அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 30

அமலேக்கியரை தாவீது தண்டித்தல்

1. தாவீதும் அவனுடைய மனிதர் களும் மூன்றாம் நாள் சிசெலேகில் வந்து சேர்ந்ததற்கு முன் அமலேக்கியர் தென் புறத்துச் சீமையில் வந்து சிசெலேகைப் பிடித்து அதை அக்கினியால் சுட்டெரித் துப் போட்டு,

2. அதிலிருந்த ஸ்திரீகளையும் சிறிய வர்களையும் பெரியவர்களையும் பிடித்து ஒருவரையுங் கொன்று போடாமல் எல்லோரையுமே கூட்டிக் கொண்டு தங்கள் வழியே போய்விட்டார்கள்.

3. தாவீதும் அவனுடைய மனிதர் களும் அந்த ஊருக்கு வந்து அது நெருப் பினால் சுட்டெரிக்கப்பட்டதையும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டிருக்கிறதையும் பார்த்தபோது,

4. தாவீதும் அவனுடனிருந்த சனங் களும் அழுகிறதற்குக் கண்ணீர் அற்றுப் போகுமட்டும் சப்தமிட்டு அழுதார்கள்.

5. ழெஸ்றாயேலித்தாளாகிய அக்கி னோவாமும், கர்மேலில் நாபால் மனைவியாகிய அபிகாயிலுமான தாவீதி னுடைய இரண்டு மனைவிகளுஞ் சிறை பிடித்துக் கொண்டுபோகப்பட்டிருந் தார்கள்.

6. தாவீது மிகவும் துக்கப்பட்டிருந் தான். சகல சனங்களுந் தங்கள் குமாரர் கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேச மானதினால் அவனைக் கல்லெறியவேணு மென்றிருந்தார்கள். ஆனால் தாவீது தன் தேவனாகிய ஆண்டவரிடத்தில் நம் பிக்கை வைத்துத் திடங் கொண்டிருந் தான்.

7. அவன் அக்கிமெலேக்கின் குமார னும் ஆசாரியருமான அபியாத்தாரை நோக்கி: எப்போத்தை என்னிடத்தில் கொண்டுவாவென்றான்; அபியாத்தார் எப்போத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.

8. தாவீது கர்த்தரை நோக்கி: அந்தக் கள்ளர்களைப் பின்றொடர வேண்டுமா வேண்டாமா? நான் அவர்களைப் பிடிப் பேனோ இல்லையோவென்று கேட்டான். அதற்கு அவர்: பின்றொடர்ந்து போ; அவர்களைப் பிடித்துக் கொள்ளையைத் திருப்பிக் கொள்வாயென்றார்.

9. தாவீதும் அவனுடனிருந்த அறு நூறு மனிதர்களும் புறப்பட்டுப் பேசோர் ஓடை வரைக்கும் வந்து சேர்ந்தார்கள். சிலர் களையாயிருந்து அங்கு தங்கிவிட் டார்கள்.

10. தாவீதோ நானூறு பேர்களோடு கூடத் தொடர்ந்து போனான். உள்ளபடி இருநூறு பேர் விடாய்த்துப் போனபடி யல் பேசேர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோயிருந்தார்கள்.

11. எஜிப்த்தியனான ஒரு மனிதனை வழியில் கண்டு அவனை தாவீதினிடத்தில் வட்டி வந்தார்கள்; அவனுக்கு சாப்பிட அப்பத்தையுங் குடிக்க சலத்தையும், 

12. அத்திப்பழக்கூடையில் மிஞ்சின பழங்களையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையுங் கொடுத் தார்கள்; அவைகளை அவன் சாப்பிட்ட பின்பு அவனுயிர் அவனுக்குள் திரும்ப வந்தது. இராப்பகல் மூன்று நாளாய் அவன் அப்பம் சாப்பிடாமலுந் தண்ணீர் குடிக்காமலுமிருந்தான்.

13. பிறகு தாவீது அவனை நோக்கி: நீ எவனுடையவன்? எங்கிருந்து வருகி றாய்? எங்கு போகிறாய்? என்று கேட் டான். அதற்கு அவன்: நான் எஜிப்த்திய வாலன். ஒரு அமலேக்கிய மனிதனுடைய வேலைக்காரனாயிருக்கிறேன். மூன்றாம் நாளில் நான் வியாதியாய் விழுந்தபோது என் எஜமான் என்னை விட்டுவிட்டான்.

14. நாங்கள் தான் அல்லோ கேரேத் துக்குத் தென்னாட்டின் மேலும், யூதாவின் மேலும், காலேபுக்குத் தென் புறத்தின்மேலும் படை எடுத்துச் சிசெலேகை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.

15. தாவீது அவனைப் பார்த்து: அந்தத் தண்டினிடத்திற்கு என்னைக் கூட்டிக்கொண்டு போக உன்னால் ஆகுமாவென்று கேட்டதற்கு அவன்: நீர் என்னைக் கொல்லுகிறதில்லை என்றும், என் எஜமான் கையில் ஒப்புக்கொடுக்கிற தில்லையென்றுந் தேவன் பேரால் எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தால் நான் உம்மை அந்தத் தண்டினிடத்துக் குக் கூட்டிக் கொண்டு போவேனென் றான். தாவீது அவனுக்குச் சத்தியம் பண்ணினான்;

16. அவன் இவனைக் கொண்டுபோய் விட்டபோது அதோ அந்தச் சனங்கள் வெளியில் எவ்விடத்துந் தரையிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் குடித்து பிலிஸ்தியர் தேசத்திலும் யூதா தேசத்திலும் எடுத்துவந்த கொள்ளைப் பறி பொருள்களுக்காக ஒரு திருப் பண் டிகையைப் போல் கொண்டாடிக் கொண் டிருந்தார்கள்.

