அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 28

சவுல் குறி கேட்டது.

1. அந்நாட்களில் சம்பவித்தது என்ன வென்றால்: இஸ்றாயேலருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணப் பிலிஸ்தியர் தங்கள் படைகளைக் கூட்டினார்கள். ஆக்கீசு தாவீதை நோக்கி: நீயும் உன் மனிதர் களும் என்னோடு கூட போர்க்களத்துக்கு வர வேண்டுமென்று அறியக்கடவா யென்றான்.

2. அதற்குத் தாவீது: உம்முடைய தாசன் செய்யப்போகிறதை அறிந்து கொள்வீரென்று சொன்னான். அப் பொழுது ஆக்கீசு தாவீதை நோக்கி: இதற் காக நான் உன்னை எந்நாளும் எனக்கு மெய்க் காவலனாக ஸ்தாபிப்பேனென்று சொன்னான்.

3. இது கிடக்கச் சமுவேல் மரணித் திருந்தார்; ஜனங்களெல்லாம் அவருக் குத் துக்கங் கொண்டாடி அவர் நகரமா கிய ராமாத்தாவில் அவரை அடக்கம் பண்ணியிருந்தார்கள்; சவுல் சூனியக் காரரையும், குறி சொல்பவர்களையுந் தேசத்திலிராதபடிக்குத் துரத்தியிருந் தான்.

4. பிலிஸ்தியர் கூடி வந்து சூனா மிலே பாளையம் இறங்கினார்கள்; சவுலும் இஸ்றாயேல் எல்லாரையுஞ் சேர்த்துக் கொண்டு கெல்போயேயில் வந்து பாளையம் இறங்கினான்.

5. சவுல் பிலிஸ்தியரின் பாளையத் தைப் பார்த்துப் பயந்தான். அவனுள்ளம் மெத்தவுந் திகில் அடைந்தது;

6. அவன் கர்த்தரை யோசனை கேட் டான்; ஆனால் கர்த்தர் அவனுக்குக் கனவுகளினாலாவது, குருப்பிரசாதிகளா லாவது, தீர்க்கத்தரிசிகளாலாவது மறு மொழி சொன்னதில்லை.

7. அப்பொழுது சவுல் தன் ஊழியர் களை நோக்கி: நீங்கள் ஒரு பித்தொ னிசென்னும் குறிக்காரிகளில் ஒருத்தி யைத் தேடிப் பாருங்கள்; நான் அவளிடம் போய் அவ்விடத்தில் யோசனை கேட் பேனென்றான் அவன் ஊழியர்கள் அவனை நோக்கி: எந்தோரில் அவ்விதக் குறிகாரி ஒருத்தி இருக்கிறாளென்று சொன்னார்கள்.

8. அப்பொழுது அவன் வேஷம் மாறி வேறு உடைகளை உடுத்திக் கொண்டு அவனும் அவனோடு கூட இரண்டு மனிதர்களும் போனார்கள். அவர்கள் இராத்திரியிலேதானே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள். சவுல் அவனை நோக்கி: நீ பித்தோனைக் கேட்டு எனக்குக் குறிசொல்லு; அல்லது நான் எவனைச் சொல்வேனோ அவனை எழும்பி வரச் செய்யென்றான்.

9. அந்த ஸ்திரீ அவனை நோக்கி: சவுல் குறி சொல்லுகிறவர்களையும், சூனியக்காரர்களையுந் தேசத்திலிராத படிக்குச் செய்ததெல்லாம் உமக்குத் தெரி யும். அவர்களை அழித்தொழித்தானென் றும் உமக்குத் தெரியும். என்னைக் கொல்லத்தானே நீர் என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர் என்றாள்.

10. அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்தைப் பற்றி உனக்கு யாதொரு பொல்லாப்பும் வராதென்று கர்த்த ருடைய ஜீவனின்மேல் ஆணையிடுகிறே னென்றான். 

11. அதைக் கேட்டு அந்த ஸ்திரீ: உமக்கு நான் ஆரை எழும்பி வரச் செய்ய வேண்டுமென்றதற்கு, அவன்: சமுவேலை எழுப்பு என்று சொன்னான்.

12. அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்ட மாத்திரத்தில் உரத்த சத்தமாய்க் கூவி, சவுலை நோக்கி: நீர் சவுலாச்சுதே; ஏன் எனனை மோசம் பண்ணினீர் என்றாள்.

