறது.

40. குடிவெறியின் வெப்பம் மூடனுக்கு இடறுகல்லாக இருந்து, அவனுடைய பலத்தைக் குறைத்து, காயங்களை உண்டாக்குகிறது.

41. மது பரிமாறப்படும் விருந்தில் உன் அயலானைக் கடிந்து கொள்ளாதே; அவனுடைய உல்லாசத்தில் அவனை நிந்திக்காதே.

42. கண்டிப்பின் வார்த்தைகளை அவனிடம் பேசாதே; திரும்பத் திரும் பக் கேட்டு அவனை நெருக்காதே.