இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உபாகமம் - அதிகாரம் 29

தேவனுக்கும் இஸ்றாயேலியருக்கும் செய்யப்பட்ட உடன்படிக்கை உறுதி பண்ணப் பட்டது--அந்த உடன்படிக்கையை மீறி நடக்கிறவர்களுக்கு வரும் கேடுகள்.

1. ஒரேபிலே இஸ்றாயேல் புத்திரரோடு பண்ணின உடன்படிக்கையைத் தவிர மோவாபிய தேசத்திலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணக் கர்த்தர் மோயீசனுக்குக் கட்டளையிட்டார். அதன் வசனங்கள் பின்வருமாறு:

2. மோயீசன் இஸ்றாயேல் எல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: எஜிப்த்து தேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பரவோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய தேச முழுவதுக்கும்

3. கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும் காண்பித்த மகத்தான அடையாளம் முதலிய அற்புதாதிசயங்களையும் கண்டீர்களே.

4. ஆகிலும் உணரத்தக்க இருதயத்தையும் காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க செவிகளையும் கர்த்தர் இந்நாள் வரைக்கும் உங்களுக்குத் தந்தாரில்லை.

5-6. (அவர் உங்களை நோக்கி:) நாம் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று நீங்கள் அறியத்தக்கதாக நாற்பது வருஷம் அளவும் உங்களை வனாந்தரத்திலே நடத்தி வந்தோம். அதற்குள்ளே உங்கள் வஸ்திரங்கள் பழசாய்ப் போனதுமில்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழுதாய்ப் போனதுமில்லை. நீங்கள் அப்பஞ் சாப்பிட்டதுமில்லை. திராட்ச இரசம் முதலிய மதுவைக் குடித்ததுமில்லை.

7. பிறகு நீங்கள் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்த போது ஏயஸபோனின் அரசனான செகோனும், பாசானின் அரசனான ஓகும் நம்மோடு யுத்தம் பண்ணப் புறப்பட்டார்கள். நாம் அவர்களை முறிய அடித்து,

8. அவர்களுடைய தேசத்தைப் பிடித்து ரூபன், காத் கோத்திரங்களுக்கும் மனாசே பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாய்க் கொடுத்தோம்.

9. ஆகையால் நீங்கள் செய்ய வேண்டிய தைக் கருத்தறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக.

10. இன்று உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும், உங்கள் வமிசங்களும், பெரியோர்களும், சாஸ்திரிகளும், இஸ்றாயேலின் சகல புருஷர்களும்,

11. உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், விறகுக்காரனும், தண்ணீர்க்காரனும் நீங்கலாக உங்கள் பாளையத்திலிருக்கிற அந்நியனுமாகிய நீங்கள் சர்வ ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிறீர்களே!

12. (என்னத்திற்கென்றால்) நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும், இன்று அவர் உன்னோடு பண்ணுகிற அவருடைய ஆணை உறுதிக்கும் நீ உட்கையாவதற்கும்,

13. அவர் உனக்குச் சொன்னபடி யேயும் உன் பிதாக்களாகிய அபிரகாம், இசாக், யாக்கோப் என்பவர்களுக்கு ஆணையிட்டருளினபடியேயும், அவர் உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்தித் தாம் உனக்குத் தேவனாக இருப்பதற்குந்தானேயன்றோ?

14. நான் இவ்வுடன்படிக்கையையும் இந்த ஆணையின் உறுதியையும் உங்களோடு மாத்திரமல்ல,

15.  ஆனால் இவ்விடத்தில் ஆஜராயிருக்கிற சமஸ்தபேர்களோடேயும் இங்கே நம்மோடேயிராத பேர்களோடேயும் அதைப் பண்ணுகிறேன்.

16. உள்ளபடி நாம் எஜிப்த்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் நடந்து வந்த இடங்களிலிருந்த சாதிகளின் நடுவிலே நடந்து வந்ததையும், அப்பொழுது,

17. அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்கள் கும்பிட்டு ஆராதிக்கிற மரமும், கல்லும், வெள்ளியும் பொன்னுமாகிய நரகலான விக்கிரகங்களையும் நீங்கள் கண்ணாலே கண்டீர்களே.