13. இராசா அவளைப் பார்த்து: பயப் படாதே. நீ என்னத்தைக் கண்டா யென்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ சவுலை நோக்கி: தேவர்கள் பூமியினின்று எழுந்துவரக் கண்டேனென்றாள்.

14. அவருடைய ரூபம் என்னவென்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: ஒரு விருத்தாப்பியனான ஒருவர் எழுந்து வந்தார். அவர் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறாரென்றாள்; அவர் சமுவேலென்ற சவுல் கண்டுபிடித்து முகந் தரையில் படக் குனிந்து வணங்கினான்.

15. சமுவேல் சவுலை நோக்கி: நான் எழுந்து வரும்படி நீ என்னைத் தொந்த ரவு பண்ணினதென்னவென்று கேட்டார். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக் கப் பட்டிருக்கிறேன், பிலிஸ்தியரும் என் மேல் சண்டைக்கு வந்தார்கள்; தேவனும் என்னை விட்டு அகன்று போனார். தீர்க்கத்தரிசிகளின் வழியாலாவது, சொப்பனங்களாலாவது அவர் எனக்குப் பதில் சொல்ல மனதில்லாதே போனார்; ஆனது பற்றி நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படி உம்மை அழைத்தேனென்றான்.

16. அதற்குச் சமுவேல்: ஆண்டவர் உன்னைவிட்டு விலகி உன் எதிரியின் பட்சத்தில் இருப்பதால் நீ என்னைக் கேட்க வேண்டியதென்ன?

17. கர்த்தர் என் மூலியமாய் உனக்குச் சொன்னபடியே செய்வார்; உன் இராச் சியத்தை உன் கையினின்று பறித்துக் கிழித்துப்போட்டு அதை உன் பந்து வாகிய தாவீதுக்குக் கொடுப்பார்;

18. நீ கர்த்தருடைய சொல் கேளாம லும், அமலேக்கின் மேல் அவருக்கிருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினாலே உனக்கு நேரிட்ட துன்பமெல்லாங் கர்த்தரே இன்று உனக்குச் செய்தார்.

19. இன்னமுங் கர்த்தர் உன்னோடு கூட இஸ்றாயேலரையும் பிலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரர்களும் என்னுட னிருப்பீர்கள். இஸ்றாயேலரின் பாளை யத்தையுங் கர்த்தர் பிலிஸ்தியர் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றார்.

20. அதைக் கேட்ட மாத்திரத்தில் சவுல் நெடுஞ்சாண்கிடையாய்த் தரையில் விழுந்து கிடந்தான். சமுவேலின் வார்த் தைகளைப் பற்றிப் பயந்திருந்தான். மேலும் அவன் அன்று நாள் முழுதும் சாப்பிடாதிருந்தபடியால் பலவீனமா யிருந்தான்.

21. சவுல் மிகவுங் கலங்கியிருக்கிற தைக் கண்டு அந்த ஸ்திரீ அவன் கிட்ட வந்து அவனை நோக்கி: இதோ உம்மு டைய அடியாள் உமது சொல்கேட்டு என் பிராணனை ஆபத்துக்கு உட்படுத்தி நீர் சொல்லிய வார்த்தைக்குக் கீழ்ப்படிந் தேன். 

22. இப்போது நீரும் உமது அடியா ளுடைய வார்த்தைகளைக் கேளும்; நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக் குள்ளிருக்கும்படி நான் உமக்கு முன்பாக கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசியுமென்றாள்.

23. அவன் தடுத்து சாப்பிடமாட்டே னென்றான். ஆனால் அவன் ஊழியர் களும், அந்த ஸ்திரீயும் அவனை மெத்த வும் வருந்திக் கொண்டதினாலே கடைசியாய் அவன் அவர்கள் வார்த்தை கேட்டுத் தரையிலிருந்தெழுந்து கட்டி லின்மேல் உட்கார்ந்தான்.

24. அந்த ஸ்திரீ ஒரு கொழுத்த கன்று குட்டியைத் தன் வீட்டிலே வைத்திருந் தான். சீக்கிரம் போய் அதை அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டு,

25. சவுலுக்கும் அவன் ஊழியர்களுக்கும் முன்பாக வைத்தான். சாப்பிட்ட பின்பு அவர்கள் எழுந்து அன்று இரா முழுதும் நடந்தார்கள்.