இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 31

மோயீசன் ஜோசுவா என்பவனைத் தனக்குப் பதிலாளியாக நியமித்ததும்--ஏழாம் வருஷத்தில் வேதப்பிரமாணத்தை ஜனங்களுக்கு வாசிக்கும்படி ஆசாரியர்களுக்குக் கற்பித்ததும்--தேவன் மோயீசனுக்கு மரண அறிக்கையிட்டதும்--ஒரு பாடல் செய்யக் கட்டளை கொடுத்ததும்--வேத புஸ்தகம் காக்கும்படி மோயீசன் அதை லேவியருக்குக் கொடுத்ததும்--பெரியோர்கள் எச்சரிக்கப் பட்டதும்.

1. பின்னும் மோயீசன் போய் இஸ்றாயேலெல்லோருக்கும் பின்பரும் சமஸ்த வாக்கியங்களையும் சொன்னான்.

2.  அவன் அவர்களை நோக்கி: இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன். இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது. விசேஷம்: இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லையென்று கர்த்தர் என்னோடு சொல்லியிருக்கிறார்.

3. உன் தேவனாகிய கர்த்தரானவரே உன் முன்பாக நடந்து போவார். அவரே உனக்கு முன்னின்று அந்தச் சாதியாரையயல்லாம் சங்கரிப்பதினால் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய். கர்த்தர் சொன்னபடியே இங்கேயிருக்கிற ஜோசுவா உன் முன்பாக நடப்பான்.

4. கர்த்தரோ ஏற்கனவே அமோறையரின் அரசர்களான செகோன், ஓக் என்பவர்களுக்கும், அவர்களின் தேசத்திற்கும் அவர் செய்தது போல் இவர்களுக்கும் செய்து இவர்களையும் அழிப்பார்.

5. ஆகையால் கர்த்தர் அவர்களை உன் கைவசமாக்கின பிற்பாடு நான் உங்களுக்கு விதித்த கட்டளையின்படியே நீங்கள் அவர்களுக்குச் செய்யக் கடவீர்கள்.

6. வீரங்கொண்டு மனத்தைரியமாயிருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர்தானே உன்னை நடத்துபவர், அவர் உன்னை விடப் போவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றான்.

7. பிறகு மோயீசன் ஜோசுவாவை அழைத்து இஸ்றாயேலியர் எல்லோரும் பார்க்க அவனை நோக்கி: நீ பலங்கொண்டு மனத்திடனாயிரு. கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேனென்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்திற்கு நீ இந்த ஜனங்களை அழைத்துக் கொண்டு போய்த் திருவுளச் சீட்டுப் போட்டு அதை அவர்களுக்குள்ளே பங்கிடுவாய்.

8. உங்களை நடத்துபவராகிய கர்த்தரே உன்னோடு இருப்பாரல்லாதே அவர் உன்னை விடவும், கை நழுவவும் மாட்டாராகையால் நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

9. பிறகு மோயீசன் இந்த நியாயப் பிரமாணத்தை எழுதி அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவி புத்திரரான ஆசாரியர்களுக்கும் இஸ்றாயேலிலுள்ள பெரியோர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து,

10. அவர்களை நோக்கி: ஒவ்வொரு ஏழாம் வருஷத்திற்குப் பின்வரும் மன்னிப்பு வருஷத்திலே கூடாரப் பண்டிகையிலே,

11. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கும் ஸ்தானத்தில் இஸ்றாயேலியர் எல்லோரும் கூடிக் கர்த்தருடைய சந்நிதிக்கு வரும்போது நீ அவர்கள் கேட்க, அவர்களுக்கு முன்பாக இந்த நியாயப் பிரமாணத்தை வாசிக்கக் கடவாய்.

12. புருஷர்களும், ஸ்திரீகளும், பிள்ளைகளும், உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களுமாகிய பிரசையயல்லாம் ஒன்றாய்க் கூடிக் கேட்டுக் கற்றுக் கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த நியாயப் பிரமாண வார்த்தைகளையயல்லாம் கைக்கொண்டு அதுகளின்படி நடக்கத் தக்கதாகவும்,

13. அதை அறியாத அவர்களுடைய புத்திரர்களும் கேட்டு நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் வசித்திருக்கும் நாளெல்லாம் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படத் தக்கதாகவும், (ஜனத்தைக் கூட்டி அதை வாசிக்கக் கடவாயயன்றான்.)

14. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி: இதோ உன் மரண நாள் கிட்டினது. நாம் ஜோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி அவனை அழைத்துக் கொண்டு நீங்களிருவரும் ஆசாரக் கூடாரத்திலே வந்து நில்லுங்களென்றார். அப்படியே மோயீசனும் ஜோசுவாவும் போய் சாட்சியக் கூடாரத்தில் நின்றார்கள்.

15. கர்த்தர் கூடாரப் பிரவேசத்திலே தங்கிய மேகஸ்தம்பத்தில் தெரிசனமானார்.

16.  அப்போது கர்த்தர் மோயீசனை நோக்கி: இதோ நீ உன் பிதாக்களோடு (மரண) நித்திரை செய்யப் போகிறாய். இந்த ஜனங்கள் எழுந்துபோய்த் தாங்கள் குடியேறும்படி பிரவேசிக்கப் போகிற தேசத்தில் அவர்கள் அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி அங்கே அவர்கள் நம்மை விட்டுவிட்டு அவர்களோடு நாம் பண்ணின உன் உடன்படிக்கையை மீறுவார்கள்.