18. ஆகையால் அநத ஜாதிகளின தேவர்களைச் சேவிக்கத் தக்கவர்களென்று நம் தேவனாகிய கர்த்தரை விட்டு மறுதலித்த மனதையுடைய ஒரு புருஷனாகிலும், ஒரு ஸ்திரீயயன்கிலும், ஒரு குடும்பமாவது,ஒரு வம்ஸமாவது உங்களில் இராதபடிக்கும் உங்களுககுள்ளே பித்தையும் கைபபையும் விளைவிக்கத் தகக வேர்போலொத்தவர்கள் இராதபடிக்கும் பாருங்கள்.

19. சிலவேளை அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வசனங்களைக் கேட்ட பிற்பாடு தன்னைத்தானே நோக்கி: நான் என் மன இஷ்டப்படி அக்கிரம வழியில் எவ்வளவுதூரம் நடந்தாலும் எனக்கினி பயமில்லையயன்று வீண் எண்ணங் கொண்டு சொன்னாலும் சொல்லலாம். அது உண்டானால் மழை நீரைக் குடிக்க விரும்பும் (வேர்) வெறிக்கக் குடித்த வேராலே பட்சிக்கப் படுவதற்கொக்கும்.

20. அப்படிப்பட்டவன் மேல் கர்த்தர் இரங்க மாட்டார். அவருடைய கோபாவேசமும் எரிச்சலும் அவன்மேல் அதிகரிய புகையைப் புகையக் கடவதாக! இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லாச் சாபங்களும் அவன் மேல் விழுந்து நிற்கவும் கர்த்தர் அவனுடைய பேரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடவுங் கடவாராக.

21. அந்த நியாயப் பிரமாணப் புத்தகத்திலும் இந்த உடன்படிக்கையிலும் எழுதியிருக்கிற சாபங்களின்படியே (கர்த்தர்) இஸ்றாயேலின் கோத்திரங்களெல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப் போடக் கடவாராக.

22. அப்பொழுது உங்களுக்குப் பின்வரும் தலைமுறைப் பிள்ளைகளும், இவர்களிடத்தில் காலக்கிரமப்படி பிறக்கும் சந்ததியார்களும், தூரதேசத்தினின்று வரும் அந்நியர்களும், கர்த்தர் இந்தத் தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் கண்டு,

23. கர்த்தர் தம் கோபாவேசத்திலும் உக்கிரத்திலும் சொதோம், கொமோர், ஆதமா, செபோயீங் என்கிற பட்டணங்களை அழித்துக் கவிழ்த்துப் போட்டது போல இந்தத் தேசத்தின் நிலங்கள் விதைப்பும் விளைவுமில்லாதிருக்கும்படி அதன்மேல் கந்தகத்தையும் உப்பையும் பெய்வித்துப் பாழாக்கி விட்டதையும் கண்டு,

24. எல்லாச் சனங்களும்: கர்த்தர் இந்தத் தேசத்தை ஏன் இப்படித் தண்டித்தார்? இந்த மகா எரிவந்த கோபம் அவருக்கு ஏன் வந்தது? என்று வினவ,

25. அதற்குச் சொல்லப் படும் மறுமொழியாவது: கர்த்தர் அவர்களை எஜிப்த்து தேசத்தினின்று இரட்சித்தபோது அவர்கள் பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப் போய்,

26. தாங்கள் அறிந்திராத தங்களுக்குப் பாத்தியமில்லாத அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களைத் தொழுதார்கள்.

27. ஆனபடியினாலே கர்த்தர் கோபம் மூண்டவராகி இந்தப் புத்தகத்திலே எழுதப்பட்ட இந்தச் சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின் மேல் வரப் பண்ணினார்.

28. அவர் தம்முடைய கோபத்தினாலும், உக்கிரத்தினாலும் மிகுந்த எரிச்சலினாலும் அவர்களைத் தங்கள் தேசத்திலிருந்து துரத்தி விட்டு, இந்நாளில் எண்பித்திருக்கிறது போல, அவர்களை அந்நிய தேசத்திலெறிந்து விட்டாரென்று மறுவுத்தாரஞ் சொல்லப் படும்.

29. மறைவான வர்த்தமானங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ நாம் இந்த நியாயப் பிரமாணத்தின் வசனங்களின்படியயல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றும் உரியவைகள்.