அபாக்கூக் ஆகமம் - அதிகாரம் - 3

அபாக்கூக்கின் மன்றாட்டு.

1. அறியாக் குற்றங் குறைகட்காக அபாக்கூக் தீர்க்கவசனர் செய்த மன்றாட்டு.

2. ஆண்டவரே! உமது வாக்கியத் தைக் கேட்டு யான் பயப்பிராந்தி கொண்டேன்; ஆண்டவரே, உமது மகத்தான கருமத்தைக் காலங்கள் நடுவில் நிறைவேற்றியருளும்; அதற்கு உயிர் பிரதிஞ்ஞை செய்தருளும். வருடங்கள் நடுவில் அஃதை விளங்கச் செய்யும்; நீர் கோபதாபங் கொள்ளினும், உமது காருண்ணியத்தை நினைத்தருளுஞ் சுவாமீ.

* 2-ம் வசனம். உமது வாக்கியத்தைக் கேட்டு--நீர் எனக்கு அறிவித்தவைகளைக் கேட்டு.

3. ஆண்டவர் தென்திசையினின்று எழுந்தருளுவர்; பரிசுத்தர் பாரான் பர்வதத்தினின்று (தோன்றுவர்;) வான மண்டலங்கள் அவருடைய மான்மியத்தால் சூழப்படுவன; பூதலமே, அவருடைய புகழ் பூரித்து நிற்கும்.

4. ஆண்டவருடைய சோதியானது (சூரிய) கிரணம் போலிருக்கும்; அவருடைய கரங்களில் (வல்லபக்) கொம்பு விளங்கும்; அதிலேதான் அவருடைய ஞக்துவம் மறைந்திருக்கின்றது.

* 4-ம் வசனம். கொம்பு--வல்லபம்.

5. மரணம் அவர் சமுகத்து முன் நடக்கும்; அலகை அவருடைய பாதாரங்கள் முன்னே செல்லும்.

6. அவர் நின்றனர், நிலத்தை அளவிட்டனர், பார்த்தனர், சனங்களைப் பாகுபோல் உருகச் செய்தனர்; காலங் கண்ட பர்வதங்கள் நிர்த்தூளியாயின, பார்பூத்த குன்றுகளும் (நித்திய கடவுளரது) பிரசன்னத்து முன் சிரம் வணங்கின.

7. (இஸ்றாயேலின்) பாப தண் டனையாக எத்தியோப்பியரின் கூடாரங்கள் (வந்து அமையக்) கண்டேன்; (ஆனால் அந்த) மதியான் வாளிகள் (கொஞ்சத்துள்) கலக்கடி கொள்வன.

8. ஆண்டவரே! (உமது பிரசையின்) இரட்சண்ணியார்த்தமாக, உமது அசுவங் கள்மீது ஆரோகணித்து, உமது இரதங்கள் (முன்னஞ் செங்கடலைக் கடக்கச் செய்த) நீர், நதிகள் மீதோ கோபங் கொண்டது; ஆறுகள் மீதோ உமது சினம் (கிளம்பினது;) அல்லது சமுத்திரத்தின் மீதோ உமது சீற்றம் (பொங்கினது;) (உமது பிரசையின் சத்துராதிகள் பேரி லன்றோ?)

9. (இஸ்றாயேல்) கோத்திரங்களுக்கு நீர் ஆணையிட்டுச் செப்பலுற்ற வாக்கியத்தின் பொருட்டு, உமது கோதண்டத்தை எடுத்து நாணேற்றிப் (பாணந் தொடுப்பீர்;) (அதற்காகக் கனகான்) தேசத்து நதிகளைப் பிரிப்பீர்.

10. மலைகள் உம்மைப் பார்த்து கற்பங் கலங்கி நின்றன; சலபாதாளம் இடைந்து நின்றது; கெடிலந் தன் குரல் சப்தந் தந்தது; தன் கரங்களை (உம்மை நோக்கி) உயர்த்துவதுபோல் (சுவரென) நின்றது.

11. சூரிய சந்திராதிகள் தம் வானியில் (உமது ஆக்கியாபனைக்கு அஞ்சி) நின்று விட்டன; அவைகள் உமது அஸ்திராயுத வெளிச்சத்திலும், இடிகளைக் கக்கும் உமது வல்லபத்தின் ஒளியிலும் நடை கொள்வன.

* 11-ம் வசனம். யோசுவே காலத்தில் நடந்ததையும் காண்க.

12. உமது கோபாக்கிரமத்தில் பூதலத் தைக்காலால் மிதிப்பீர்; உமது சீற்றத்தில் சனங்களைப் பீதி கொள்ளச் செய்வீர்.

* 12-ம் வசனம். யோசுவேயின் காலத்தில் நடந்ததையும் காண்க.

13. (எஜிப்த்து நின்று முன்னம்) உமது பிரசையை இரட்சிக்க உமது அபிஷேகம் பெற்ற (மோயீசன்) சமேதராய் நீர் புறப்பட்டீர்; துரோகியின் வீட்டு தலைப் (பிள்ளையை) அடித்தீர்; அவ்வீட்டு அஸ்திவாரத்தை நிலை குலையப் புரட்டி விட்டீர்.

14. அவனுடைய செங்கோலையும், சுழல்காற்றுத் துரும்பென என்னை நாசனஞ் செய்யவெழுந்த அவனுடைய போர்வீரர் தளபதிகளையுஞ் சபித்தீர்; அவர்களுடைய சந்தோ­ம், அகதியை அந்தரங்கத்தில் விழுங்குவானுடையது போன்றிருந்தது.

15. (அவர்கள் எண்ணங்களுக்கு மாறாக) நீர் சமுத்திரத்து நடுவில் சலங்களின் (அடி) சேற்றில் உமது அசுவங்களுக்குப் பாதை விடுத்தீர்.

16. (நிற்க, உமது பிரசைக்கு விரோத மாய் நீர் உரைத்ததை) யான் கேட்க என் குடல் குழம்பிற்று; என் அதரங்கள் சப்த மிழந்து விடவிடத்தன; (இவ்வித துன்பம் வராமுன்) என் எலும்புகடோறும் அழுகலூர்ந்து உட்புறத்தை உலர்த்தினால் கஸ்தி சாகரத்தின் ஞான்றில் யான் இளைப்பாறவும், ஒன்றுகூடியிருக்கும் எனது பிரசையிடத்தில் கிளம்பிப் போகவுங் கூடுமாயிருக்கும்.

17. ஏனெனில், (அக்காலையில்) அத்தி புஷ்பிக்காது; திராட்சக் கொடிகள் தளிர் கொள்ளா; ஒலீவ் மரம் கனி மோசஞ் செய்யும்; வயல்கள் தானியந் தராது; ஆடின்றி மந்தை வெறுமை யாகும்; தொழுவங்களில் மாடு கன்றுகளிரா.

18. யானோ ஆண்டவரில் சந்தோஷங் கொண்டாடுவேன்; என் இரட்சகராகிய தேவனின் அக்களிப்பு கொள்வேன்.

19. என்பிரான் ஆண்டவர் என் ஞக்துவமாயிருப்பார்; மான் உடைத்தானவைபோல் எனக்குக் கால்களை அமைப்பீர்; என்னை வெற்றி (வாகை)யனாய்க் கீத கோஷத்தோடு எமது பர்வதங்கண்மீது கூட்டிப்போவர்.


அபாக்கூக் ஆகமம் முற்றிற்று.