17. ஆகையால் அந்நாளில் நமது கோபம் அவர்கள்மேல் மூண்டு நாம் அவர்களைக் கைவிட்டு நம்முடைய முகத்தை அவர்களுக்கு மçற்போமாகையால் அவர்கள் அழிந்து போவார்கள். அநேகத் தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடங்கும். அந்நாளிலே அவர்கள்: தேவன் எங்களோடு இராததினாலன்றோ அத்தனை தீங்குகள் எங்களைப் பிடித்ததென்பார்கள்.

18. அவர்கள் அந்நிய தேவர்களைப் பின்பற்றிக் கட்டிக் கொண்ட எல்லா அக்கிரமங்களினிமித்தமே நாம் அந்நாளிலே நமது முகத்தை ஒளித்து வைப்போம்.

19. இப்பொழுது நீங்கள் பின்வரும் சங்கீதத்தை எழுதிக்கொண்டு, அதை இஸ்றாயேல் புத்திரருக்குப் படிப்பிக்க வேண்டும். அவர்கள் அதை மனப்பாடமாகக் கற்றுக் கொண்டு தங்கள் வாயால் பாடட்டும். இந்த சங்கீதமே இஸ்றாயேல் புத்திர ருக்குள் நமக்குச் சாட்சியமாக இருக்கக் கடவது.

20. உள்ளபடி நாம் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப் பண்ணின பிற்பாடு அவர்கள் புசித்துண்டு திருப்தியாகிக் கொழுத்துப் போயிருக்கும்போது அவர்கள் அந்நிய தேவர்களிடத்தில் திரும்பி அவர்களைச் சேவித்து நம்மைத் தூஷணித்து நமது உடன்படிக்கையை வியர்த்தமாக்குவார்கள்.

21.  ஆதலால் அநேகத் தின்மைகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடர்ந்து உபாதித்த பிற்பாடு அவர்களின் சந்ததியாரன் வாயில் மறதியாகப் போகாதிருக்கும் இந்தச் சங்கீதமே அவர்களுக்குச் சாட்சி மொழியாயிருக்கும். ஏனெனில் நாம் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் அவர்களை உட்படுத்துவதற்கு முன்னாகிய இப்பொழுதே அவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் இன்னதென்றும், அவர்கள் செய்யப் போகிறது இன்னதென்றும், நமக்கு நன்றாய்த் தெçயும் என்றருளினார்.

22. ஆகையால் மோயீசன் சங்கீதத்தை எழுதி இஸ்றாயேல் புத்திரருக்குக் கற்றுக் கொடுத்தான்.

23. பிறகு கர்த்தர் ஜோசுவாவென்னும் நூனின் குமாரனை நோக்கி: நீ வீரியங்கொண்டு மனத் தைரியமாயிரு. ஏனெனில் நீதானே இஸ்றாயேல் புத்திரருக்கு நாம் கொடுப்போமென்று சொல்லிய தேசத்திற்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு போவாய், நாம் உன்னுடன் இருப்போம் என்றார்.

24. மோயீசனோ இந்த நியாயப் பிரமாணத்தின் வாக்கியங்களை ஒரு புத்தகத்தில் எழுதி முடித்த பின்பு,

25. கர்த்தரது உடன்படிக்கையின் பெட்டகத்தைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி:

26. நீங்கள் இந்த நியாயப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அங்கே உனக்கெதிரான சாட்சியமாக இருக்கும்.

27. அதேதெனில், நான் உன் பிடிவாதக் குணத்தையும் உன் வணங்காக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன். இன்று நான் உயிரோடிருந்து உங்களுடன் சஞ்சரித்துத் திரிந்திருக்கையிலே நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினீர்களே; நான் மரணித்த பின்பு, எவ்வளவு அதிகமாய்க் கலகம் பண்ணுவீர்கள்!

28. உங்கள் கோத்திரங்களின்படியே சமஸ்த பெரியோர்களையும் சாஸ்திரிகளையும் கூட்டமாய்க் கொண்டு வாருங்கள். நான் அவர்கள் கேட்க இவ்வாக்கியங்களை வசனித்து அவர்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைப்பேன்.

29. அதேதெனில் என் மரணத்திற்குப் பிற்பாடு நீங்கள் சீக்கிரத்தில் அக்கிரமமாய் நடப்பீர்களென்றும் நான் உங்கட்குக் கற்பித்து வந்த மார்க்கத்தை விட்டு விலகுவீர்கள் என்றும் நீங்கள் கர்த்தருடைய சமூகத்திற் பொல்லாப்பானதைப் பண்ணி உங்கள் கைக்கிரிகையினாலே கர்த்தருக்குக் கோபம் வரச் செய்த போது கடைசி நாட்களில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடுமென்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொன்னான்.

30. ஆகையால் இஸ்றாயேல் சபையார் எல்லோருங் கேட்க மோயீசன் இந்தச் சங்கீதத்தின் வசனங்களை முடியும் வரைக்கும் செப்பத் தொடங்கினார்.