17. தாவீது அன்று மாலை துவக்கி மறுநாள் மாலை வரைக்கும் அவர்களை முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேலேறி ஓடிப்போன நானூறு வாலர்கள் தவிர அவர்களில் வேறொருவனுந் தப்ப வில்லை.

18. தாவீது அமலேசித்தர் கொண்டு போனவைகளையெல்லாம் மீட்டுக் கொண்டான். தன் இரண்டு பெண்சாதி களையும் விடுவித்தான்.

19. அவர்கள் கொள்ளையிட்டுக் கொண்டுவந்த எல்லாவற்றிலுஞ் சிறிய தும் பெரியதுங் குமாரருங் குமாரத்தி களும் பறிபொருளெல்லாமும் ஒன்றுங் குறையாமல் மீட்கப்பட்டது. அதெல் லாவற்றையுந் தாவீது திருப்பிக் கொண்டு வந்தான்.

20. அவன் ஆடு, மாடு முதலிய மிருக ஜீவன்களையெல்லாம் பிடித்துக் கொண்டு தனக்கு முன்னாலே ஓட்டி னான். சனங்கள் இது தாவீதின் கொள் ளையென்று சொல்லிக் கொள்வார்கள்.

21. களைத்து விடாய்த்துப் போனதி னாலே தாவீதைப் பின்செல்லக்கூடாமல் நின்றுபோய் அவன் கட்டளைப்படி பேசோர் ஆற்றண்டையில் தங்கியிருந்த இருநூறு மனிதர்களிடந் தாவீது வந்து சேர்ந்தபோது இவர்கள் அவனுக்கும் அவனுடனிருந்த சனங்களுக்கும் எதிர்ப் பட்டு வந்தார்கள். தாவீது அவர்களை அணுகி அவர்களோடு சமாதானமாய்ப் பேசிக் கொண்டான்.

22. ஆனால் தாவீதைப் பின்செனறு வந்த மனிதர்களில் எவர்கள் தேவ பயமில்லாத துஷ்டர்களாயிருநதார் களோ அவர்கள் கலகமாய்ப் பேசி: அவர்கள் எங்களுடன் வராதபடியால் நாங்கள் திருப்பிக் கொண்ட கொள் ளைப் பொருட்களில் ஒன்றுங் கொடுக்க மாட்டோம். அவர்களில் ஒவ்வொரு வனுந் தன் தன் பெண்சாதியையும், தன் தன் பிள்ளைகளையுமே அழைத்துக் கொண்டு போவது போதுமென்றார்கள்.

23. அதற்குத் தாவீது: என் சகோ தரரே, ஆண்டவர் நம்மைக் காப்பாற்றி நமது மேல் பாய்ந்து விழுந்திருந்த அந்தத் திருடர்களை நமது கையில் ஒப்புக் கொடுத்தாரே. ஆண்டவர் நமக்குக் கொடுத்தவைகளைப் பற்றி இப்படிச் செய்ய வேண்டாம்.

24. இது விஷயத்திலே உங்கள் சொற் கேட்க யாருஞ் சம்மதிக்க மாட்டார்கள். சண்டைக்குப் போனவர்களுக்கும், தட்டு முட்டு முதலிய இரஸ்துகளைக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வித்தியாச மில்லாமல் சமமான பங்கு இருக்கும் என் றான்.

25. உள்ளபடி பூர்வீகந் துவக்கி அப்படியே நடந்து வந்தது. அது இந்நாள் பரியந்தம் இஸ்றாயேலருக்குள் ஒரு சட்டமும் பிரமாணமுமாக ஸ்தாபித்து நிரூபிக்கப்பட்ட மாமூல்.

26. தாவீது சிசெலேகுக்கு வந்தபோது அவன் கொள்ளையாடின பொருட் களிலே சிலவற்றை எடுத்துத் தன் பந்துக் களாகிய யூதாவின் மூப்பர்களுக்கு அனுப்பி: கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பாகமென்று சொல்லச் சொன்னான்.

27. மேலும் பெட்டேலிலிருந்தவர் களுக்கும், தெற்கே ராமாத்தாவிலிருந் தவர்களுக்கும், ஜேத்தேரிலிருந்தவர் களுக்கும்,

28. அரோயேரிலிருந்தவர்களுக்கும், செப்பாமோத்தில் இருந்தவர்களுக்கும், எஸ்தாமோவிலிருந்தவர்களுக்கும், 

29. இராக்காலிலிருந்தவர்களுக்கும், ஜெராமேயேல் பட்டணங்களிலிருந்தவர் களுக்கும், சேனிப் பட்டணங்களிலிருந் தவர்களுக்கும், 

30. அரமாவிலிருந்தவர்களுக்கும், ஆசான் ஏரியண்டையில் இருந்தவர் களுக்கும், அத்தாக்கிலிருந்தவர்களுக் கும், 

31. எப்ரோனிலிருந்தவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் வாசம் பண்ணின இடங்களிலிருந்த மற்று முள்ளோர்களுக்குந் தாவீது அவ்வித மாகவே வெகுமானங்களை அனுப் பினான்.